அறுபடைவீடு பாதயாத்திரை — 2


முனைவர் நா.கி. காளைராஜன்
அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி, உரோமச முனிவர் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் கட்டிய ஒன்பது சிவன்கோயில்களில் பழையகாயல் அருள்மிகு கமலாம்பிகை உடனுறை சங்குமுகேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. மதுரையில் உள்ளது போன்று இங்கும் அம்மன்கோயில் சாமிசந்நிதியின் வலப்புறம் உள்ளது. மிகவும் பழைமையான கோயில். பாண்டியனின் சின்னங்கள் தூண்களிலும் விதானங்களிலும் உள்ளன.