இலக்கிய அமிழ்து-1


  கம்பனுக்கு மலையைக் கண்டவுடன் சிவபிரானின் திருவடியே நினைவுக்கு வருகிறது. அதனை இரு இடத்துக் கூறுவான். இராமன் சீதைக்கு சித்திரகூடத்துச் சிறப்பினைக் கூறுகிறான்; பலவிதமான இயற்கைக் காட்சிகளையும் வருணித்து விவரிக்கிறான். ‘மலைமுகட்டில் திங்களும் அதனால் ஒளிரும் மணிகள் சடையாகவும் மலையிலிருந்து விழும் வெண்ணிற அருவியானது இளமையான இடபத்தில் (நந்திதேவர் மீது) ஏறிவரும் சிவபிரானின் முடியில் உள்ள கங்கையை ஒத்திருப்பதனைக் காணாய்!’ என்பதாக இராமன் கூறுவதாகக் கம்பன் கூறுவான்.