திருமறைக்காடு – ஊரும் பெயரும் – இலக்கிய ஆய்வு


பொன். சரவணன்
கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘ மறையினை ஓதும் காடு ‘ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.

வளவன் கனவு — 18


மறுபகிர்வு நன்றி: வல்லமை மின்னிதழ்:
சு. கோதண்டராமன்
http://wp.me/p4Uvka-F6
23 அப்பரும் ஆளுடைய பிள்ளையும்
இவர் பால்மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து முதிர்ந்தவர். இவர் வேதியர் குலத்தவர். அவர் வேறு குலத்தவர். இவர் தந்தையின் தோள்மீதும் பல்லக்கிலும் அமர்ந்தே பயணம்செய்தவர். அவர் கால்நடையாகவே எல்லாத் தலங்களுக்கும் சென்று தரிசித்தவர். இவர் வேத வேதாங்கங்களை ஓதாது உணர்ந்தவர். அவர் வேறுசமயத்து நூல்களை ஓதி, அவற்றின் பயனின்மையை உணர்ந்து துறந்தவர். இருவரையும் இணைத்தது சிவம். இருவரும் ஒருவரையொருவர் கானவிரும்பினர்.