அப்பாவின் துண்டு


பார்க்குக்குச் செல்வதென்றாலே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அப்பா அப்பொழுதுதான் ஏதையோ பறிகொடுத்தவர்போலிருக்காமல் உற்சாகமாக இருப்பார். அங்கு விளையாடும் சிறுவர்களும் என்னை எதிர்பார்த்திருப்பார்கள். நானும் அவர்களுடன் குதித்துக்கொண்டே பந்து விளயாடுவேன். அவர்கள் பந்தை எங்கு எறிந்தாலும், எப்படி எறிந்தாலும், முதலில் அதை எடுப்பது நானாகத்தான் இருக்கும். என்னளவுக்கு அவர்கள் யாராலும் வேகமாக ஓடமுடியாது.