தாலாட்டும் அம்மை


தாலாட்டும் அம்மை
மீனாட்சி பாலகணேஷ்

அரசியானாலும் கூட தாயன்பு மட்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது; அதை எந்தப் பெண்ணுமே விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அன்னை தடாதகைப் பிராட்டியும் தனது சிறிய கணைக்காலில் குழந்தையைக் குப்புறக்கிடத்திக் கொண்டு, வாசனைப்பொடி பூசி, இளம் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டுகின்றாள்; நீராட்டலில் துவண்டு விட்ட குழந்தையை, நீரைத் துடைத்து, அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து மார்போடு அணைத்துக் கொள்கின்றாள்; சாம்பிராணிப் புகை காட்டித் தலைமுடியை உலர்த்தி, அதற்கு நறுமண எண்ணை பூசுகிறாள்.