கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 18


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான் புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 17


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த* வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 16


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
என்றைக்கு அவன் வஞ்சமகளான பூதனையின் முலையில் வாய்வைத்து பால் உறிஞ்சுவது போல உயிரையே உறிஞ்சி எடுத்தானோ, அன்றே தாயான யசோதை அவனுக்கு முலைப்பால் கொடுக்கப் பயம்கொண்டுவிட்டாள். தன்னுயிரையும் உறிஞ்சிவிடுவானோ என்ற பயத்தினால் அல்ல! ‘இவன் இவ்வளவு அரிய பெரிய செயல்களைச் செய்தவனாயிற்றே; இவன் குழந்தையல்ல; தெய்வம். அவனுக்கு நான் எவ்வாறு பாலூட்டுவது?’ என்ற ஒரு தயக்கம்தான்!

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 13


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம்
மீனாட்சி பாலகணேஷ்
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக்
கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக்கொள்ளாதீர்கள்!

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 8


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
மீனாட்சி பாலகணேஷ்
தளர்நடை நடவானோ!
http://wp.m/p4Uvka-HH
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஆறாவது பருவமாக வருகைப்பருவம் அல்லது வாரானைப்பருவம் அமையும். இது குழந்தையை நடந்துவரும்படி அன்னையர் ஊக்குவித்து வேண்டிக்கொள்ளும் பாணியில் அமையும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் அம்புலிப்பருவம் என்பது ஏழாம்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. சிறுகுழந்தையோ, அம்புலிமாமாவுடன், தான் அவனைக்கண்டு ரசிக்கத்துவங்கிய நாள்முதலாகவே ஒரு இணைபிரியாத நட்புறவை ஆயுள்பரியந்தம் ஏற்படுத்திக்கொண்டுவிடுகின்றது

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 6


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-EN
ஆயர்கள் போரேறே! ஆடுக செங்கீரை!
பிள்ளைத்தமிழ் என விளங்கும் சிற்றிலக்கியத்தில் செங்கீரைப் பருவம் அருமையான பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்கும். சென்ற நூற்றாண்டில் திருமேனிக் கவிராயர் என்ற புலவரால் எழுதப்பெற்ற மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் எனும் நூலானது சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்து விளங்குகின்றது. இந்தப் பிள்ளைத்தமிழ் நூலானது திருப்பேரை எனும் ஊரில் விளங்கும் திருமால்மீது பாடப்பட்டது.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 5


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Et
மாமதி! மகிழ்ந்தோடி வா!
“அம்புலியே! நீ உன்னைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டத்தால் எங்கும் பரந்து சோதி விரிந்து காணப்படுகிறாய். இருந்தும் என்ன பயன்? நீ என்ன செய்தாலும், என் மகனுடைய திருமுகக் காந்திக்கு ஈடாக மாட்டாய். இந்த வித்தகனான என் குழந்தையோ விடாது உன்னைக் கையை ஆட்டி ஆட்டி அழைத்துக்கொண்டே இருக்கிறான். குழந்தைக்குக் கை நோகாதோ? நீ விரைவாக ஒடி வந்துவிடு,”