தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம் – 3


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
http://wp.me/p4Uvka-E6
நன்றி – பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள்: க. பூபதிராஜா
மணிநீரென்றால் எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்று அர்த்தம். அது சமுத்திரத்திற்கும் ஜீவநதிக்கும் பொருந்தும். மண்ணும் என்கின்ற இடம் பாலை, காடு, எதிரிகள் மறைந்திருப்பதற்குச் சாதகமாகிய இடங்களைக் குறிக்கும். மலையும் என்கின்றது இயற்கையான மலைகள், மேற்குத் தொடர்ச்சிமலை, ஆப்பிரிக்காவில் உள்ள, காங்கோ, வட அமெரிக்காவின் மேற்குபாகத்திலுள்ள பெரும்காடுகளை ஒக்கும். உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கும் உடையதாயும்,“சிறுப்பிற் பேரிடத்ததாகிக்” காக்கவேண்டிய இடம் சிறியதாயும், அதற்குள் அணிவகுத்து நிற்கும் படை, இருப்பதற்கு இடம் பெரியதாயும், “உறுபகை ஊக்கமழிப்பதரண்”. எதிரியின் ஊக்கத்தை அழிக்கக் கூடியதாய் சிதைக்கக் கூடிதாய் இருக்கவேண்டிய அரண் என்று சொல்லுகிறார்.