கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 17


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த* வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 14


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“இந்திரன், பிரம்மா, சிவன், தேவர்கள் எல்லாரும் உன்னைவழிபட சிறந்தமலர்களைக் கொண்டுவந்து பிறர்கண்களுக்குத் தெரியாதபடி மறைவாக நிற்கிறார்கள். உன் அழகைக்கண்டு அவர்கள் கண்பட்டுவிடாமல் நான் உனக்கு அந்திக்காப்புச் செய்ய நீ வந்தருள்வாய்.”
ஆயர்பாடிப்பெண்கள் கிருஷ்ணன் செய்யும் இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்? நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகானகதை மட்டுமே. நம்புவோருக்கு இது பரமாத்மா ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 10


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-IA
தாயிடம் சென்று அவளைப் பயமுறுத்துவதுபோலச் சின்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடித் தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்விக்கிறான் சிறுகுட்டன்! இதைத்தான் அப்பூச்சிகாட்டுதல் என வருணிக்கிறார் பெரியாழ்வார் எனும் தாய்!
“அன்று காளைகளைக் கட்டும் வண்டியில் வந்த சகடாசுரனைக் காலால்உதைத்து அழித்த இந்தப்பிள்ளை, எத்தனைமுறை எல்லார்வீட்டிலும் நெய்திருடி உண்டு நந்தன்மனைவி யசோதையிடம் தயிர்கடையும் கயிற்றால் அடிவாங்கித் துள்ளித்துடித்திருக்கிறான். இப்போது பார்! கொஞ்சம்கூடப் பயமில்லாமல் என்வீட்டில் நெய்திருடவந்து எனக்கே அப்பூச்சி காட்டுவதைப்பாரடி!”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 5


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Et
மாமதி! மகிழ்ந்தோடி வா!
“அம்புலியே! நீ உன்னைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டத்தால் எங்கும் பரந்து சோதி விரிந்து காணப்படுகிறாய். இருந்தும் என்ன பயன்? நீ என்ன செய்தாலும், என் மகனுடைய திருமுகக் காந்திக்கு ஈடாக மாட்டாய். இந்த வித்தகனான என் குழந்தையோ விடாது உன்னைக் கையை ஆட்டி ஆட்டி அழைத்துக்கொண்டே இருக்கிறான். குழந்தைக்குக் கை நோகாதோ? நீ விரைவாக ஒடி வந்துவிடு,”

கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்! – 2


மீனாக்ஷி பாலகணேஷ்

http://wp.me/p4Uvka-yG
மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
“இப்போது கண்ணால் எட்ட இருந்தும்கூட காண இயலாத பாவியாகிவிட்டேனே. ஊர்ப்பெண்டிரெல்லாம் வந்து நீ தொட்டிலில் கிடக்கும் அழகைப் பார்த்துச் செல்லும்போது, நான் அவர்களில் ஒருத்தியாகக்கூட இருக்கவில்லையே — மேல்புறம் கறுத்து, உட்புறம் சிவந்த திருவடிகளையும் கைவிரல்களையும் முடக்கிக்கொண்டு ‘இது மேகக் குட்டியோ, யானைக்குட்டியோ’ என எண்ணும் உன் அழகினை நான் அனுபவிக்கப்பெற்றிலேனே…”
“நீ எனக்கு உன் கனிவாய் முத்தம் தருவதை இழந்தேனே! நீ புழுதியில் விளையாடிப் பின் அக்கோலத்துடன் வந்து என்னை அணைத்துக்கொள்வதனை கிடைக்கப் பெற்றிலனே! உன் விரல்களால் குழப்பி உண்டசாதத்தின் மிச்சத்தினை உண்ணக் கிடைத்திலனே! இத்தகைய கொடியவினை செய்த என்னை எதற்காக எனது தாய் பெற்றனளோ?”