திருமறைக்காடு – ஊரும் பெயரும் – இலக்கிய ஆய்வு


பொன். சரவணன்
கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘ மறையினை ஓதும் காடு ‘ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.