தீதும் நன்றும் பிறர் தர வாரா


மறவன்புலவு க. சச்சிதானந்தன்
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் கூறிய வரி.
1938 சிங்களவர் ஜெயவர்தனா தலைமையில் தில்லி சென்றனர். மகாத்மா காந்தியைச் சந்தித்தனர்.
மலையகத்தில் தோட்டங்களில் வாழும் 10 இலட்சம் தமிழர்களை இந்தியா திருப்பி அழைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரினர்.
Image result for இலங்கை தமிழ்நாடு1939 நேரு மலையகத்துக்கு வந்தார் இலங்கை இந்திய காங்கிரஸ் அமைக்க உதவினார். ஒருபொழுதும் மலையகத் தமிழரை இந்தியா ஏற்காது திருப்பி அழைக்க முடியாது எனக் கூறினார்.
நேரு பேசிய கூட்ட மேடையைச் சிங்களவர் இழுத்து வீழ்த்தினர்.
1948 1949 ஆண்டுகளில் இலங்கை நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்கள் மலையகத் தமிழரை நாட்டவர் ஆக்கின.
அன்றிலிருந்து அவர்கள் தொடங்கிய போராட்டம் இடைவிடாத அறப் போராட்டம்.
1964ல் ஸ்ரீமாவோ மலையகத் தமிழர்களில் பாதி எண்ணிக்கையைத் திருப்பி அனுப்பச் சாஸ்திரியுடன் உடன்பாடு கண்டார்.
நடைமுறைச் சிக்கல்களால் ஓர் இலட்சம் மலையகத் தமிழரே இந்தியா சென்றனர். எஞ்சியோர் இலங்கையில் தங்கினர். நாடற்றவராகத் தொடர்ந்தனர்.
1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு.
நேருவைத் தாக்கியது போல் இராஜீவையும் சிங்களவர் தாக்கினர்.
1988ல் மலையகத் தமிழர் அனைவரும் இலங்கைக் குடியுரிமை பெற்றனர்.
இலங்கையில் தமிழர் எண்ணிக்கை கணிசமாக அமைய நேரு காரணம். இராஜீவ் காரணம், இந்தியா காரணம்.
1944 சிங்களம் மட்டுமே ஆட்சிமொழிச் சட்டத்தை முன்மொழிந்தவர் ஜெயவர்த்தனா. பின்னர் சிங்களமும் தமிழும் எனத் திருத்தினர்.
1956 சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி பண்டாரநாயக்கா சட்டமாக்கினார்.
தமிழர் போராடத் தொடங்கினர் அனைத்துக் கட்சிகளும் இணைந்த போராட்டம்.
 பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போராட்டம்.
நீதிமன்ற வழக்கு வந்தது. தமிழ் மொழிச் சிறப்பு நடைமுறைச் சட்டம் வந்தது. ஆனாலும் சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி.
தமிழரின் போராட்டங்கள் உடன்பாடுகள் பயனளிக்கவில்லை.
Image result for ராஜீவ் ஜெயவர்த்தனா1987 இராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு. 1988 தமிழும் சிங்களமும் இலங்கையின் ஆட்சி மொழிகள் என அரசியலமைப்புத் திருத்தம்.
யார் காரணம்? இந்திரா காந்தியும் மொரார்ஜி தேசாயும் இராஜீவும் நரசிம்மராவும் காரணம் இந்தியா காரணம்.
1925 யாழ்ப்பாணத்தில் மகேந்திரா உடன்பாடு.
1959 பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்பாடு.
1965 இடட்லி செல்வநாயகம் உடன்பாடு.
தமிழர் மரபுவழித் தாயகம். அங்கே தமிழருக்கு ஆட்சியுரிமை.
1925இல் துரைசாமி கேட்டார்.
1958இல் பிரதேச ஆட்சி உடன்பாடு.
1965இல் மாவட்டசபை உடன்பாடு.
உடன்படுவதும் சிங்களவர் கிழித்தது எறிவதுமாக.
1987 இராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு.
தொடக்க வரியிலேயே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஈழத்தமிழரின் மரபுவழித் தாயகம் என்ற ஏற்பாடு.
இலங்கை அரசும் இந்திய அரசும் ஏற்றுக் கொண்டதாக உடன்பாடு.
இணைந்த வடக்கு மாகாணத்தில் மாகாண  சபை ஆட்சி.
அரசு சார் சிங்களக் குடியேற்றங்களை தடுக்க மாகாண சபைக்குக் காணி ஆட்சி.
1925ல் 1958 1965 அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக, 60 ஆண்டுகளாக, தமிழர் தமது நிலத்தில் தாமே ஆட்சி செய்யும் உரிமையைக் கேட்டனர்.
முதன் முதலாக இந்தியாவின் ஏற்பாட்டில் மாகாண சபை ஆட்சி வந்தது இந்தியாவே இதற்குக் காரணம்.
மூன்று நிலைகளில் – குடியுரிமை மொழி உரிமை மரபுவழித் தாயக உரிமை மூன்றையும் தமிழருக்கு மீட்டுத்தந்த அண்டை நாடு இந்தியா.
வரலாற்றை மறக்க வேண்டாம்
பகையை வளர்க்க வேண்டாம்.
இந்திய உதவியை நாடியவர்கள் ஈழத்தமிழர்கள்.
இந்திய நடுவண் அரசை வலியுறுத்தியவர்கள் தமிழகத் தமிழர்கள்.
ஈழத்தமிழர்களின் வேண்டுகோள் தமிழகத் தமிழர்களின் கோரிக்கை இவையே தில்லியின் ஈழத் தமிழர் சார்பான நடவடிக்கைக்கு காரணம்.
இந்தியப்படை வந்த பின் நடந்தவற்றுக்கு ஈழத்தமிழரின் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறையே காரணம்.
தவறுகளைத் தவறுகளாக மறக்க வேண்டும்.
இருபக்கமும் மறக்க வேண்டும் .
இலங்கையின் 2000 ஆண்டுகால வரலாற்றில் தமிழக இந்தியத் தலையீடுகளே ஈழத்தமிழர் தலைநிமிர்ந்து நிற்க உதவியதை மறக்கக் கூடாது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
***

பின்னூட்டமொன்றை இடுக