சாணக்கிய நீதி – 6


தம் குழந்தைகள் நல்லபடியாக வளரவேண்டும் என விரும்புபவர் தமது குழந்தகள் தான்தோன்றித்தனமாகச் செல்லவிடக்கூடாது.  அவர்கள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்கள் போக்கில் செல்லவிடாது நல்வழிப்படுத்தி நடத்திட வேண்டும். மிகவும் மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.  ஆகவே, எதையும் ஒரு கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது

இலக்கிய இன்பம்


எப்போது நட்பு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதோ, குகன் அதனைப் பற்றிக்கொண்டான். ராமனுக்காக எதையும் இழக்கத் தயாராக நின்ற நட்பு அவனுடையது.  நட்பு எனும் சொல் அவனுடைய உள்ளத்தில் ஆணிபோலப் பதிந்து மாயம்செய்துவிட்டது. ராமனிடமிருந்து அவன் எதையும் வேண்டவில்லை; எதிர்பார்க்கவுமில்லை. அவனுடைய நட்பு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது.

சாணக்கிய நீதி-3


ஆற்றை மனிதர் அளவுக்கு உயர்த்தி ஐவராகக் கணக்கிடுகிறார், சாணக்கியர்.
மக்கள் நோய்நொடியின்றி வாழவேண்டும். அதற்கு
மருத்துவரின் சேவை இன்றியமையாதது.  இரண்டாண்டுகளாக கோவிட் மக்களை வருத்தெடுத்துக் கொல்லும்போது, மக்களுக்கு உதவிசெய்து, பிணிநீக்கியவர் மருத்துவர்தாமே!  அவர்களின் உழைப்பும், பரிவும், தன்னலமற்ற சேவையும் இல்லாதுபோனால் எத்தனை கோடி மக்கள் மரித்திருப்பர்?

திரிவேணி சங்கமம்


சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும். திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும். அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

இலக்கிய இன்பம் – 4


மீனாட்சி பாலகணேஷ்
நான் உண்மையாகக் கூறுகிறேன் ஐயனே! எனக்கு எதுவுமே பொருட்டல்ல; நானும் என் மக்களும் உனக்கு ஊழியம் செய்வோம். உனக்கு உண்ணத் தேனும் தினைமாவும் உள்ளது; நாய் போலும் விசுவாசமான துணையாக நானிருக்கிறேன்; நீ திரிந்திடக் காடு உள்ளது. நீராடிப் பூசனைகள் செய்ய கங்கை உள்ளது அல்லவா? நான் இவ்வுலகில் உள்ளவரை உன்னை நன்கு பார்த்துக்கொள்வேன்; நீர் அமைதியாக இங்கு வாழலாம்

கையாலாகாதவனாகிப்போனேன் — 6


ஒரு அரிசோனன்
” நீங்கள் ஜப்பானியராகத்தான் இருக்கவேண்டும்!” என்று ஜேம்ஸ் பான்ட் பாணியில் ஏதோ ஒரு இரகசியத்தைக் கண்டுபிடித்ததுபோலச் சொன்னேன்.

பழையபடியும் இல்லை என்பதுபோலத் தலை ஆடியது.  ஆனால் அவர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.  “நான் ஒரு கொரியன்.” என்று பதில் சொன்னார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது.  காரணம்சொல்ல மறுத்துவிட்டார்.  சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

வாழ்க்கை எனும் ஓடம்…


மீனாட்சி பாலகணேஷ்
1. முகம் நக நட்பும் நட்பு!
ஆகா! ஜானாவின் மின்னஞ்சல் முகவரி கிடைத்துவிட்டது. என்னுள் ஒரே உற்சாகம் கொப்பளித்தது. உள்ளம் களியாட்டம் போட்டது!!
என் பள்ளிப்பருவ அருமைத்தோழிக்கு நீட்டி முழக்கி, வரிந்து வரிந்து ‘இதுவே தோழமையின் உதாரணம்,’ எனுமளவிற்கு ஒரு நீ……ண்ட மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். நான் மாறவேயில்லை என அவள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

அடிமைத் திறனே அன்பாக – 8


அடிமைத்  திறனே அன்பாக – 8 முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி http://wp.me/P4Uvka-hn  சுந்தரன் நட்பு ஏழிசை இன்றமிழ் வெள்ளை யானையின் மேலூர்ந்து திருக்கயிலை செல்கின்றபொழுது வன்றொண்டர், தமக்குத் தம்பிரான் … மேலும்

அடிமைத் திறனே அன்பாக – 7


அடிமைத்  திறனே அன்பாக – 7 முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி சுந்தரன் நட்பு http://wp.me/P4Uvka-gW  தோழமை பற்றி நிகழ்ந்த அருட்டிறம். தம் தோழராகிய நம்பிக்குத் தாமே பொருள் கொடுக்கும் … மேலும்

அடிமைத் திறனே அன்பாக – 6


அடிமைத்  திறனே அன்பாக – 6 முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி சுந்தரன் நட்பு http://wp.me/P4Uvka-gH  அம்மையாரின் அருஞ்செயல் சுற்றி நின்ற அனைவரும் கதறினர். கலிக்காமருடைய மனைவியார், கணவருடைய உயிரைப் … மேலும்