பாடிப்பறந்த குயில் – 5


வையவன்
http://wp.me/p4Uvka-Hc
ஜீவானந்தம் பதறிப்போய் அவனைத் திரும்பிப்பார்த்தான். சாதாரண வார்த்தையொன்று சொல்லியவன்போல் தியாகராஜன் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எது வாயில் வரக்கூடாதோ அதுவே தியாகராஜன் வாயிலிருந்து வந்தது. அவன் அபிப்பிராயம் என்ன என்பது மூடுமந்திரமாக, பெரிய புயலுக்கோ மழைக்கோ சூலுற்றிருக்கும் வானம் போல் எச்சரித்தபடியேயும் இருந்தது. அதற்கப்புறம் ஜீவானந்தம் பேசவேயில்லை. எழுந்து கைகழுவச் சென்றபோது மட்டும் தற்செயலாகக் கங்காவின் கண்கள் அவனைச் சந்தித்தன. மேனியெல்லாம் காயம்பட்டுத் தீனமாகப் பார்க்கும் பேடைப் புறாவைப்போல் அந்த சமயத்தில் கங்கா புறப்பட்டாள். சரேலென்று ஜீவானந்தம் அவளைக் கடந்துவிட்டான்.

Advertisements

ஒரு ஜமக்காளத்தின் கதை!


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Gp
பழையதாகிவிட்டாலும், பளபளப்பும் அழகும் இம்மியும் குறையாத அந்த பவானிஜமக்காளத்தை பக்திசிரத்தையாக விரித்தாள். எல்லாரும் அமர அதில் இடமிருந்தது. ஜமக்காளத்தின் விளிம்பைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு என்றும்போல இன்றும் நெஞ்சம்தழுதழுக்க, அப்பா சுந்தரம் தன்தலையில் கைவைத்து ஆசிர்வதிப்பதுபோல உணர்ந்தபடி, உடலெல்லாம் சிலிர்க்க, நான்குமூலைகளிலும் பச்சைக்கிளிகள் கொஞ்சும் அந்த தங்கநிறப் பட்டுஜமக்காளத்தில் அமர்ந்தாள் உஷா.

பாடிப்பறந்த குயில் — 4


வையவன் http://wp.me/p4Uvka-F1  தியாகராஜன் கலகலவென்று சிரித்தான். “இந்தப் பெண்ணுக்கு மரியாதை தெரியல்லே. ஆனால் அழகாகக் கோவிச்சுக்கிறாள், இல்லையா மிஸ்டர் ஜீவன்?” என்றான். இந்த வெட்கமற்ற பேச்சும், அவனைக் கேலிசெய்வதுபோல் இருந்த அந்தக் கேள்வியும் ஜீவானந்தத்தைக் கொதிப்புறச்செய்தன. ஆனால் அவனுக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. தன் அதிருப்தியைக் கண்களில் காட்டிக்கொண்டான். நிஷா அவனுக்காக, சும்மா இருப்பவள்போல் திரும்பிநின்று, அருவியின் ஓட்டத்தைக் கவனிக்கலானாள். “நான் இறங்கி வந்துகொண்டிருக்கிற போது வேட்டை நாளைக்குன்னு என்னவோ பேசிக் கொண்டிருந்தாப்போலிருக்கு. என்ன விஷயம்? எனக்கு…

பாடிப் பறந்த குயில் – 3


வையவன்
http://wp.me/p4Uvka-Eo ஜீவானந்தம் அவரைப் பற்றிய யோசனைகளிலிருந்து மெல்ல விடுபட்டபோது, வெகு அருகில் குதிரையின் குளம்படியோசை கேட்டது. வேகமாக அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு துப்பாக்கியின் கடடைப் பகுதி அவன் தோள் மேல் பட்டு அவனைப் புதர் ஓரத்துக்கு உந்தித் தள்ளியது. அவன் ஆத்திரத்தோடு நிமரிந்து பார்த்தான். சாக்லெட் வர்ணத்தில் வேட்டைக்காரர்கள் அணிவது போன்ற ஒரு கோட்டும் தொப்பியும் அணிந்து கொண்டு, கடுகடுப்பான பார்வையும், ஏளனமான புன்னகையுமாய் ஒரு சிவந்த மனிதன் குதிரையை இழுத்துப் பிடித்தான். அவனுடைய இடது கையில் இருந்த வேட்டைத் துப்பாக்கி வெய்யிலில் பளபளவென்று மின்னியது.

தேவிக்குகந்த நவராத்திரி — 5


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-DM
9. தேவியின் தாம்பூல மகிமை!
அப்போது அவளைக் காண தேவசேனாபதியான சுப்பிரமணியன், தேவர்களின் தலைவனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு முதலானோர் வருகைபுரிகின்றனர். தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை வென்று வெற்றிபெற்றதை அன்னையிடம் கூற ஒடோடி வந்துள்ளான், அருமைமைந்தன்.
நேராக யுத்தகளத்திலிருந்து வருவதால், கவசம் தலைப்பாகை முதலியன தரித்திருந்தவன், தலைப்பாகையை மரியாதையின் நிமித்தம் கழற்றிவிட்டு அன்னையிடம் வந்து வணங்குகிறான்.

பாடிப்பறந்த குயில் – 2


வையவன்
நீங்க உணர்ந்துட்டா சரிதான். என்ன கேட்டீங்க? இந்த வெய்யில்லே ஏன் கஷ்டப்படறேன்னுதானே! நீங்க பாருங்க, உழைப்பிலேதான் மனிதனோட பெருமையெல்லாம் இருக்கு. நீங்க பாருங்க சின்னப் பிள்ளை. இப்படிக் கேட்கலாமா? லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே இந்த உலகம் வெறும் மண்ணும் கல்லுமாயிருந்தது. மனிதனின் வேர்வைதானே இன்னைக்கு நாம் பார்க்கிற மெஷின், வீடு, நாகரிகம் எல்லாம். மனிதன் வயசை நெனச்சி வெய்யிலைப் பார்த்து உழைப்புக்கு அஞ்சியிருந்தா இதெல்லாம் நீங்க பார்க்க முடியுமா?

