காப்டனைக் கேளுங்கள்! – 2


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
பெரிய விமானங்களில் அவற்றின் அளவினால் தேவைக்கும் அதிகமான அமைப்புமுறைகள் உள்ளன.  அவை மட்டுமே ஒரு விமானத்தை இன்னொன்றைவிடப் பாதுகாப்பானதாக ஆக்கிவிடமுடியாது.
நவீனகாலத்திய ஜெட் எஞ்சிங்களின் நம்பிக்கைத் தன்மை மிகவும் சிறந்திருப்பதால் மாக்கடல்களின் மேலேயோ, வெகுதூரத்திலிருக்கும் இடங்களுக்குப் பறப்பதோ அபாயகரமானதல்ல. 

கொடுவரி முதலை குடை தண் துறைய‌


ருத்ரா
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா,  என் உடல் என் உயிரைத்தின்கிறதா எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?

திருமறைக்காடு – ஊரும் பெயரும் – இலக்கிய ஆய்வு


பொன். சரவணன்
கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘ மறையினை ஓதும் காடு ‘ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.

தமிழன்னையின் அணிகலன்கள்


மீனாட்சி பாலகணேஷ்
சிறுமிகள் நாங்கள் பாடிமுடித்ததும் வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜ. அவர்கள், “குழந்தைகள் மிக அழகாகப் பாடினார்கள்,” என ஆசிகூறிப் பாராட்டிய பின்னரே விழாவினைத் துவக்குவார்கள். நாங்களும் பரவசத்தில் பூரித்து மகிழ்ந்த நாட்கள் அவை.
சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி, பெருமிதம், ஆகியன இன்பமயமானவை. ஆகவே அத்தகைய பெருமை பொருந்திய சிலம்பினை அணிந்துள்ள தமிழ்த்தாயின் திருவடிகள் இன்பம் மிகுந்த அழகான மலர்களால் அர்ச்சிக்கப்படுவனவாம்.

கழுதைக்குக் கல்யாணம்!?


கே. செல்வன் மூதேவி என்பது திட்டும் வார்த்தையாக இன்று ஆகியிருந்தாலும் மூதேவியின் வரலாறு நம் மரபுகளுடன் நீண்ட தொடர்புடையது. புராணங்களின் படி மூதேவி திருமகளுக்கு மூத்தவள். பாற்கடலை … மேலும்

அறுபடைவீடு பாதயாத்திரை – 10


முனைவர் நா.கி. காளைராஜன்
இங்குள்ள மிகவும் பழைமையான சிற்பங்களில் குடை, சாமரம், அம்மணம், சம்மணம் முத்திரைகளைக் காணமுடிந்தது.  இந்த முத்திரைகள் எல்லாம் இந்துக்களின் வழிபாட்டுமுறைகள் என்பதையும், இந்த வழிபாட்டுக் குறியீடுகளுக்குத் தாங்களே காப்புரிமை பெற்றதுபோல் எடுத்துக் கூறி, இந்துக்களை மதமாற்றம் செய்துள்ளனர் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிடேகத்தில் எல்லோரும் பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தோம்.  அபிடேகத்தின்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்  ஏழு ஏழு பேர் கொண்ட குழுவாக அர்த்தமண்டபத்தில் அமர்ந்து தணிகை வேலவனை ஆனந்த தரிசனம் செய்து கொண்டோம்.  சுவாமிக்கு சாற்றியிருந்த பட்டை எடுத்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.