குழந்தை மனசு


தேனீ மாமா
ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், அப்போதான் நாம எல்லாக் காரியத்தையும் சரியா செஞ்சு, நன்னா படிச்சு, நிறையக் கத்துண்டு பெரிய மனுஷனா வளர முடியும். எவ்வளவு வயசானாலும் குழந்தை மாதிரியே மனசைத் தெளிவா வெச்சுண்டு, தெய்வம் மாதிரி சிரிச்சுண்டு, கோவமே படாமே, இதமா, இனிமையா, எல்லார் கிட்டயும் பாசமா,பெரியவங்ககிட்ட பரிவா, பாசமா நடந்துப்பீங்களா? இந்த உடம்புக்கு வயசாகும், ஆனா மனசுக்கு வயசே ஆகக் கூடாது, ஆக விடக்கூடாது. எப்பவும் மனசைக் குழந்தை மாதிரியே வெச்சுண்டா நாமளும் சந்தோஷமா இருக்கலாம், அடுத்தவங்களையும் சந்தோஷமா வெச்சுக்கலாம்.

Advertisements

இசைத்தமிழ்


தேனீ மாமா வாங்கோ வாங்கோ குழந்தைகளா, உக்காருங்கோ, இனிய மாலை வணக்கம். இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி; இநத  இசைவிழா நடக்கறது. அப்புறம், நீங்கள்ளாம் இங்க வந்து காத்திண்டு இருப்பேளே, அதுனாலெ இசைவிழாக்குப் போகாமெ இங்க வந்துட்டேன், உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லப் போறேன். நாம நன்னா படிக்கணும், ஆனா படிப்பு மட்டும் போறாது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுன்னு பாரதியார் எழுதி  இருக்கார். அதுனாலே பாட்டும்…

பாரதியார்


தேனீ மாமா
ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம். ஆரோக்கியமா இருந்தாதான் தெம்பா இருக்கலாம். விளையாட்டுலே இருந்து படிப்பு வரைக்கும் எல்லாத்துலேயும் ஜெயிக்கலாம்.
நன்னா ஓடி விளையாடணும் அப்போதான் நம்ப உடம்பு நல்லா வளரும், நம்ம உடம்பிலேருந்து வெளியில வருதே வியர்வை. அப்பிடி வியர்வை வெளில வரா மாதிரி ஓடி விளையாடணும். ஒரே இடத்துல உக்காந்துண்டே இருந்தா என்ன ஆகும்? உடம்புல கொழுப்பு சேரும், உடம்பு தடியாயிடும், அப்புறம் நம்மால ஓட முடியாது, நடக்க முடியாது, எல்லாம் கஷ்டமாயிடும். அதுக்குத்தான் நம்மை ஓடி விளையாடுன்னு சொல்றார் பாரதியார்.

கைத்தறிப் பருத்தி ஆடைகள்


தேனீ மாமா
மஹாத்மா காந்திதான் பட்டு உடுத்துவதை நிறுத்தி, கதர் அணிவோம், அந்தக் கதரை நாமே தயாரிப்போம்னு ராட்டையிலெ நூல் நூற்க ஆரம்பிச்சார். ஆனா இப்போ விஞ்ஞானம் வளந்திடுத்து இல்லையா? அதுக்கேத்தா மாதிரி இப்பொ கதரை அரசாங்கமே பெரிய பெரிய இயந்திரம் வெச்சுண்டு தயாரிக்கிறது. நம்ம நாட்டுக் கதர்த் துணியெல்லாம் வெளிநாட்டுலெ எல்லாரும் ஆசையா வாங்கிண்டு போய்ப் போட்டுக்கறாங்க, அதுனாலெ நம்ம நாட்டுக்கு நிறைய வருமானம் வருது.

கணினி!


தேனீ மாமா அன்புக் குழந்தைகளா! ஒவ்வொரு நாளும் என்ன கற்றுக் கொள்கிறோம்  என்பதைப் பொறுத்தே  நாம் வாழ்க்கை சீராக அமையும்.  நாம் கணிணியிலும், தொலைக் காட்சிப் பெட்டியில் விளையாடும் விளையாட்டுகளிலும்,  ஐபேடிலும், டாப்லெட்டிலும்  நம் பொழுதை அதிக நேரம் கழிக்கிறோம். உண்மையில் நாம் இந்த மூன்றிலும் கற்றுக் கொள்ள ஏராளமான நல்ல நுணுக்கங்கள். விஞ்ஞான விளக்கங்கள், தொழில் நுட்பங்கள், மற்றும் உலகத்தில் நடக்கும் அன்றாட  நடப்புகள், பூகோள மாற்றங்கள் விஞ்ஞான முன்னேற்றங்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன கூகிள்…

வருமுன் காப்போம்!


தேனீ மாமா http://wp.me/P4Uvka-ui  மழைக் காலத்திலே இவ்ளொ நாளு பூமிக்குள்ள இருந்த சின்னஞ் சிறு பூச்சிகள் எல்லாம் இப்போ வெளியே வரும்.  பூச்சிகள்ளே பலவிதம் இருக்கு.  “செய்யான்னு” சொல்வாங்க பெரியவங்க, சிறு பாம்புன்னும் பல பேரு சொல்வாங்க. மெலிசா ட்வைன் நூல் மாதிரி இருக்கும், ஆனால் பாம்பு மாதிரியே நெளிஞ்சு போகும், இந்தச் செய்யான் காதிலே புகுந்துட்டா குடைஞ்சு எடுத்துடும். அதுனாலே தரையிலே படுக்கும் போது நல்ல கனமா துணி போட்டுகிட்டு, காதிலே பஞ்சு வெச்சிகிட்டுதான் படுக்கணும்.…

அஸ்திவாரம்


தேனீ மாமா http://wp.me/P4Uvka-sz  சுவர் பலமா இருக்கணும்னா அதுக்கு அஸ்திவாரம் பலமாப் போடணும், அப்போதான் அந்தச் சுவர் விழாம பத்திரமா பாதுகாப்பா நிக்கும். இப்போ புறியறதா, சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்னுட்டு ஏன் பெரியவா சொன்னான்னு? அதே மாதிரி நம்ம உடம்பு இருக்கே, அது சுவர் மாதிரி. அந்த உடம்பை நோயில்லாமப் பாதுகாத்தாத்தானே நாம நல்லா இருக்க முடியும்?

