ராமாயி


மறுபகிர்வு நன்றி: வலம் மாத இதழ்
ஒரு அரிசோனன்
“கட்டின பொண்சாதியே ஆம்பிளையே இல்லேன்னது இவனை என்னவோ செஞ்சுட்டுதுங்க. அதுலேந்து இவன் வேட்டிய அவுத்துத் தலைல கட்டிட்டு வெறும் கோவணத்தோட அலயறானுங்க. ஒரு எடத்துல நிலச்சு வேலை செய்யறதில்லை. எப்படியோ நாலைஞ்சு வருசம் காலம் தள்ளீப்புட்டோம்.”

கையாலாகாதவனாகிப்போனேன் — 6


ஒரு அரிசோனன்
” நீங்கள் ஜப்பானியராகத்தான் இருக்கவேண்டும்!” என்று ஜேம்ஸ் பான்ட் பாணியில் ஏதோ ஒரு இரகசியத்தைக் கண்டுபிடித்ததுபோலச் சொன்னேன்.

பழையபடியும் இல்லை என்பதுபோலத் தலை ஆடியது.  ஆனால் அவர் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.  “நான் ஒரு கொரியன்.” என்று பதில் சொன்னார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது.  காரணம்சொல்ல மறுத்துவிட்டார்.  சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

கையாலாகாதவனாகிப் போனேன்! – 4


ஒரு அரிசோனன்
கல்யாணச் சாப்பாடு!
ஒரு நல்ல நண்பனை இழந்த ஏமாற்றம் எனக்கு. நாய் தனியேசென்று தனது காயத்தை நக்கிக் குணப்படுத்திக்கொள்வதுபோல, எதிலும் கலந்துகொள்ளாமல் நானுண்டு, எனது படிப்புண்டு என்று தனித்திருந்து என் இதயப்புண்ணை எண்ணங்களால் நக்கிப்பார்த்து — தங்கரத்தினமும் நானும் சிவகங்கையிலும் காரைக்குடியிலும் நட்புடன்பழகிய நாள்களை எண்ணியெண்ணிப் பார்த்து — அது ஒரு கனவாகவே இருந்துவிட்டுப்போகட்டும் என்று மெதுவாகத் தன்னிலைக்குத் திரும்பிவந்து, ஜிட்டு குழாத்தின் நிழலில் குளிர்காயத்துவங்கினேன்.

ஒருமித்த உள்ளங்கள்


செம்பூர் நீலு
http://wp.me/p4Uvka-zz
”இந்த கான்சர் வியாதி ஒருத்தருக்கும் வரக்கூடாது. வந்துவிட்டால் வேறு வழியில்லை. பேஷண்ட்டை நன்றாகக் கவனித்து, அவர்கள் மனது புண்படாமல் நடந்து, அவர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அதுதான் நாம் செய்யவேண்டிய முக்கியமான கடமை. மாமியைப் பொருத்தமட்டில் இந்த வியாதிபற்றிய விபரம் உஙகளுக்கு தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டாம். நீங்கள் உங்கள் அம்மாவிற்கு செய்கிற முக்கியமான கடமை. அதுதான் அவளுடைய மனோதைரியத்தை குலைக்காமல் இருக்கும். அவர்களுக்கும் இந்த வியாதியை ஏற்றுக்கொண்ட மனநிலை கடைசிவரை இருக்கும். எப்பொழுதும் நார்மலாக இருக்கிறமாதிரியே இருங்கோ,“ என்று சொல்லிவிட்டு, ஸி.டி ஸ்கான் ரிபோர்ட்டை, குமாரின் கையில் கொடுத்தார்.

இனி என்னைப் புதிய உயிராக்கி – 8


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/P4Uvka-pv  “அம்மா, நான் போயிட்டு வரேன்.  சாயங்காலம் வர நாழியாகும்.  எங்க காலேஜ் ஜெனடிக்ஸ் கிளப்பில புரஃபஸர் சூரியநாராயணனோட லெக்சர் இருக்கு.  கிளப் காரியதரிசியான … மேலும்