கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் — 16


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப்பயன் கொண்டவை. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகள் கரைந்து இரத்தம்சுத்தமாகும். இதனால் இரத்தமானது அதிகமான பிராணவாயுவை உட்கிரகிப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகித்து, இரத்த அழுத்தம், இரத்தசோகைபோன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

Advertisements

சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள்


அண்ணாமலை சுகுமாரன்
நிலத்தில் இருக்கும் சாதாரண சுவையற்ற நீரை உறிஞ்சித் தன்னிடம் உள்ளத்தன்மையிலால் அதில் சுவையும் சக்தியும் உருவாக்கி இளநீராக மாற்றிக்கொள்கிறது தென்னை. அதற்கு அந்த மரத்தின் தன்மையும், இயற்கையும், சுழலும் காரணமாக அமைகின்றது. அப்படியே, நமது உடலின் தன்மையும், இயற்கையும், பிரபஞ்ச சுழலும் சரிவர அமையும்போது இயற்கையாக இறைவன் நம் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்பதை உணரமுடியும். இப்படி உணர்ந்தபின், இறை அனுபவத்திலேயே இருக்க முடிவதால் தன்னால் அதிகம் பேச இயலாமல், தான் மௌனமாகிவிட்டதாகச் சித்தர் கூறுகிறார்.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌


ருத்ரா
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா,  என் உடல் என் உயிரைத்தின்கிறதா எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?

அறுபடைவீடு பாதயாத்திரை – 7


முனைவர் நா.கி. காளைராஜன்
“கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும், இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே யாகி துறைதோறும் பரந்த சூழ்ச்சி
பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே“
– கவிச்சக்கரவர்த்தி கம்பர்

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் — 10


குறுநறுங்கண்ணி குறுநறுங்கண்ணி, குண்டுமணி, குன்றிப்பூ ,குன்றி உள்ளிட்ட பெயர்களால் அறியப்படும் கொடி. இதனைக் குன்றிப்பூ என நச்சினார்க்கினியர் உரைகூறுவார். கருஞ்சிவப்பு நிறத்தில் கருமைநிறத்தில் ஒரு மறுவைக்கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச்சொல் குன்றிமணி என்பதன் திரிபாகும்.       சிலபகுதிகளில் இம்மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மரபுவழி நகைத்தொழில்செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணியைப் பயன்படுத்துவதுண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.       இது தமிழ்நாட்டில் எங்கும்…

தேவிக்குகந்த நவராத்திரி -6


மீனாட்சி பாலகணேஷ்
தேவியின் மென்மையான மலர்ப்பாதங்கள்
மாப்பிள்ளை சிவன் மணப்பெண்ணின் அழகிய முகத்தை ஆவலுடனும், காதலுடனும் நோக்குகிறார். அவர் நோக்குவதனை அறிந்த மணப்பெண் பார்வதி, நாணத்தினால் தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டிருப்பது போலவும் இவ்வடிவங்கள் அமைந்தது இந்தக் காட்சிக்கு இன்னுமே சுவைகூட்டியது. இரு வலக்கரங்களையும் இணைத்து அவர்கள் நிற்பது கண்கொள்ளக்காட்சியாகி கண்டவர் உள்ளங்களைக் கவர்ந்திழுத்தது.

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்.


ஒரு அரிசோனன்
யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பஸ்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன. விஷ்ணு ருத்ரயக்ஞத்தைச் செய்த இடம் பஞ்சபூத ஸ்தலங்களீல் ஒன்றான காளஹஸ்தியாகும்.

சித்தர்களின் “காயகற்பம்” சாத்தியமா?


அண்ணாமலை சுகுமாரன்
காயகற்பம் ஒரு பொருளல்ல அது ஒரு அறிவு. மரணம் தவிர்க்கும் வழிமுறைகளும் மரணம் தவிர்த்த மனிதர்களின் நாமங்கள் வரலாற்றிலும், வழக்கிலும் பண்டைக்காலம்தொட்டு இருந்தே வந்திருக்கின்றன. இது ஏன் சாத்தியமாகாமல் இருக்கிறது என்பதற்கு –குறை என்னமோ நம்மிடமேதான் என எண்ணத் தோன்றுகிறது,

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணம் — 4


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
களவொழுக்கத்தில் காதலரொடு புணர்ச்சி கொண்ட தலைவியின் விழிச் சிவப்பின் செழுமையைக் கண்டு, இச்சிவப்பு கலவியினாலாயிற்றோ அன்றி நீர்விளையாடலின் ஆயிற்றோ என ஐயுற்ற செவிலியர், கூந்தலில் சூடிய மலரிலிருந்து சொட்டும் தேன் துளியினைக் கண்டு, இச்சிவப்பு நீர் விளையாட்டின் ஆயது எனத் தெளிந்தார்.
இவ்வாறு வந்து தங்கிய இளவேனிலில் காமவேள்விழாநாளில் ஒருநாள், மானின் மருட்சியை வென்ற கண்ணளாகிய அம்மையுடன் மலர்த்தவிசில் விடைக்கொடி உயர்த்தவராகிய இறைவன் அகில உயிர்களும் களிப்புறும்பொருட்டுத் தாம் நிகழ்த்தும் ஒப்பற்ற இன்பவிளையாட்டினிடையில் அந்தப்புரத்தில் உள்ள பூஞ்சோலையைக் காக்கும் தெய்வக்கன்னி இடைநொசிய நடந்துவந்து, கயிலையில் அந்தப்புரத்தைச் சார்ந்து அங்குவந்து அடிவணங்கும் தேவமகளிர்களோடு செங்கை கூப்பினள்; பணிந்து எழுந்தாள்.

அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2


ஒரு அரிசோனன்
3. ஆயுதமேந்தும் உரிமை
“நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட படை சுதந்திரமான நாட்டிற்குத்[மாநிலங்களுக்குத்] தேவையென்பதால் மக்களின் ஆயுதங்களை வைத்திருக்கும், ஏந்தும் உரிமை மீறப்படமாட்டாது.”
ஒருவரிடமோ, அல்லது ஒரு துறையிடமோ அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர், அதிகாரத்தை மூன்றாகப் பங்கிட்டனர். அத்துடன் நிற்காது, அந்த மூன்று பிரிவுகளும் தங்கள் மனம்போனபோக்கில் நடந்துகொள்ளாமலிருக்க, தடைகளையும், சமப்படுத்துதலையும் [Checks and Balances] செய்யும்வண்ணம் அரசியல் அமைப்பை எழுதிவைத்தார்கள்.