கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 7


முனைவர் இரா. இராமகிருட்டினன்
கூவிளம், கூவிளை, வில்வம், வில்வ பத்ரி என அழைக்கப்படும். வில்வமரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. வில்வம் எல்லா இடங்களிலும் வளரும். வில்வமரம் எல்லாச் சிவன் கோயில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை, மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது. இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது. ஈட்டி வடிவமானது. இலைப் பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்கமலர் வகையைச் சேர்ந்தவை.