கம்பன் காட்டும் இலக்கியச்சுவை


இராமனைக்கண்டு மகளிர் மையல்கொண்ட ஒருத்தி தன் தோழியிடம், “என் நெஞ்சில் வஞ்சனாகிய இராமன் வந்து புகுந்துள்ளான். அவன் என் கண் வழியாக வெளியே போய்விடுவான்; எனவே அவன் வெளியேற இயலாதபடி என் கண்ணைச் சிக்கென மூடிக்கொள்வேன், இனி அவனுடன் படுக்கைக்குப் போய்ச் சேர்வோம்,” என்று கூறுவாள்.