பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி


ருத்ரா
தலைவன் பொருள்தேடி செல்லும் காட்டுவழியில் குத்துக் குத்தாய் முளைத்திருக்கும் கரும்புகள் அருகில் உள்ள ஒரு நீண்ட திரண்ட பெருங்கல் ஒன்று இடம் பெயர்ந்து அவற்றின் மேல் விழுந்து பொருந்தி நசுக்கியதால் அருகில் உள்ள இலை தழைகளில் எல்லாம் இனிய நீர் இழைந்தோடியது.அதை வண்டுகள் அருந்தி மயங்கின. அருகில் வந்த ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டி சுவைக்க முற்பட்டது.அந்த அடர்ந்த இருட்டு சூழ்ந்த காட்டில் அது தன் சிறுகண் கொண்டு வியந்து நோக்கி விதிர் விதிர்த்தது.

Advertisements

கொடுவரி முதலை குடை தண் துறைய‌


ருத்ரா
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா,  என் உடல் என் உயிரைத்தின்கிறதா எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?

அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

இராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்


மீனாட்சி பாலகணேஷ்
சிவபெருமான் ஆடவருக்கே உரிய, மிக விறுவிறுப்பான தாண்டவம் எனும் நடனவகையில் அவர் தலைசிறந்த விற்பன்னர். சிவபிரானுடைய இந்தத் தாண்டவ நடனத்தைப் பற்றிய ஒரு அருமையான தோத்திரம் சமஸ்கிருதத்தில் உள்ளது. நடனத்தின் ஜதிகளுக்கேற்றவாறு இந்தத் தோத்திரத்தின் சொற்பிரயோகங்கள் அமைந்து படிப்போரைப் பரவசப்படுத்துகின்றன.

குறள் வழி காந்தீயம் 


டாக்டர் கே. ராஜாராம்
அருளுடை காந்தீயம் வாழ்நிலை அஃதிலார்க்கு
இருள் மனம் பூண்ட உடம்பு.
இனிய “சத்திய சோதனை” நீக்கிப் பிறிதொன்றோதல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

தமிழே! தவிக்கின்றேன்!


ஒரு அரிசோனன்
தன்னைத்தான் தானுயர்த்தித் தோள்தட்டிப் பேசிடுவார்
தன்னலமே தலையாகக் காரியங்கள் செய்திடுவார்
தாயேயுன் திருநாமம் தன்னைவிலை பேசிடுவார்
தாயேயென் தவிப்பையார் காதுறுவார்?

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 14


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“இந்திரன், பிரம்மா, சிவன், தேவர்கள் எல்லாரும் உன்னைவழிபட சிறந்தமலர்களைக் கொண்டுவந்து பிறர்கண்களுக்குத் தெரியாதபடி மறைவாக நிற்கிறார்கள். உன் அழகைக்கண்டு அவர்கள் கண்பட்டுவிடாமல் நான் உனக்கு அந்திக்காப்புச் செய்ய நீ வந்தருள்வாய்.”
ஆயர்பாடிப்பெண்கள் கிருஷ்ணன் செய்யும் இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்? நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகானகதை மட்டுமே. நம்புவோருக்கு இது பரமாத்மா ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு.

கலித்தொகை கதைகள் – 9


முனைவர் ஜ. பிரேமலதா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . .
நாகத்தைப் போலவும், சிறுகுடிமக்கள் போலவும் தலைவியும் அஞ்சி நடுங்கி துயில்கொள்ளாது துன்புற்று வருந்துகிறாள். இங்கு அவளைத் துன்புறுத்துவது, உன்னுடைய திருமண முயற்சியின்மையே! உங்களுடைய களவு வெளிப்பட்டதால் தாயும் இடிபோல் முழங்கி அவளைஅச்சுறுத்துகிறாள்.

கலித்தொகை கதைகள் – 8


உன்மீதுகொண்ட காதல்நோய் ஒருபுறம் அவளை வாட்டுகிறது. மறுபுறம் ஊராரின் அலர் அவளைத் துன்புறுத்துகிறது. எனினும், தன்னுடைய வருத்தத்தை அவள் என்னிடம்கூடச் சொல்லவில்லை. திருமண நினைவின்றி கனவிலேயே வாழநினைக்கும் உன் பண்புகெட்ட தன்மையைப் பிறர் அறியாதபடி அவள் மறைத்த காரணம், உன்னைப் பிறர் இகழ்வார்களோ என்ற நாணத்தினால் அன்றோ? இத்தகைய அரியபண்புடைய தலைவியின் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தே நீதான்.

சிறைக்கண் பீலி அதிர்தர ஆங்கண்


ருத்ரா இ.பரமசிவன்
ஊழ் என்னே!பாழ் என்னே!அடுநனி காதலின்
அழல்பெய் மழையில் எனை மாய்ந்தே ஒழியும்
வண்ணம் செய்தனள் வாழியவள் நலனே.
கொத்துகொத்தான இலைகள் நடுவே அந்தச் சிறு பூங்கொத்துகள் நுண்ணிய மகரந்தங்களை சிதறவிட்டாற்போல் அவள் தன் மெல்லிய சிரிப்பைச் சிந்தி என்னோடு ஒரு போர்க்களம் புகுந்தாள்.(பொருதனள்).
காதலால்தானே அவள் இப்படி என்னுடன் மோதுகிறாள்? இது ஒரு பொய்ச்சண்டைதானே! இருப்பினும் இது எனக்கும் வலிக்கும்; ஆனால் வலிக்காது.

பல்வரி நறைக்காய்


ருத்ரா இ. பரமசிவன்
http://wp.me/p4Uvka-LP
கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே, அதுபோல மன உறுதி கொண்டவள் நான். உண்ணப்போவதில்லை. காற்று உண்டு கூட வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்!

இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள்கொண்ட தும்பிபோன்றது. அந்த இதயம் நின்று உயிர்நீங்கும் காட்சியைக் காணச் சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்!

இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!


ஒரு அரிசோனன்
http://wp.me/p4Uvka-EH
இயற்கையன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!
தாங்கமுடியவில்லை சென்னையால்!
உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!
நிறுத்தம்மா உன் கண்ணீரை! போதுமம்மா உன்னழுகை!
தாங்கமாட்டோம் நாங்கள் இனியுன் வேதனையை!
திருந்துகிறோம், திருந்துகிறோமம்மா மதலைகள் நாங்கள்!