மாறுவேடப் போட்டி


தேனீ மாமா http://wp.me/P4Uvka-rv  பல பள்ளிகளில்  இந்த மாறுவேடப்போட்டியை ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா? நம் நாட்டில் ஏற்கெனவே இருந்த மகான்கள், தேச விடுதலைக்காக  பாடுபட்ட  பல தியாகிகள், மற்றும் தெய்வ உருவங்கள் போன்று மாறுவேடமிட்டு  குழந்தைகள் வரும் போது அவர்களை  அந்தந்த  உருவங்களுக்கு ஏற்றார்ப்போல் நடிக்கவும் சொல்லிக் கொடுக்கிறோம். இதன் மூலமாக  குழந்தைகளுக்கு  பல பெரியவர்களைப் பற்றி  அறிந்துகொள்ளும் வாய்ப்பும்,  தங்களுடைய  இயலவை விடுத்து  ஏற்றுக்கொண்ட  பாத்திரமாக  மாறும் கலையான  நடிப்புக் கலையைச் சொல்ல்லிக் கொடுக்கிறோம்.

பூகம்பம் [நிலநடுக்கம்]


தேனீ மாமா http://wp.me/P4Uvka-qp   அன்புள்ள குழந்தைகளே, வாங்க வாங்க, எல்லாருக்கும் இனிய மாலை வணக்கம். இன்னிக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பற்றி உங்களுக்கெல்லாம் சொல்லப் போறேன். ஆமாம், சமீபத்திலெ நேப்பாளத்திலே பூகம்பம் [நிலநடுக்கம்] வந்ததே, உங்கள்ள எத்தனை பேருக்கு தெரியும். அட, எல்லாரும் கையை தூக்கறீங்களே, அப்பிடித்தான் இருக்கணும். நாட்டுலெ நடக்கிற விஷயங்களைப் பத்தி உடனே உடனே தெரிஞ்சுக்கணும். அப்போதான் பொது அறிவு வளரும். அந்த பூகம்பம் வந்த அன்னிக்கி நிறைய பேரு கட்டிடமெல்லாம் இடிஞ்சு விழுந்து அந்த…

தொத்து நோய்கள்


தேனீ மாமா http://wp.me/P4Uvka-pd  எல்லா நாட்டுலேயும் பன்றிக் காய்ச்சல்னு ஒரு நோய் பரவுதே, அதைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரியுமா? உண்மையிலெயே உயிரைப் பறிக்கும் ஒரு கொடூரமான நோய். பல நாடுகள்ளே பலபேரோட உயிரைக் குடிச்சிடுத்து. சரி நாம ஜாக்கிறதையா இருக்கணும் இல்லையா? அதுக்காக சொல்றேன், நாம் எப்பவுமே நல்லா குளிச்சு, சுத்தமான, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்றோம், இருந்தாலும் சில சமையத்துலே நம்மையும் சில விஷ ஜுரம் பிடிச்சுக்கறது இல்லையா? அதுனாலே இந்த நேரத்துலே இன்னும் ஜாக்கிறதையா…

பயிற்சி


தேனீ மாமா http://wp.me/P4Uvka-oh  பயிற்சின்னாலே ரெண்டு பயிற்சி இருக்கு. ஒண்ணு உடற் பயிற்சி, ரெண்டாவது மனப்பயிற்சி. எந்த  ஒரு பயிற்சியை  தொடங்கினாலும் முதல் நாள் ஆர்வமா போவோம், மறுநாள் நம்ம உடம்பு  சுகவாசியாகி  வேண்டாமே  நிறுத்திவிடலாம்னு   சொல்லும். ஆனா  அன்னிக்கு  உடம்போட பேச்சைக் கேட்காம  மன உறுதியோடு  மறுநாளும்  அதே பயிற்சி வகுப்புக்கு போயிட்டா மூணாம் நாளிலேருந்து நமக்கு அது பழகிப் போயிடும். அதுனாலேதான்  பெரியவங்க  இரண்டாம் நாள் பயிற்சியை மட்டும் செய்யாம இருக்கக் கூடாதுன்னு   சொல்வாங்க

குழலியும் கண்ணனும் – 4


விண்மீனா http://wp.me/P4Uvka-o2    “பாப்பா, அதுக்குப் பெயர் கொடுக்காப் புளி என்பார்கள்.  சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும், ” என்ற கமலிப் பாட்டி, விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடமிருந்து நன்றாக, வெடிக்காமல் இருந்த சில சுருள்களை வாங்கினாள்.  நன்றாகத் துடைத்து விட்டு, உரித்து இரண்டு பேருக்கும் கொடுத்தாள்.  லேசான இனிப்போடு இருந்த அதைத் தின்ற குழலி ஆச்சரியப் பட்டாள்.  நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டாள்!             “இத, சீனிப் புளியங்கான்னும் சொல்லுவாங்க கண்ணூ.” என்றாள் அவற்றை விற்ற பாட்டியம்மாள். …