அறுபடைவீடு பாதயாத்திரை – 5


முனைவர் நா.கி. காளைராஜன்
“ஏடகநாதர்“ மிகவும் பழைமையான சுயம்பு லிங்கம். திருஞானசம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏடுகள் ஆற்று வெள்ளத்தை எதிர்த்துச் சென்று கரையேறிய இடத்தில் இருந்த காரணத்தினால் “ஏடகநாதர்“ என்ற காரணப்பெயர் உண்டானது. இதனால் ஊருக்குத் திருஏடகம் (திருவேடகம்) என்ற காரணப் பெயர் உண்டானது.
சொக்கலிங்க சுவாமிகள் மலேசியாவில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் திருவேடகம் கோயில் திருப்பணிக்கே செலவு செய்துள்ளார் என்றும், தனது ஆயுட்காலம் முடியும்வரை இங்கேயே தங்கியிருந்து சமாதி அடைந்துள்ளார்.