சேக்கிழாரின் செழுந்தமிழ்


ஆனாயர் வரலாற்றைக் கூறவந்த சேக்கிழார் அப்பகுதியில் கார்காலத்தைப் பற்றி பெண்ணாக உருவகம் செய்கிறார். திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் நிலவளம் கூறும் இடத்தில் நெய்தல் நிலத்தில் ஓர் காட்சியைக் கூறுகிறார்

கம்பன் காட்டும் இலக்கியச்சுவை


இராமனைக்கண்டு மகளிர் மையல்கொண்ட ஒருத்தி தன் தோழியிடம், “என் நெஞ்சில் வஞ்சனாகிய இராமன் வந்து புகுந்துள்ளான். அவன் என் கண் வழியாக வெளியே போய்விடுவான்; எனவே அவன் வெளியேற இயலாதபடி என் கண்ணைச் சிக்கென மூடிக்கொள்வேன், இனி அவனுடன் படுக்கைக்குப் போய்ச் சேர்வோம்,” என்று கூறுவாள்.

இலக்கிய அமிழ்து-1


  கம்பனுக்கு மலையைக் கண்டவுடன் சிவபிரானின் திருவடியே நினைவுக்கு வருகிறது. அதனை இரு இடத்துக் கூறுவான். இராமன் சீதைக்கு சித்திரகூடத்துச் சிறப்பினைக் கூறுகிறான்; பலவிதமான இயற்கைக் காட்சிகளையும் வருணித்து விவரிக்கிறான். ‘மலைமுகட்டில் திங்களும் அதனால் ஒளிரும் மணிகள் சடையாகவும் மலையிலிருந்து விழும் வெண்ணிற அருவியானது இளமையான இடபத்தில் (நந்திதேவர் மீது) ஏறிவரும் சிவபிரானின் முடியில் உள்ள கங்கையை ஒத்திருப்பதனைக் காணாய்!’ என்பதாக இராமன் கூறுவதாகக் கம்பன் கூறுவான்.