அறுபடைவீடு பாதயாத்திரை — 1


முனைவர் நா.கி. காளைராஜன்
தமிழ்ப்புத்தாண்டு துன்முகி சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14, 2016) வியாழக் கிழமை. காலையிலிருந்தே கடுமையான வெயில். அனற்புயல் என்று கூறும் அளவிற்கு வெப்பக் காற்று வீசியது. அதிகாலை 02.45 மணியளவில் பந்தலக்குடியில் இருந்து புறப்பட்டு காலை 09.30 மணிளயவில் சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலை அடைந்து, கோயில் மண்டபத்தில் தங்கினோம்.
சிந்தலக்கரை கோயிலில் மிகப்பிரமாண்டமான காளியின் திருவுருவமும், அனந்தசயனப் பெருமாளும் தொலைவில் வரும்போதே அடியார்களுக்குக் காட்சி அருளுகின்றனர்.