பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி


ருத்ரா
தலைவன் பொருள்தேடி செல்லும் காட்டுவழியில் குத்துக் குத்தாய் முளைத்திருக்கும் கரும்புகள் அருகில் உள்ள ஒரு நீண்ட திரண்ட பெருங்கல் ஒன்று இடம் பெயர்ந்து அவற்றின் மேல் விழுந்து பொருந்தி நசுக்கியதால் அருகில் உள்ள இலை தழைகளில் எல்லாம் இனிய நீர் இழைந்தோடியது.அதை வண்டுகள் அருந்தி மயங்கின. அருகில் வந்த ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டி சுவைக்க முற்பட்டது.அந்த அடர்ந்த இருட்டு சூழ்ந்த காட்டில் அது தன் சிறுகண் கொண்டு வியந்து நோக்கி விதிர் விதிர்த்தது.

கலித்தொகை கதைகள் – 9


முனைவர் ஜ. பிரேமலதா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . .
நாகத்தைப் போலவும், சிறுகுடிமக்கள் போலவும் தலைவியும் அஞ்சி நடுங்கி துயில்கொள்ளாது துன்புற்று வருந்துகிறாள். இங்கு அவளைத் துன்புறுத்துவது, உன்னுடைய திருமண முயற்சியின்மையே! உங்களுடைய களவு வெளிப்பட்டதால் தாயும் இடிபோல் முழங்கி அவளைஅச்சுறுத்துகிறாள்.

கலித்தொகை கதைகள் – 8


உன்மீதுகொண்ட காதல்நோய் ஒருபுறம் அவளை வாட்டுகிறது. மறுபுறம் ஊராரின் அலர் அவளைத் துன்புறுத்துகிறது. எனினும், தன்னுடைய வருத்தத்தை அவள் என்னிடம்கூடச் சொல்லவில்லை. திருமண நினைவின்றி கனவிலேயே வாழநினைக்கும் உன் பண்புகெட்ட தன்மையைப் பிறர் அறியாதபடி அவள் மறைத்த காரணம், உன்னைப் பிறர் இகழ்வார்களோ என்ற நாணத்தினால் அன்றோ? இத்தகைய அரியபண்புடைய தலைவியின் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தே நீதான்.

கலித்தொகை கதைகள் — 7


முனைவர் ஜ. பிரேமலதா
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே… கண்ட போதே சென்றன அங்கே…
தோழியும் அதுபோலவே உரக்கப் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியும், கேட்கவேண்டிய தலைவனின் காதில் தன்பேச்சு சென்று விழுமென்று. மறைவில் நிற்கும் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கும் தோழி அவனுக்கும் நன்கு கேட்குமாறு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். தலைவனும் இதனைக்கேட்டு விரைவில் வந்து தலைவியை மணமுடிக்கக் கருதியிருப்பான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

கலித்தொகை கதைகள் – 4


முனைவர் ஜ. பிரேமலதா
http://wp.me/p4Uvka-yW
ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானா உங்கள் மன்னவன் நீதி?தோழியைப் பார்த்துப் புன்னகைத்தாள். தோழி அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டேபோனாள். “அன்று உரத்த குரலில் இசையோடு அகவினம் பாடுவோம் என்று அழைத்தேனல்லவா. நீயும் சம்மதித்தாய். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தாய். நான் சொல்லும் வேலையை அனைவரும் செய்தபடிதான் அகவினம் பாடவேண்டும் என்றாய். நாங்களும் ஒப்புக்கொண்டோம். உடனே நீ சந்தனமர உரலைக் கொண்டுவரச் சொன்னாய். அது தலைவனின் மலையில் விளைந்த சந்தனமரத்தினால் ஆனது. பிறகு யானைக் கொம்பு உலக்கை கொண்டுவரச் சொன்னாய். அதுவும் தலைவனின் மலையில் வாழ்ந்த இறந்த யானையின் தந்தத்தினால் செய்யப்பட்டது. பிறகு முற்றிய தினை கொண்டுவரச் சொன்னாய். அதுவும் தலைவன் மலையில் விளைந்தது. உன்மனம் தலைவனின் மலையையே சுற்றிச்சுற்றி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டோம்.

கலித்தொகை கதைகள் – 3


முனைவர் ஜ. பிரேமலதா
http://wp.me/p4Uvka-yf
எங்கள் அச்சக் குரல் கேட்டு, கரையின் வழியாகச் சென்று கொண்டிருந்த ஓர் இளைஞன் எங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, ஆற்றிலே குதித்தான். விரைவாக நீந்தினான். தலைவியைப் பற்றி இழுத்தான். துவண்டு போயிருந்த அவளைத் தன் பக்கம் இழுத்து அவளை அணைத்தபடி கரையில் சேர்த்தான். தலைவி, தன்னை அணைத்து இழுத்து வந்த அந்த இளைஞன் மீது அன்றே காதல் கொண்டுவிட்டாள். இது சரியா என நாங்கள் கேட்டதற்குத, தலைவனின் அணைப்பில் அகப்பட்ட காரணத்தால் இனி வேறொருவரை மனதால் நினைக்கவும் இயலாது. இப்பிறவியில் ஒருவனை மணப்பதாக இருப்பின் தான் மணப்பதாக இருப்பின் தலைவனையே மணப்பேன். அப்படி மணமுடிக்க இயலாவிடில் கன்னியாகவே இருப்பேன் என்று உறுதியாகக் கூறினாள்.

கலித்தொகை கதைகள் – 2


முனைவர் ஜ. பிரேமலதா
http://wp.me/p4Uvka-xo
தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள். உண்மையில் இங்கு ஒரு தோழி தலைவிக்கு அவள் உயிரை, தலைவனை, வாழ்வை மீட்டுத் தந்திருக்கிறாள். தலைவியின் மட்டற்ற காதலை தோழி எவ்வளவு அழகாக தலைவனிடம் வெளிப்படுத்தியிருக்கிறாள் பாருங்கள். ஒருவருடைய துன்பத்தைத் தீர்ப்பதிலும் உண்மையான அக்கறை, ஒரு நயம் வேண்டுமல்லவா? “மழை பொழிந்த வயல் போல, வளமான வாழ்க்கையைப் பெற்றவர் போல, வறுமையாளரை செல்வம் சென்று சேர்ந்த்தைப்போல — தலைவியோடு அவன் சேர்ந்தால் வாழ்க்கை இனியதாகும்.” எவ்வளவு பொருத்தமான உவமைகள். கபிலர் குறிஞ்சித்தலைவியின் நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்.