திரிவேணி சங்கமம்


சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும். திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும். அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

தேவிக்குகந்த நவராத்திரி — 5


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-DM
9. தேவியின் தாம்பூல மகிமை!
அப்போது அவளைக் காண தேவசேனாபதியான சுப்பிரமணியன், தேவர்களின் தலைவனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு முதலானோர் வருகைபுரிகின்றனர். தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை வென்று வெற்றிபெற்றதை அன்னையிடம் கூற ஒடோடி வந்துள்ளான், அருமைமைந்தன்.
நேராக யுத்தகளத்திலிருந்து வருவதால், கவசம் தலைப்பாகை முதலியன தரித்திருந்தவன், தலைப்பாகையை மரியாதையின் நிமித்தம் கழற்றிவிட்டு அன்னையிடம் வந்து வணங்குகிறான்.

தேவிக்குகந்த நவராத்திரி — 4


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/p4Uvka-Dn  7.  சிவசக்தி ஆனந்த தாண்டவம் தேவி ‘லாஸ்யம்’ எனப்படும் நளினம் அழகும் மிகுந்த நாட்டியவடிவத்தில் மிகவும் விருப்பம் கொண்டவள்;  இது பெண்கள் ஆடும் … மேலும்

தேவிக்குகந்த நவராத்திரி-3


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Cv
நிலாவின் உதயத்தால் சலனமுறும் கடல்போல, தனது உறுதியில் சிறிது தளர்ந்த சிவபிரான், பிம்பாபழம் போன்ற சிவந்த அதரங்களையுடைய உமாவின் அழகிய முகத்தைக் கண்ணுற்றார். மலையரசன் மகளும் மனக்கிளர்ச்சியினால் உண்டான மயிர்க்கூச்சத்தினால், மலரும் கதம்ப மலர்களைப்போல் காணப்பட்டு, முகத்தையும் நாணத்தினால் சிறிது திருப்பியவண்ணம், ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தபடி, அழகுற நின்றாள்

தேவிக்குகந்த நவராத்திரி — 2


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-BL
3. தடாதகை திக்விஜயம்
அவரைக் கண்ணுற்றதும், மீனாட்சியின் உள்ளம் (அவர்தாம் தன் கணவரென அறிந்தமையால்) அவரோடு சென்று ஒன்றுபட்டுவிட்ட காரணத்தால் மூன்று முலைகளுள் ஒன்று ஒடுங்கி மறைந்துவிடுகின்றது. தலை நாணத்தில் தாழுகின்றது. கடைக்கண்ணால் அவரை நோக்கிய வண்ணம், நெற்றியில் சிறுவியர்வை தோன்ற, பெருமூச்செறிந்தபடி, கையில் ஏந்திய வில்லினையும் தாழ்த்திய வண்ணம், அதன் நுனியைத் தன் விரல்களின் விளிம்பால் தடவியபடி பேசவும் மறந்து நிற்கிறாள் மீனாட்சி!
பின் நடந்ததெல்லாம் தான் உலகமே அறிந்த மீனாட்சி திருமணமாயிற்றே!

காவேரிப்பாட்டியின் கோலங்கள் – 6


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/p4Uvka-Am              பிள்ளையார், பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்! இதோ, திரும்பிப் பார்த்தால் விநாயக சதுர்த்தி.  வாசலில் போட அருமையான, அழகான பெரிய கோலம் … மேலும்

காவேரிப்பாட்டியின் கோலங்கள்-5


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-xV
அரிசிமாவால் கோலம் போடுவது எதற்காக? நமது உணவை பூச்சி, எறும்பு முதலிய மற்ற சிறிய ஜீவராசிகளுடனும் பகிர்ந்து உண்பதற்காகத்தான்- நிதானித்துநின்று பார்த்தால், அரிசிமாக்கோலத்தில் கொஞ்சநேரத்திலேயே எறும்புகள் மொய்க்க ஆரம்பித்துவிடுவது புலப்படும். “கொஞ்சம் சர்க்கரை கலந்தால் எப்படி இருக்கும்?’ எனக் குதர்க்கம் பேசக்கூடாது.

நாம் உண்ணும்முன் காக்கைக்குச் சாதம்போடுவது போன்றதுதான் இது. இப்போதெல்லாம் ஒரு வெள்ளைக்கல்லைப் பொடிசெய்து கோலமாவு என விற்கிறார்கள். அதனை உபயோகப்படுத்தாதவரை எறும்புகளுக்கும் நமக்கும் நல்லது! பாம்பு கோலம் 1. அடுத்து, விடியற்காலையிலேயே வாசலைப் பெருக்கிக் கோலம்போடுவது என்பது பெண்கள் கடைப்பிடித்த ஒரு உடற்பயிற்சி எனலாமா? வாசலில் சாணநீர் தெளித்துப் பெருக்கி, சுத்தப்படுத்தி, ஒரு அழகான கோலத்தையும் போடுவதுடன் நாள் நல்லவிதமாக ஆரம்பிக்கிறது என்ற உற்சாகம் உள்ளத்தில் பெருகுகிறது. அதனால்தான் துக்கம் நிகழ்ந்த வீட்டில் வாசலில் கோலம்போடுவதில்லை.

இனி என்னைப் புதிய உயிராக்கி – 16


இனி என்னைப் புதிய உயிராக்கி – 16
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-vY
ஆடலரசின் ஏற்பாட்டின் படி கீதாஞ்சலியின் நடன நிகழ்ச்சி கலைவிருந்தாகப் படைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களை வீணாக்காமல், ஒரு பிரபல ஆசிரியரிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தாள் சைலஜா. மெருகேறிய கலை மேடையில் பிரகாசித்தது. சைலாவின் தாயுள்ளம் பெருமையில் பூரித்து மகிழ்ந்தது. தன்னையே மேடையில் கண்டு தன் சிறுமிப் பருவத்து நினைவுகளில் லயித்தாள்.

‘நடனமாடினார்’ என்ற பாடலுக்கு கீதா ஆடியபோது, ஷீலா வேண்டுமென்றே ஆடலரசை வம்புக்கிழுத்து, சிறு வயதில் தன் நடனத்தை அவன் ஒளிந்திருந்து பார்த்ததையும். அதிகமாகச் சாய்ந்ததால் கதவு எதிர்பாராமல் திறந்து கொண்டதையும், ஜிம்மிற்குக் கூறி ஆடலரசை கூச்சப்பட வைத்தாள்.

  காவேரிப்பாட்டியின் கோலங்கள் – 4


  காவேரிப்பாட்டியின் கோலங்கள் – 4
மீனாட்சி பாலகணேஷ்
புதிதாக வீட்டில் சோஃபா, நாற்காலி முதலியன வர ஆரம்பித்த காலம் போலும்! மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு நம்மைப் பழக்கிக் கொள்ளும் போதே, பாரம்பரியக் கோலங்களிலும் அந்த டிஸைனைப் புகுத்தி விட்டார்கள்!

இனி என்னைப் புதிய உயிராக்கி – 15


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/p4Uvka-vj  உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே – … மேலும்

இனி என்னைப் புதிய உயிராக்கி – 14


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/p4Uvka-uY              ‘யுக யுகாந்தரங்களாக உலகங்கள் அனைத்திலும் தன்னந் தனியாக உன்னுடைய அன்பு என்னைத் தேடி அலைந்தது என்பது உண்மையா, உண்மை தானா, சொல்வாய்?’- … மேலும்