சுவாமி தேசிகன்


ஷைலஜா
தேசிகர் என்றால்  குருதேவர் என்றுபொருள்.குருவிற்கான  சகல லட்சணங்களுடன் திகழ்ந்தவரான  வேங்கடநாதன்  என்பவர்தான்  சுவாமிதேசிகன் என்று வைணவர்கள் போற்றி வழிபடும் ஆச்சார்யபெருமான். இந்த புரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் அன்னாரின்  750வது திருநட்சத்திரத்தை  சிறப்பாகக்கொண்டாட இருக்கிறது. எளிமையான  குணம் கொண்ட ஏற்றமிகு  தெய்வீகக்கவிஞர்  தேசிகன். 

தீதும் நன்றும் பிறர் தர வாரா


மறவன்புவவு சச்சிதானந்தன்
முதன் முதலாக இந்தியாவின் ஏற்பாட்டில் மாகாண சபை ஆட்சி வந்தது இந்தியாவே இதற்குக் காரணம்.

மூன்று நிலைகளில் – குடியுரிமை மொழி உரிமை மரபுவழித் தாயக உரிமை மூன்றையும் தமிழருக்கு மீட்டுத்தந்த அண்டை நாடு இந்தியா.

வரலாற்றை மறக்க வேண்டாம்
பகையை வளர்க்க வேண்டாம்.
இந்திய உதவியை நாடியவர்கள் ஈழத்தமிழர்கள்.
இந்திய நடுவண் அரசை வலியுறுத்தியவர்கள் தமிழகத் தமிழர்கள்.

ஈழத்தமிழர்களின் வேண்டுகோள் தமிழகத் தமிழர்களின் கோரிக்கை இவையே தில்லியின் ஈழத் தமிழர் சார்பான நடவடிக்கைக்கு காரணம்.

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 5


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
வித்து இல்லாதவழி நிலத்திலிருந்து முளை தோன்றாது;  அதுபோல, மாயை இல்லாதவழி பிரம்மத்திலிருந்து உலகம் தோன்றாது.  இது சற்காரிய வாதத்திற்கு ஏற்புடைத்து.  சூனியத்தினின்றும் ஒன்றும் தோன்றாது.  இறைவனும் உள்ளதைத்தான் தோற்றுவிப்பானே அன்றி இல்லாததைத் தோற்றுவிக்க மாட்டான்.

அருச்சுனனின் ஆத்திரம்


ஒரு அரிசோனன்
“உம்மால் நானும், எனது உடன்பிறப்புகளும், பேரழகியான பாஞ்சாலியும் சொல்லொணாத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்களுக்கும், அவமதிப்பிற்கும், அற்பத்தனத்திற்கும் ஆளானோம். பன்னிரண்டாண்டுகள் கானகத்திலும், ஓராண்டு மறைந்து குற்றேவல்செய்தும் வாழ்ந்தோம். வீரத்திற்கு இலக்கணமான நான் பேடியாகப் பெண்வேடம் பூண்டேன். நீர் சூதாடியபொழுதே அண்ணன் பீமன் உரைத்தபடி எரிதணல்கொண்டு உமது கையைக் கொளுத்தியிருக்கவேண்டும், அல்லது எனது வாளால் வெட்டியெறிந்திருக்கவேண்டும்.  இப்பொழுதும் ஒன்றும் கெட்டும்போய்விடவில்லை.  உம்மைத் துண்டாடிவிடுகிறேன்!”

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 4


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
பிரம்மம் ஒன்றே உளது என்றதன் தாத்பரியம், கருப்ப சிசுவை கருப்ப வயிற்றில் அடக்கி ‘ஒருத்தியே யிருந்தனள்’ என்று கூறுவதை ஒக்கும்.  அகரவுயிர் இல்லையானால்  வேறெழுத்துக்கள் இல்லை என்பதுபோலப் பிரமப்பொருள் இல்லையாயின் ஒருபொருளும் இல்லை என்பதே பிரம்மம் ஒன்றேயுளது என்பதன் தாத்பரியம்.  இவ்வளவே யன்றி, அவ்வொன்றன்றி வேறு பொருளில்லை யென்றல் பொருந்தாது.

தர்மக்ஷேத்திரம் – சின்னத்திரைத் தொடர் விமர்சனம்


ஒரு அரிசோனன்
மகாபாரதம் அறிந்தவர்களால்தான் —  நீதிவிசாரணையைப் போன்று நடக்கும் 26 பகுதிகள் உள்ள இத்தொடரில் என்ன சொல்லப்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம்.  இல்லாவிடில், நினைவுமீட்பாகச் [ஃப்ளாஷ்பேக்] சொல்லப்படும் சிற்சில நிகழ்ச்சிகளின்மூலம் மகாபாரதத்தையும், சுமத்தப்படும் குற்றங்களையும், அதற்குச் சொல்லப்படும் பதில்களையும், சித்திரகுப்தனின் தீர்ப்பையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது.
மகாபாரத மூலத்திலிருந்து பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், இத்தொடர் மகாபாரதக் கதாபாத்திரங்களை மனம்போலச் சித்தரிக்காமல், முடிந்த அளவுக்கு நடுநிலைமையிலேயே சித்தரிக்கிறது எனலாம். நீதிமன்ற விவாதங்கள்போல மகாபாரதப் பாத்திரங்கள் விவாதம் செய்வது மிகவும் ரசிக்கும்படித்தான் உள்ளது.

