ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!


ஒரு அரிசோனன்
ஆங்கிலம்மட்டுமே பேசவல்ல இந்த ஸோஃபியா, தனக்குக் குடியுரிமை வழங்கப்பட்டவுடன், சவூதி அரேபியாவில் அங்குள்ள பல்வேறு அரசு அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் முன்வந்து, அங்கு பெண்கள் வழக்கமாக அணியவேண்டிய, அரசினால் கட்டாயப்படுத்தப்பட்ட முக்காட்டை [அபயா] அணியாமல், பேசியது இதுதான்:
“இத்தகைய தனிச்சிறப்பினால் நான் மிகவும் பெருமையும், கௌரவமும் அடைகிறேன்.  உலகத்திலேயே முதன்முதலாகக் குடியுரிமை வழங்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்ட ரோபாட் என்பது வரலாகிறது.”

புதுக்கலிக் கவிதைகள் — 2


பேரா. சந்திரசேகரன் சுப்பிரமணியம்
http://wp.me/p4Uvka-z9
வன்பால் கலி
பச்சை மண்ணடா இப்பாரதம் ஆளும் பெண்ணடா

இச்சை கொண்டே காதல் மணம் புரிந்து வாழாமல்

இவரிடம் கொடும் பாலியல் வன்மம் ஏனடா இவரை

துச்சம் என மதிக்கக் காரணம் ஆண் ஆளுமையல்ல

கச்சை கட்டாமல் காட்டக் கூடாதாவற்றை கத்தைக்

கத்தைக் காகிதப் பணநோட்டுக்குக் காட்டி விட்டு

முத்தைச் சிப்பிபிரித்து அழகு ஆபரணத்தில் காட்டா

நடுப்பக்கத்தில் சொத்தை நாளேடுகளில் வண்ணமாய்

நாளும் நன்றாய் காட்டியே நவநாரீகம் எனப்பேசுவார் மத்தியில்

நறு வண்ணக் குளத்தில் பெருமீன் நிறைய இருப்பின்

வெண்நரை நாரையும் தேடிவந்து மீன் கொத்தாதோ?

இனி என்னைப் புதிய உயிராக்கி – 16


இனி என்னைப் புதிய உயிராக்கி – 16
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-vY
ஆடலரசின் ஏற்பாட்டின் படி கீதாஞ்சலியின் நடன நிகழ்ச்சி கலைவிருந்தாகப் படைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களை வீணாக்காமல், ஒரு பிரபல ஆசிரியரிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தாள் சைலஜா. மெருகேறிய கலை மேடையில் பிரகாசித்தது. சைலாவின் தாயுள்ளம் பெருமையில் பூரித்து மகிழ்ந்தது. தன்னையே மேடையில் கண்டு தன் சிறுமிப் பருவத்து நினைவுகளில் லயித்தாள்.

‘நடனமாடினார்’ என்ற பாடலுக்கு கீதா ஆடியபோது, ஷீலா வேண்டுமென்றே ஆடலரசை வம்புக்கிழுத்து, சிறு வயதில் தன் நடனத்தை அவன் ஒளிந்திருந்து பார்த்ததையும். அதிகமாகச் சாய்ந்ததால் கதவு எதிர்பாராமல் திறந்து கொண்டதையும், ஜிம்மிற்குக் கூறி ஆடலரசை கூச்சப்பட வைத்தாள்.

சீதையின் சீற்றம்!


சீதையின் சீற்றம்! ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-bf எனக்கு அலுத்துப்போய் விட்டது.  கோபம் கோபமாக வருகிறது!   இப்பொழுது எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது.  அவள் அடிமைபோல … மேலும்

பாஞ்சாலியின் புலம்பல்


ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-7n  கதையைப் படிக்க மேலே சொடுக்க்கவும் நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி;  துருபத மன்னனின் மகளான திரௌபதி;  கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான … மேலும்

கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4


கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு –  4 ஒரு அரிசோனன் (http://wp.me/P4Uvka-3U) கட்டுரையைப் படிக்க மேலே கொடுத்துள்ள லின்க்கைச் சொடுக்கவும். சீதை அப்பழுக்கற்றவள் என்று … மேலும்