புராணகாலத்தில் நில ஆராய்ச்சி!


முனைவர் நா.கி. காளைராஜன்
மன்னன் மகாவிட்ணு உடனடியாக இரண்யாட்சதனை இப்பூலோக எதிரி எனப் பிரகடணம்செய்து அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தான். தான் வழங்கியஆணையை நிறைவேற்ற, முப்பது நாற்பது கிலோமீட்டர்களுக்குக் கீழே கடலின் அடியில் மிகப்பெரிய ஆய்வகம் அமைத்து அதில் இருந்த இரண்யாட்சதனுடன் மகாவிட்ணு போரிட்டான்

அறுபடைவீடு பாதயாத்திரை – 10


முனைவர் நா.கி. காளைராஜன்
இங்குள்ள மிகவும் பழைமையான சிற்பங்களில் குடை, சாமரம், அம்மணம், சம்மணம் முத்திரைகளைக் காணமுடிந்தது.  இந்த முத்திரைகள் எல்லாம் இந்துக்களின் வழிபாட்டுமுறைகள் என்பதையும், இந்த வழிபாட்டுக் குறியீடுகளுக்குத் தாங்களே காப்புரிமை பெற்றதுபோல் எடுத்துக் கூறி, இந்துக்களை மதமாற்றம் செய்துள்ளனர் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிடேகத்தில் எல்லோரும் பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தோம்.  அபிடேகத்தின்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்  ஏழு ஏழு பேர் கொண்ட குழுவாக அர்த்தமண்டபத்தில் அமர்ந்து தணிகை வேலவனை ஆனந்த தரிசனம் செய்து கொண்டோம்.  சுவாமிக்கு சாற்றியிருந்த பட்டை எடுத்து குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குப் போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை – 9


முனைவர் நா.கி. காளைராஜன்
இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன்.  கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி.  கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை – 8


முனைவர் நா.கி. காளைராஜன்
துர்வாச முனிவர் திருவலஞ்சுழியில் யாகம் செய்யும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் மகரிஷிகள் முதலானோர் யாகத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த ஆலயத்தில் தங்கி அவரவர்கள் தம் ஆன்மார்த்த பூசைக்காக சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டுள்ளனர் என்று தலபுராணம் கூறுகிறது.  இந்த ஆலயத்தில் காணப்படும் ஏராளமான சிவலிங்கங்கள்  இத்தலபுராணத்தை வலுப்படுத்துவதுபோன்று அமைந்துள்ளன.

அறுபடைவீடு பாதயாத்திரை – 7


முனைவர் நா.கி. காளைராஜன்
“கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும், இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே யாகி துறைதோறும் பரந்த சூழ்ச்சி
பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே“
– கவிச்சக்கரவர்த்தி கம்பர்

அறுபடைவீடு பாதயாத்திரை – 6


முனைவர் நா.கி. காளைராஜன்
பழனிமலைக்கு வடக்குத் திசையில் விற்கிடை தூரத்தில் அறிஞர்களால் புகழப்படுகின்ற பிரமதீர்த்தம் உள்ளது.  மலர்மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் தன்னை நெருங்கி வரச் சென்று பொறிகளையுடைய அக்கினி கொண்டு செய்த குண்டம் இங்கு அமைத்துள்ளது இதன் பெருமையாகும்.  குமரக் கடவுளின் அருள்மிகுந்த நல்ல பூக்களையுடையது பிரமதீர்த்தம்.  இந்தப் பிரம தீர்த்தத்தில் கந்தருவர்களும் தேவர்களும் முனிவர்களும் அட்டதிக்குப் பாலகர்களும் நீராடி உள்ளனர் என்றும், இந்தத் தீர்த்த்த்தில் நீராடியவர் முத்தி பெறுவர் என்று நம்பப்படுகிறது.