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 3


முனைவர் கோ.ந். முத்துக்குமாரசாமி
சைவசித்தாந்தம் மாயையை உள்பொருளாகவே கொள்கிறது.  பிரபஞ்சத்திற்கு மாயையே முதற்காரணம்.  சிவம் நிமித்தகாரணம்.  சிவசத்தி துணைக்காரணம். சிலர் சிவசத்தியே மாயையாக, ஞான திரோதகமாய் (ஆன்மபோதத்தை மறைத்து) நிற்கும் என்பர்.   இவ்வாறு கூறுவது பெருந்தவறு.  சிவம் சித்து.  சிவத்துடன் பிரிப்பின்றித் தாதான்மியமாகநிற்கும் சிவசத்தியும் சித்தேயாகுமன்றிச் சடமாகாது.  சடப்பொருளே சித்தைப் பந்தமுறுத்தும்.  சித்து சித்தைப் பந்திக்காது.  சிவனுடைய பேரருளே சிவசத்தி.  அது அருளுதலையன்றி பந்தித்தலைச் செய்யாது.  

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 2


முனைவர் கோ.ந். முத்துக்குமாரசாமி
பிரம்மத்தை அறிவோமெனத் தொடங்கிய பிரம்மசூத்திரம், அடுத்து பிரம்மத்தின் குணங்கள் ஒன்றையும் கூறாமல், அது புரிந்த செயலை மட்டும் கூறுவதிலிருந்து பிரம்மத்திற்கு குணங்களில்லை; அது நிர்க்குணம் என்பர்.  பிரம்மம் நிர்க்குணம் என்பதைச் சைவம் ஏற்றுக்கொள்வதில்லை.  “சத்தியம் ஞானம் அனந்தம் பிரம்மம்”  எனத் தைத்திரிய உபநிடதம் (2. 1) கூறுகிறது.  

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் -1


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனச் சம்பிரதாயமாகக் கூறப்பட்டாலும், உயிர் உலகு இறை பற்றித் தமிழ் மக்களின் சிந்தனைமுதிர்ச்சி, தமிழ்மொழி இலக்கண மரபு, திருமுறைகள்  ஆகிய தமிழ் மூலங்களே இந்நூலுக்கு அடிப்படையாக அமைந்தன. உபநிடதங்களுக்குத் தமிழ்ச் சிந்தனை வழியிலேயே பொருள் காணப்பட்டது. அதனால் உபநிடத வாக்கியங்களுக்குப் பிறர் உரைத்த பொருளுக்கும் மெய்கண்டார் கண்ட பொருளுக்கும் வேற்றுமை காணப்பட்டது. மெய்கண்டாரின் வழி அமைந்த கொள்கை ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்று அழைக்கப்பட்டது.
வேதம் பிரமாணமாகையினால், “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்” (சிவப்பிரகாசம் 7) என்றும், ‘வேதப் பயனாம் சைவம்’ (பெரியபுராணம் 1219) என வேதத்தைச் சைவசித்தாந்தம் போற்றியது.  வேதத்தின் முடிந்த முடிபு சைவம். அதனால் சைவசித்தாந்தாந்தம் வைதிக சைவம் எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
மேகமூட்டத்தாலும், தொடர் மழையாலும் பொழுதினை அறியாத நிலையில், பித்திகப் பூ மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு விளக்கேற்றும் நேரம் வந்துவிட்டது எனப் பண்டைக் காலத்தில் பொழுதினை அறிந்தனர்
தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை.

சேவற்றிரு துவசம்


டாக்டர் ராஜாராம்
தலைக்கருகே சேவலும், அவன் பாதத்தின் அருகே மயிலும் உறைந்தன.  இதன் பொருள் என்ன? ஞானம் என்பது தலையில் ஒளிர்வது.  அதுவே சேவல்.   பக்தி என்பது அவன் சரணகமலத்தில் இருப்பது.  அதுவே மயில்.   வைரம் போன்ற வேல் வைராக்கியத்தை குறிப்பது.   அது நமது கல்மனத்துள் பாய்ந்து ஒரு குகையை உண்டாக்கியபின் குகன் அங்கு வந்து உறைவான். 

தனுஷ்கோடி – அரிச்சல் முனை


சிங்கநெஞ்சன் சம்பந்தம்
1964 டிசம்பரில் பெரும் புயல் ஒன்று தனுஷ்கோடியைப் புரட்டிப்போட்டது.  இந்த ஊர் உருக்குலைந்து அழிந்துபோனது. சென்ற ஆண்டு அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவகத்தைத் திறக்க வந்த பிரதமர் மோதி  இந்தச் சாலையையும் திறந்தவைத்திருக்கிறார்