திரிவேணி சங்கமம்


சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும். திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும். அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

தேவிக்குகந்த நவராத்திரி — 2


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-BL
3. தடாதகை திக்விஜயம்
அவரைக் கண்ணுற்றதும், மீனாட்சியின் உள்ளம் (அவர்தாம் தன் கணவரென அறிந்தமையால்) அவரோடு சென்று ஒன்றுபட்டுவிட்ட காரணத்தால் மூன்று முலைகளுள் ஒன்று ஒடுங்கி மறைந்துவிடுகின்றது. தலை நாணத்தில் தாழுகின்றது. கடைக்கண்ணால் அவரை நோக்கிய வண்ணம், நெற்றியில் சிறுவியர்வை தோன்ற, பெருமூச்செறிந்தபடி, கையில் ஏந்திய வில்லினையும் தாழ்த்திய வண்ணம், அதன் நுனியைத் தன் விரல்களின் விளிம்பால் தடவியபடி பேசவும் மறந்து நிற்கிறாள் மீனாட்சி!
பின் நடந்ததெல்லாம் தான் உலகமே அறிந்த மீனாட்சி திருமணமாயிற்றே!