அறுபடைவீடு பாதயாத்திரை – 5


முனைவர் நா.கி. காளைராஜன்
“ஏடகநாதர்“ மிகவும் பழைமையான சுயம்பு லிங்கம். திருஞானசம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏடுகள் ஆற்று வெள்ளத்தை எதிர்த்துச் சென்று கரையேறிய இடத்தில் இருந்த காரணத்தினால் “ஏடகநாதர்“ என்ற காரணப்பெயர் உண்டானது. இதனால் ஊருக்குத் திருஏடகம் (திருவேடகம்) என்ற காரணப் பெயர் உண்டானது.
சொக்கலிங்க சுவாமிகள் மலேசியாவில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் திருவேடகம் கோயில் திருப்பணிக்கே செலவு செய்துள்ளார் என்றும், தனது ஆயுட்காலம் முடியும்வரை இங்கேயே தங்கியிருந்து சமாதி அடைந்துள்ளார்.

அறுபடைவீடு பாதயாத்திரை – 4


முனைவர் நா.கி. காளைராஜன்
தற்பொழுது அதிவேகமாக நிற்காமல் செல்லவேண்டும் என்பதற்கு வசதியாகச் சாலையை அகலப்படுத்தியுள்ளனர். அதற்காகக் கோயிலை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். பக்திக்காகச் சாலை அமைத்த அரசாட்சிகள் போயி, பணத்திற்காகக் கோயிலை இடிக்கும் மக்களாட்சி முறைமையை எண்ணி வருந்திக் கொண்டோம்.

அறுபடைவீடு பாதயாத்திரை – 3


முனைவர் நா.கி. காளைராஜன்
பல்வேறு சமுதாயத்தினர் அருள்மிகு சோலைசாமியைத் தங்களது குலதெய்வமாக மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். தெய்வத்தின் மீது அளவுகடந்த பக்தியும் நம்பிகையும் வைத்திருக்கின்றனர்.
கோயில் மண்டபத்தில் ஏராளமான தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் வழிபட்டோரின் சிற்பங்கள் உள்ளன. பாண்டியரின் சின்னங்கள் இருந்தன. இந்தத் தூண் சிற்பங்களில் உள்ளவர்களின் வம்ச வழியினர் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திருவிழாவிற்கு வந்திருந்தனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை — 2


முனைவர் நா.கி. காளைராஜன்
அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி, உரோமச முனிவர் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் கட்டிய ஒன்பது சிவன்கோயில்களில் பழையகாயல் அருள்மிகு கமலாம்பிகை உடனுறை சங்குமுகேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. மதுரையில் உள்ளது போன்று இங்கும் அம்மன்கோயில் சாமிசந்நிதியின் வலப்புறம் உள்ளது. மிகவும் பழைமையான கோயில். பாண்டியனின் சின்னங்கள் தூண்களிலும் விதானங்களிலும் உள்ளன.

அறுபடைவீடு பாதயாத்திரை — 1


முனைவர் நா.கி. காளைராஜன்
தமிழ்ப்புத்தாண்டு துன்முகி சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14, 2016) வியாழக் கிழமை. காலையிலிருந்தே கடுமையான வெயில். அனற்புயல் என்று கூறும் அளவிற்கு வெப்பக் காற்று வீசியது. அதிகாலை 02.45 மணியளவில் பந்தலக்குடியில் இருந்து புறப்பட்டு காலை 09.30 மணிளயவில் சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலை அடைந்து, கோயில் மண்டபத்தில் தங்கினோம்.
சிந்தலக்கரை கோயிலில் மிகப்பிரமாண்டமான காளியின் திருவுருவமும், அனந்தசயனப் பெருமாளும் தொலைவில் வரும்போதே அடியார்களுக்குக் காட்சி அருளுகின்றனர்.

பிள்ளையார் நோன்பு — நகரத்தார் மரபு


முனைவர் கி. காளைராஜன்
வழிவழியாக, வாழையடி வாழையாக முன்னோர் செய்த செயல்களைத் தொன்று தொட்டுச் செய்து வருவதை மரபு என்கிறோம். மரபுகளைப் பேணிக்காப்பதில் இந்தியர் அதிலும் குறிப்பாகத் தமிழர் தனியிடம் பெறுகின்றனர். நாட்டுக்கோட்டை நகரத்தார் பிள்ளையார் நோன்பு விழாவை இழை எடுத்தல் என்ரு கூறுகின்றனர். பூம்புகாரில் தங்களது மூதாதையர்கள் செய்து வந்த வழிபாட்டை அப்படியே இன்றளவும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.