பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி


ருத்ரா
தலைவன் பொருள்தேடி செல்லும் காட்டுவழியில் குத்துக் குத்தாய் முளைத்திருக்கும் கரும்புகள் அருகில் உள்ள ஒரு நீண்ட திரண்ட பெருங்கல் ஒன்று இடம் பெயர்ந்து அவற்றின் மேல் விழுந்து பொருந்தி நசுக்கியதால் அருகில் உள்ள இலை தழைகளில் எல்லாம் இனிய நீர் இழைந்தோடியது.அதை வண்டுகள் அருந்தி மயங்கின. அருகில் வந்த ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டி சுவைக்க முற்பட்டது.அந்த அடர்ந்த இருட்டு சூழ்ந்த காட்டில் அது தன் சிறுகண் கொண்டு வியந்து நோக்கி விதிர் விதிர்த்தது.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌


ருத்ரா
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா,  என் உடல் என் உயிரைத்தின்கிறதா எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?

சிறைக்கண் பீலி அதிர்தர ஆங்கண்


ருத்ரா இ.பரமசிவன்
ஊழ் என்னே!பாழ் என்னே!அடுநனி காதலின்
அழல்பெய் மழையில் எனை மாய்ந்தே ஒழியும்
வண்ணம் செய்தனள் வாழியவள் நலனே.
கொத்துகொத்தான இலைகள் நடுவே அந்தச் சிறு பூங்கொத்துகள் நுண்ணிய மகரந்தங்களை சிதறவிட்டாற்போல் அவள் தன் மெல்லிய சிரிப்பைச் சிந்தி என்னோடு ஒரு போர்க்களம் புகுந்தாள்.(பொருதனள்).
காதலால்தானே அவள் இப்படி என்னுடன் மோதுகிறாள்? இது ஒரு பொய்ச்சண்டைதானே! இருப்பினும் இது எனக்கும் வலிக்கும்; ஆனால் வலிக்காது.

பல்வரி நறைக்காய்


ருத்ரா இ. பரமசிவன்
http://wp.me/p4Uvka-LP
கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே, அதுபோல மன உறுதி கொண்டவள் நான். உண்ணப்போவதில்லை. காற்று உண்டு கூட வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்!

இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள்கொண்ட தும்பிபோன்றது. அந்த இதயம் நின்று உயிர்நீங்கும் காட்சியைக் காணச் சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்!