அறுபடைவீடு பாதயாத்திரை – 6


முனைவர் நா.கி. காளைராஜன்
பழனிமலைக்கு வடக்குத் திசையில் விற்கிடை தூரத்தில் அறிஞர்களால் புகழப்படுகின்ற பிரமதீர்த்தம் உள்ளது.  மலர்மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் தன்னை நெருங்கி வரச் சென்று பொறிகளையுடைய அக்கினி கொண்டு செய்த குண்டம் இங்கு அமைத்துள்ளது இதன் பெருமையாகும்.  குமரக் கடவுளின் அருள்மிகுந்த நல்ல பூக்களையுடையது பிரமதீர்த்தம்.  இந்தப் பிரம தீர்த்தத்தில் கந்தருவர்களும் தேவர்களும் முனிவர்களும் அட்டதிக்குப் பாலகர்களும் நீராடி உள்ளனர் என்றும், இந்தத் தீர்த்த்த்தில் நீராடியவர் முத்தி பெறுவர் என்று நம்பப்படுகிறது.