வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 6


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
ஒரு சாரார், “ பிரம்மம் தன்னிறைவு உடையது, உலகத்தைப் படைப்பதனால் அதற்கு எவ்விதப் பயனும் இல்லை. அதனால் இந்த உலகத்தைப் பிரம்மம் படைக்கவில்லை,” என்று கூறுவர்.
காணப்படும் இவ்வுலகமும் பிறவுலகமுமெல்லாம் சிவனுடய படைப்பென்று சைவசித்தாந்தம் கூறுவதோடு, சிவனுடைய ஐந்தொழில் சிறுவர் செயலாகிய விளையாட்டுப் போன்றதல்ல, உயிர்கள்மேல் வைத்துள்ள கருணை என்று வலியுறுத்தும்.