கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 14


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“இந்திரன், பிரம்மா, சிவன், தேவர்கள் எல்லாரும் உன்னைவழிபட சிறந்தமலர்களைக் கொண்டுவந்து பிறர்கண்களுக்குத் தெரியாதபடி மறைவாக நிற்கிறார்கள். உன் அழகைக்கண்டு அவர்கள் கண்பட்டுவிடாமல் நான் உனக்கு அந்திக்காப்புச் செய்ய நீ வந்தருள்வாய்.”
ஆயர்பாடிப்பெண்கள் கிருஷ்ணன் செய்யும் இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்? நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகானகதை மட்டுமே. நம்புவோருக்கு இது பரமாத்மா ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு.

கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்! – 2


மீனாக்ஷி பாலகணேஷ்

http://wp.me/p4Uvka-yG
மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
“இப்போது கண்ணால் எட்ட இருந்தும்கூட காண இயலாத பாவியாகிவிட்டேனே. ஊர்ப்பெண்டிரெல்லாம் வந்து நீ தொட்டிலில் கிடக்கும் அழகைப் பார்த்துச் செல்லும்போது, நான் அவர்களில் ஒருத்தியாகக்கூட இருக்கவில்லையே — மேல்புறம் கறுத்து, உட்புறம் சிவந்த திருவடிகளையும் கைவிரல்களையும் முடக்கிக்கொண்டு ‘இது மேகக் குட்டியோ, யானைக்குட்டியோ’ என எண்ணும் உன் அழகினை நான் அனுபவிக்கப்பெற்றிலேனே…”
“நீ எனக்கு உன் கனிவாய் முத்தம் தருவதை இழந்தேனே! நீ புழுதியில் விளையாடிப் பின் அக்கோலத்துடன் வந்து என்னை அணைத்துக்கொள்வதனை கிடைக்கப் பெற்றிலனே! உன் விரல்களால் குழப்பி உண்டசாதத்தின் மிச்சத்தினை உண்ணக் கிடைத்திலனே! இத்தகைய கொடியவினை செய்த என்னை எதற்காக எனது தாய் பெற்றனளோ?”