கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 20


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
கானமழை பொழிகின்றான்…
மனித உயிர்கள் மட்டுமல்லாது மற்ற ஐந்தறிவு உயிர்களும் கிறங்கி நிற்கும் இசையின் இனிமையை நாம் இப்பாசுரத்தில் உணருகிறோம். இசைமயக்கம் மட்டுமின்றி, இசைப்பவன் தானே அவ்விசையாகி இயங்கும்போது ஏற்படும் மெய்ப்பாடுகளை – -‘செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப’ எனவெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் அழகும் இப்பாடலில் மிளிர்கின்றது.
‘இதுதானோ கிருஷ்ணானுபவம்’ என, என்னைப்போல் அதனை உணரவியலாத அறிவிலி தடுமாறுவதும் நியாயம்தானே?

இசைத்தமிழ்


தேனீ மாமா வாங்கோ வாங்கோ குழந்தைகளா, உக்காருங்கோ, இனிய மாலை வணக்கம். இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி; இநத  இசைவிழா நடக்கறது. … மேலும்

பாரதியார்


தேனீ மாமா
ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம். ஆரோக்கியமா இருந்தாதான் தெம்பா இருக்கலாம். விளையாட்டுலே இருந்து படிப்பு வரைக்கும் எல்லாத்துலேயும் ஜெயிக்கலாம்.
நன்னா ஓடி விளையாடணும் அப்போதான் நம்ப உடம்பு நல்லா வளரும், நம்ம உடம்பிலேருந்து வெளியில வருதே வியர்வை. அப்பிடி வியர்வை வெளில வரா மாதிரி ஓடி விளையாடணும். ஒரே இடத்துல உக்காந்துண்டே இருந்தா என்ன ஆகும்? உடம்புல கொழுப்பு சேரும், உடம்பு தடியாயிடும், அப்புறம் நம்மால ஓட முடியாது, நடக்க முடியாது, எல்லாம் கஷ்டமாயிடும். அதுக்குத்தான் நம்மை ஓடி விளையாடுன்னு சொல்றார் பாரதியார்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 18


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான் புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 14


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“இந்திரன், பிரம்மா, சிவன், தேவர்கள் எல்லாரும் உன்னைவழிபட சிறந்தமலர்களைக் கொண்டுவந்து பிறர்கண்களுக்குத் தெரியாதபடி மறைவாக நிற்கிறார்கள். உன் அழகைக்கண்டு அவர்கள் கண்பட்டுவிடாமல் நான் உனக்கு அந்திக்காப்புச் செய்ய நீ வந்தருள்வாய்.”
ஆயர்பாடிப்பெண்கள் கிருஷ்ணன் செய்யும் இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்? நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகானகதை மட்டுமே. நம்புவோருக்கு இது பரமாத்மா ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு.

தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம் – 3


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
http://wp.me/p4Uvka-E6
நன்றி – பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள்: க. பூபதிராஜா
மணிநீரென்றால் எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்று அர்த்தம். அது சமுத்திரத்திற்கும் ஜீவநதிக்கும் பொருந்தும். மண்ணும் என்கின்ற இடம் பாலை, காடு, எதிரிகள் மறைந்திருப்பதற்குச் சாதகமாகிய இடங்களைக் குறிக்கும். மலையும் என்கின்றது இயற்கையான மலைகள், மேற்குத் தொடர்ச்சிமலை, ஆப்பிரிக்காவில் உள்ள, காங்கோ, வட அமெரிக்காவின் மேற்குபாகத்திலுள்ள பெரும்காடுகளை ஒக்கும். உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கும் உடையதாயும்,“சிறுப்பிற் பேரிடத்ததாகிக்” காக்கவேண்டிய இடம் சிறியதாயும், அதற்குள் அணிவகுத்து நிற்கும் படை, இருப்பதற்கு இடம் பெரியதாயும், “உறுபகை ஊக்கமழிப்பதரண்”. எதிரியின் ஊக்கத்தை அழிக்கக் கூடியதாய் சிதைக்கக் கூடிதாய் இருக்கவேண்டிய அரண் என்று சொல்லுகிறார்.

இசைத் தமிழ்


தேனீ மாமா  http://wp.me/P4Uvka-kx  இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி, சங்கீதக் கச்சேரி.  இநத மாசம் இசைவிழா நடக்கறது, அப்புறம் நீங்கள்ளாம் இங்க … மேலும்

ஓடி விளையாடு பாப்பா!


தேனீ மாமா  http://wp.me/P4Uvka-jD  அன்புக் குழந்தைகளே! நீங்கள்ளாம் பள்ளிக்கூடம் போய்ட்டு வீட்டுக்கு வந்து அம்மா சொன்னாங்கன்னு   அம்மாவை மதிச்சு   உடனே இங்க வந்துட்டீங்களே சந்தோஷமா இருக்கு.  எப்பவும் … மேலும்

எல்லோரும் ஓரினம் -1


டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-d2  மஹாகவி பாரதியின் “எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்” எனும் மணிவாக்கினை நேரில் அனுபவிக்கவேண்டுமானால் அரேபிய நாடுகளுக்கு விஜயம் செய்தால் போதும்! என் … மேலும்

மகா கவியின் மகத்துவம்


மகா கவியின் மகத்துவம் டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-bK  பாஞ்சாலி சபதம் என்ற மகாகவி பாரதியாரது படைப்பு என்றோ நடந்து முடிந்துபோன புராண இதிகாச நிகழ்ச்சியை மட்டும் காட்டுவதல்ல. … மேலும்

திருவாசகம் தரும் செய்தி – 1


திருவாசகம் தரும் செய்தி – 1 (புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளின் உள்ளடக்கம்) டாக்டர். ராஜாராம் http://wp.me/P4Uvka-aZ    ஈசனின் திருவிளையாடலான பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சிக்கு மூல … மேலும்

பாஞ்சாலியின் புலம்பல்


ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-7n  கதையைப் படிக்க மேலே சொடுக்க்கவும் நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி;  துருபத மன்னனின் மகளான திரௌபதி;  கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான … மேலும்