வீடுபெறச் செல்!


வீடுபெறச் செல்!
ஓரு அரிசோனன்
“விழாமல் இருக்கணும்னா, நாம எல்லோரும் ஒருத்தர் கையை இன்னொருத்தர் பிடிச்சால்தான் முடியும்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.
“அதெப்படி பழக்கமில்லாத புருஷா கையைப் பிடிக்கறது?” என்று கூச்சப்பட்டாள், அம்புஜம்.
“ஆபத்துக்குப் பாவமில்லை, மாமி, நாங்க ரெண்டுபேரும் வேணும்னா உங்க கையைப் பிடிச்சுக்கறோம்.  எங்க கையை மத்தவங்க பிடிச்சுக்கட்டும்.” என்றனர், காமாட்சியும், சரஸ்வதியும்.
“ஏதோ, நாம இந்த கஷ்ட காலத்தில ஒண்ணாச் சேர்ந்திருக்கோம்.  கூடப் பிறந்தவாளா நினச்சுக்குவோம்.”என்று அம்புஜம் அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

இந்துப் பண்டிகைகளை ஏன் பழிக்கிறார்கள்?


மறுபகிர்வு: நன்றி: தமிழ் ஹிந்து இணையதளம்
ஒரு அரிசோனன்
இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப் படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன. இப்படிச் செய்யப் பேச்சுரிமை இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இப்படிச் செய்து எதைச் சாதிக்கிறார்கள் இவர்கள் – இந்துக்களின் [அவர் சைவரோ, வைணவரோ, சாக்தரோ, முருகனை வழிபடுபவரோ, எப்படித் தம்மை அடையாளம் காட்டிக்கொள்பவரோ, யாராக இருப்பினும்] பெரும்பான்மையினரின் மனதைத் துன்புறுத்துவதைவிட?

ஆன்மீகமும் நானும் – 4


கல்பட்டு நடராஜன்
மூலக்கூறுகளை எலத்திரன் நுண்நோக்கியால் (electron microscope) மட்டுமே காணமுடியும். அப்படிப் பார்க்கும்போது அவை அணுக்களால் (atoms) ஆனவை என்பது புரியும். அந்த அணுக்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அணுக்களையும் மிகவும் சக்திவாய்ந்த எலத்திரன் மின் நோக்கியால் பார்த்தால் அணுக்கள் நேர்மின்னி, எதிர்மின்னி (protons and electrons) என்னும் கண்ணுக்குப் புலப்படாத மிகமிகச் சிறிதானவற்றால் ஆனவை என்பது தெரியும். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் மின்னிகளின் எண்ணிக்கை மாறுபடும். அதைப் பொருத்துதான் ஒவ்வொரு அணுவுக்கும் தனித்தன்மை வருகிறது.
ஆரம்பத்தில் வெவேறு குணங்கள்கொண்ட பொருள்களாகக் காணப்பட்டாலும் இவை எல்லாமே ஒரே பொருள்களால், நேர்/எதிர்மின்னிகளால் ஆனவைகள்தான். இதையேதான் நம் ஆன்மீகமும் சொல்கிறது. இவ்வுலகில் நாம் காணும் எல்லாமே மாயைதான். அவற்றுள் இருப்பது அந்த ஈசனும் ஈஸ்வரியும்தான்