கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 18


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான் புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 15


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
சிறிது வாக்குவாதத்தின் பின்பு ஒருபெண், “வாருங்களடி, அவன் சிறுவன்தானே; அவன்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும், நம்பாட்டுக்கு நாமும் நீராடுவோம்,” எனக்கூற வழக்கம்போலச் சேலைகளையும், அணிகலன்களையும் களைந்து கரையில் வைத்துவிட்டு அனைவரும் நீராடுகின்றனர்; போதாக்குறைக்கு ஆற்றுநீரை அள்ளியள்ளிக் குறும்பாக அவன்மேலும் வீசுகின்றனர். அவர்களுக்குத் தம் இளமையிலும் அழகிலும் மிகுந்தபெருமை; இளம்வாலிபனான கண்ணன் அங்கிருப்பது அவர்களுடைய இந்த விளையாட்டுக்கு இன்னும் சுவைகூட்டுகிறது

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 1


http://wp.me/p4Uvka-xN
மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
நந்தகோபனுக்கு கோகுலத்தில் அழகான ஒரு குழந்தை பிறந்துள்ள விவரத்தினை வசுதேவர் கார்க முனிவருக்குக் கூறுகிறார்; குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகி உள்ளன. வசுதேவருக்கு மட்டும் அல்லவோ அந்தக் குழந்தையின் பிறப்பின்பின் ஒளிந்துள்ள ரகசியம் தெரியும்! ஆகவே அவர் கார்க முனிவரிடம், “மஹநீயரே! தாங்கள் சென்று, என் நண்பன் நந்தனின் குழந்தையைப் பார்த்து ஆசிர்வதிக்கவேண்டும். அக்குழந்தைக்கு ஒரு அழகான, பொருத்தமான பெயரையும் வைத்து அவன் ஜாதகத்தையும் கணித்துக்கொடுங்கள்,” என மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்.
லீலாசுகர் கிருஷ்ணனை குழந்தை வடிவில் உள்ள ஒரு பர தத்துவம் எல்லாருக்கும் எல்லாவற்றையும் எங்கும் எப்போதும் அளிப்பவன் எனக் கொண்டாடுகிறார்.