இதென்ன நாடகம்?


எஸ். ஜயலட்சுமி
தமிழ்ல சொல்லும்போது, தமிழ் உன் தாய்மொழிங்கறதாலும், பேசியும் கேட்டும் பழக்கம் இருக்கறதாலும் நாம என்ன சொல்லறோம்னு கொஞ்சமாவது புரியறது. நீயே பாரு, அபிராமி அந்தாதில என் நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனைனு சொல்லும்போது தேவி வந்து நம்ம மனசில இருக்கற அழுக்கையெல்லாம் தேச்சுத்தேச்சுக் கழுவி, அலம்பி, நம்ம எல்லாரையும் பளிச்னு ஆக்கிவிட்டமாதிரி தோணும். ஆனா, இதுவே ஸ்ம்ஸ்க்ருதத்தில இருந்தா அந்த உணர்ச்சி சட்டுனு வராது.
” மணிவாசகர் சொல்லச்சொல்ல சிவபெருமானே தன் கையால திருவாசகம் எழுதினார்னு சொன்னா. அதுலேந்து எனக்கு திருவாசகம் படிக்கணும்னு ஒரே ஆசை. “