வீடுபெறச் செல்!


வீடுபெறச் செல்!
ஓரு அரிசோனன்
“விழாமல் இருக்கணும்னா, நாம எல்லோரும் ஒருத்தர் கையை இன்னொருத்தர் பிடிச்சால்தான் முடியும்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.
“அதெப்படி பழக்கமில்லாத புருஷா கையைப் பிடிக்கறது?” என்று கூச்சப்பட்டாள், அம்புஜம்.
“ஆபத்துக்குப் பாவமில்லை, மாமி, நாங்க ரெண்டுபேரும் வேணும்னா உங்க கையைப் பிடிச்சுக்கறோம்.  எங்க கையை மத்தவங்க பிடிச்சுக்கட்டும்.” என்றனர், காமாட்சியும், சரஸ்வதியும்.
“ஏதோ, நாம இந்த கஷ்ட காலத்தில ஒண்ணாச் சேர்ந்திருக்கோம்.  கூடப் பிறந்தவாளா நினச்சுக்குவோம்.”என்று அம்புஜம் அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

திரிவேணி சங்கமம்


சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும். திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும். அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

அப்பாவின் துண்டு


பார்க்குக்குச் செல்வதென்றாலே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அப்பா அப்பொழுதுதான் ஏதையோ பறிகொடுத்தவர்போலிருக்காமல் உற்சாகமாக இருப்பார். அங்கு விளையாடும் சிறுவர்களும் என்னை எதிர்பார்த்திருப்பார்கள். நானும் அவர்களுடன் குதித்துக்கொண்டே பந்து விளயாடுவேன். அவர்கள் பந்தை எங்கு எறிந்தாலும், எப்படி எறிந்தாலும், முதலில் அதை எடுப்பது நானாகத்தான் இருக்கும். என்னளவுக்கு அவர்கள் யாராலும் வேகமாக ஓடமுடியாது.

சொர்ணம் டீச்சர்


மீனாட்சி பாலகணேஷ்
அக்கம்பக்கத்துப் பெண்கள், மாமிகள், பாட்டிகள், குழந்தைகள் எல்லாம் தாத்தா வீட்டுக் கூடத்தில் குழுமியிருந்தார்கள். ஏதோ ஒரு சம்பிரதாயம் – திருமணமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காத பெண் ஒருத்தியை அழைத்து, அவள்கையால் குழந்தையைத் தொட்டிலில் இடச்செய்வார்கள். நானோ குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாரையுமே தம்பிப்பாப்பாவைத் தொட விடவில்லை.

ராமாயி


மறுபகிர்வு நன்றி: வலம் மாத இதழ்
ஒரு அரிசோனன்
“கட்டின பொண்சாதியே ஆம்பிளையே இல்லேன்னது இவனை என்னவோ செஞ்சுட்டுதுங்க. அதுலேந்து இவன் வேட்டிய அவுத்துத் தலைல கட்டிட்டு வெறும் கோவணத்தோட அலயறானுங்க. ஒரு எடத்துல நிலச்சு வேலை செய்யறதில்லை. எப்படியோ நாலைஞ்சு வருசம் காலம் தள்ளீப்புட்டோம்.”

கழுதைக்குக் கல்யாணம்!?


கே. செல்வன் மூதேவி என்பது திட்டும் வார்த்தையாக இன்று ஆகியிருந்தாலும் மூதேவியின் வரலாறு நம் மரபுகளுடன் நீண்ட தொடர்புடையது. புராணங்களின் படி மூதேவி திருமகளுக்கு மூத்தவள். பாற்கடலை … மேலும்

அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

கையாலாகாதவனாகிப்போனேன்! — 2


ஒரு அரிசோனன்
2. மூக்குக்கண்ணாடி
“வேண்டாம். கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா? எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.
“ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா! ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.” இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!
“கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா! இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல. இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

பாடிப்பறந்த குயில் – 8


வையவன்
தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலிக்கு அருகில் சென்று தானும் தண்ணீர் பருக ஆரம்பித்தது புதிய புலி. சிறிது நேரம் சென்றதும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு முதலில் வந்த பெண்புலியின் உடலை நக்கிக்கொடுக்கத் தொடங்கிற்று. பெண்புலியும் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி, ஒரு வீட்டு நாய்போலக் கழுத்தை இசைவாக அதற்குக் காட்டிற்று.

பாடிப்பறந்த குயில் – 7


வையவன்
தினசரி ராவுஜியின் வீட்டுக்குப் போவது தவறவில்லை. ஆனால், இப்போது அவர் அறையோடு சரி. முன்போல் வீட்டுக்குள்ளே நுழைந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவதென்பது அவனாலேயே முடியாமற்போய்விட்டது. ஆனால் காலைவேளைகளில் மாடிச் சந்திப்பு நிகழ்ந்துவந்தது
“மனப்பூர்வமாக உங்களுக்கு என்னை ஒப்படைத்துவிட்ட பிறகு, அடிக்கடி நடக்கும் இந்தப் பெண்பார்க்கும் நாடகத்தில் நான் நடித்துக்கொண்டே இருக்கவேண்டுமா?”

தேவி தரிசனம்


ஒரு அரிசோனன்
http://wp.me/p4Uvka-QS
அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதை மட்டுமே என்னால் உணரமுடிந்தது. அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.
காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது. என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.
என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

பிள்ளையார் நோன்பு — நகரத்தார் மரபு


முனைவர் கி. காளைராஜன்
வழிவழியாக, வாழையடி வாழையாக முன்னோர் செய்த செயல்களைத் தொன்று தொட்டுச் செய்து வருவதை மரபு என்கிறோம். மரபுகளைப் பேணிக்காப்பதில் இந்தியர் அதிலும் குறிப்பாகத் தமிழர் தனியிடம் பெறுகின்றனர். நாட்டுக்கோட்டை நகரத்தார் பிள்ளையார் நோன்பு விழாவை இழை எடுத்தல் என்ரு கூறுகின்றனர். பூம்புகாரில் தங்களது மூதாதையர்கள் செய்து வந்த வழிபாட்டை அப்படியே இன்றளவும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.