கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 18


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான் புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 17


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த* வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 16


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
என்றைக்கு அவன் வஞ்சமகளான பூதனையின் முலையில் வாய்வைத்து பால் உறிஞ்சுவது போல உயிரையே உறிஞ்சி எடுத்தானோ, அன்றே தாயான யசோதை அவனுக்கு முலைப்பால் கொடுக்கப் பயம்கொண்டுவிட்டாள். தன்னுயிரையும் உறிஞ்சிவிடுவானோ என்ற பயத்தினால் அல்ல! ‘இவன் இவ்வளவு அரிய பெரிய செயல்களைச் செய்தவனாயிற்றே; இவன் குழந்தையல்ல; தெய்வம். அவனுக்கு நான் எவ்வாறு பாலூட்டுவது?’ என்ற ஒரு தயக்கம்தான்!

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 15


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
சிறிது வாக்குவாதத்தின் பின்பு ஒருபெண், “வாருங்களடி, அவன் சிறுவன்தானே; அவன்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும், நம்பாட்டுக்கு நாமும் நீராடுவோம்,” எனக்கூற வழக்கம்போலச் சேலைகளையும், அணிகலன்களையும் களைந்து கரையில் வைத்துவிட்டு அனைவரும் நீராடுகின்றனர்; போதாக்குறைக்கு ஆற்றுநீரை அள்ளியள்ளிக் குறும்பாக அவன்மேலும் வீசுகின்றனர். அவர்களுக்குத் தம் இளமையிலும் அழகிலும் மிகுந்தபெருமை; இளம்வாலிபனான கண்ணன் அங்கிருப்பது அவர்களுடைய இந்த விளையாட்டுக்கு இன்னும் சுவைகூட்டுகிறது

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 13


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம்
மீனாட்சி பாலகணேஷ்
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக்
கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக்கொள்ளாதீர்கள்!

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 12


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
நமது கிருஷ்ணன். வீடுவீடாக நண்பர்கள் பட்டாளத்துடன் சென்று வெண்ணெயையும் தயிரையும் எடுத்து உண்டுவிட்டு வருவதால் அவன் உடல், உடை எங்கணும் முடைநாற்றம் வீசுகிறது. வீட்டிற்கு வந்தவுடன் களைப்பினால் படுத்து உறங்கியும்விட்டான். அவனிடமிருந்து, புளித்த தயிர்வாடை வீசுகிறது; உறங்கும்போது உடல்முழுவதும் வந்த தினவால் அங்கும் இங்கும் தேய்த்தபடியும் கைநகங்களால் அரித்துக்கொண்டும் உறங்கும் அலங்கோலத்தைக் கண்டவளுக்கு உள்ளம் பொறுக்கவில்லை.
‘இன்றைக்கு நீ பிறந்த திருவோண நாள்; இன்றாவது நன்றாக நீராட வேண்டுமப்பனே!’ எனக்கெஞ்சுகிறாள் அன்னை!

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 10


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-IA
தாயிடம் சென்று அவளைப் பயமுறுத்துவதுபோலச் சின்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடித் தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்விக்கிறான் சிறுகுட்டன்! இதைத்தான் அப்பூச்சிகாட்டுதல் என வருணிக்கிறார் பெரியாழ்வார் எனும் தாய்!
“அன்று காளைகளைக் கட்டும் வண்டியில் வந்த சகடாசுரனைக் காலால்உதைத்து அழித்த இந்தப்பிள்ளை, எத்தனைமுறை எல்லார்வீட்டிலும் நெய்திருடி உண்டு நந்தன்மனைவி யசோதையிடம் தயிர்கடையும் கயிற்றால் அடிவாங்கித் துள்ளித்துடித்திருக்கிறான். இப்போது பார்! கொஞ்சம்கூடப் பயமில்லாமல் என்வீட்டில் நெய்திருடவந்து எனக்கே அப்பூச்சி காட்டுவதைப்பாரடி!”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 3


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
மீனாக்ஷி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-AY
“என்முன்பு ஒரு நீலவண்ண ஒளி நீலோத்பல மலர்களின் திரளைப்போலக் காணப்படுகிறது; என் உள்ளும் புறமும், அமிர்தத்தில் மூழ்கிவிட்டதுபோன்ற ஒரு உன்னதமான உணர்வைப் பெற்றுள்ளன; அந்த ஒளியின் ஊடே ஒளிப்பிழம்பாக ஒரு சிறுகுழந்தை வடிவை நான் தரிசிக்கிறேன்; ஆனந்தத்தில் எல்லையில் நின்று மயிர்க்கூச்செடுத்தவர்களாக இருக்கும் முனிவர்களும், நாரதரும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றனர்; உபநிஷதங்கள் அழகான மங்கையர்கள்போல அவனைச் சுற்றி நிற்கின்றனவே!”