சிறைக்கண் பீலி அதிர்தர ஆங்கண்


ருத்ரா இ.பரமசிவன்
ஊழ் என்னே!பாழ் என்னே!அடுநனி காதலின்
அழல்பெய் மழையில் எனை மாய்ந்தே ஒழியும்
வண்ணம் செய்தனள் வாழியவள் நலனே.
கொத்துகொத்தான இலைகள் நடுவே அந்தச் சிறு பூங்கொத்துகள் நுண்ணிய மகரந்தங்களை சிதறவிட்டாற்போல் அவள் தன் மெல்லிய சிரிப்பைச் சிந்தி என்னோடு ஒரு போர்க்களம் புகுந்தாள்.(பொருதனள்).
காதலால்தானே அவள் இப்படி என்னுடன் மோதுகிறாள்? இது ஒரு பொய்ச்சண்டைதானே! இருப்பினும் இது எனக்கும் வலிக்கும்; ஆனால் வலிக்காது.

கலித்தொகை கதைகள் – 3


முனைவர் ஜ. பிரேமலதா
http://wp.me/p4Uvka-yf
எங்கள் அச்சக் குரல் கேட்டு, கரையின் வழியாகச் சென்று கொண்டிருந்த ஓர் இளைஞன் எங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, ஆற்றிலே குதித்தான். விரைவாக நீந்தினான். தலைவியைப் பற்றி இழுத்தான். துவண்டு போயிருந்த அவளைத் தன் பக்கம் இழுத்து அவளை அணைத்தபடி கரையில் சேர்த்தான். தலைவி, தன்னை அணைத்து இழுத்து வந்த அந்த இளைஞன் மீது அன்றே காதல் கொண்டுவிட்டாள். இது சரியா என நாங்கள் கேட்டதற்குத, தலைவனின் அணைப்பில் அகப்பட்ட காரணத்தால் இனி வேறொருவரை மனதால் நினைக்கவும் இயலாது. இப்பிறவியில் ஒருவனை மணப்பதாக இருப்பின் தான் மணப்பதாக இருப்பின் தலைவனையே மணப்பேன். அப்படி மணமுடிக்க இயலாவிடில் கன்னியாகவே இருப்பேன் என்று உறுதியாகக் கூறினாள்.