கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் -25


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
மணம் கமழும் அகிற் புகையும், சந்தனப் புகையும் ஒருங்கு மணக்கின்ற கருமணலைப் போன்ற கரிய கூந்தல் என்பதை, ‘கமழ்அகில், ஆரம்நாறும் அறல்போல் கூந்தல்’ என்று குறுந்தொகை (286:2-3) காட்டுகின்றது. வையை நீர் கொண்டுவந்த வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையினது புகையினால் சுற்றப்பட்ட, மாலையணிந்த அழகிய மார்பு என்பதை, ‘புனல் தந்த காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்’ எனப் பரிபாடல் (9:27-28) குறிப்பிடுகிறது.