பாடிப் பறந்த குயில் — 1


வையவன்
http://wp.me/p4Uvka-Bu ஜீவானந்தம் அருவியில் யாரோ கடகடவென்று வாயைக் கொப்பளித்து உமிழும் சத்தம் கேட்டு, யோசனையிலிருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்தான்.

நிஷா குளித்துக் கொண்டிருந்தாள்.

கன்னங்கரிய கூந்தல் தலைக்கு மேலே கட்டியிருக்க அவளுடைய பொன்னிறமான முதுகு ஜலத்தில் பட்டு, பரப்புக்கு மேலே தெரிந்தது. ஜீவானந்தம் வந்ததை அவள் பார்க்கவில்லை. எனவே சுயேச்சையாக நீந்திக் கொண்டிருந்தாள். சதைப் பற்றான தோள்களும் கடைசல் பிடித்தாற் போன்ற அமைப்பான கரங்களை அவள் வீசி வீசிப்போடும்போது, அவை அசைந்த அழகும் ரம்மியமாக இருந்தன.

காவேரிப்பாட்டியின் கோலங்கள்  –  6


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/p4Uvka-Am              பிள்ளையார், பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்! இதோ, திரும்பிப் பார்த்தால் விநாயக சதுர்த்தி.  வாசலில் போட அருமையான, அழகான பெரிய கோலம் ஒன்று வேண்டுமே! காவேரிப்பாட்டியின் புத்தகத்தில் கோலங்களுக்கா பஞ்சம்? பெரீ…ய்ய பெரிய அழகான கோலங்கள்.  ‘எதை வேண்டுமானாலும் போடலாமடி பெண்ணே!’ என்பாராம் பாட்டி.             ‘முத்துப் பந்தலில் மூஞ்சூறு வாகனன்’ என்று அமர்க்களமாக ஒரு தலைப்புக் கொடுத்துக் கோலம் போட்டுக் காட்டினேன்.  பாட்டி மட்டுமா? தெருவே அசந்து போயிற்று!  முத்துப்…

ஒருமித்த உள்ளங்கள்


செம்பூர் நீலு
http://wp.me/p4Uvka-zz
”இந்த கான்சர் வியாதி ஒருத்தருக்கும் வரக்கூடாது. வந்துவிட்டால் வேறு வழியில்லை. பேஷண்ட்டை நன்றாகக் கவனித்து, அவர்கள் மனது புண்படாமல் நடந்து, அவர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அதுதான் நாம் செய்யவேண்டிய முக்கியமான கடமை. மாமியைப் பொருத்தமட்டில் இந்த வியாதிபற்றிய விபரம் உஙகளுக்கு தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டாம். நீங்கள் உங்கள் அம்மாவிற்கு செய்கிற முக்கியமான கடமை. அதுதான் அவளுடைய மனோதைரியத்தை குலைக்காமல் இருக்கும். அவர்களுக்கும் இந்த வியாதியை ஏற்றுக்கொண்ட மனநிலை கடைசிவரை இருக்கும். எப்பொழுதும் நார்மலாக இருக்கிறமாதிரியே இருங்கோ,“ என்று சொல்லிவிட்டு, ஸி.டி ஸ்கான் ரிபோர்ட்டை, குமாரின் கையில் கொடுத்தார்.

புதுக்கலிக் கவிதைகள் — 2


பேரா. சந்திரசேகரன் சுப்பிரமணியம்
http://wp.me/p4Uvka-z9
வன்பால் கலி
பச்சை மண்ணடா இப்பாரதம் ஆளும் பெண்ணடா

இச்சை கொண்டே காதல் மணம் புரிந்து வாழாமல்

இவரிடம் கொடும் பாலியல் வன்மம் ஏனடா இவரை

துச்சம் என மதிக்கக் காரணம் ஆண் ஆளுமையல்ல

கச்சை கட்டாமல் காட்டக் கூடாதாவற்றை கத்தைக்

கத்தைக் காகிதப் பணநோட்டுக்குக் காட்டி விட்டு

முத்தைச் சிப்பிபிரித்து அழகு ஆபரணத்தில் காட்டா

நடுப்பக்கத்தில் சொத்தை நாளேடுகளில் வண்ணமாய்

நாளும் நன்றாய் காட்டியே நவநாரீகம் எனப்பேசுவார் மத்தியில்

நறு வண்ணக் குளத்தில் பெருமீன் நிறைய இருப்பின்

வெண்நரை நாரையும் தேடிவந்து மீன் கொத்தாதோ?

புதுக்கலிக் கவிதைகள் — 1


பேரா. சந்திரசேகரன் சுப்பிரமணியம்

திருமணக் கலித்தொகை – இருமணக் கலி

http://wp.me/p4Uvka-yy

தலைவியவள் தாமரைப் பூஅன்ன முகம் நிமிர்த்தி

குவளைக்கண் அன்ன நீர் துடைத்து எந்தன்

முன்னாள் காதலன் ஆற்றிய மென்பணியில் கிட்டிய

வன்தொகை எனது ஊதியத்தொகையை விட குறைவு என்பதால்

ஆண் வர்க்க ஆளுமை காட்டி விவாக ரத்து கேட்க

நானோ குறைவூதியம் பெறும் பணிக்கு மாறட்டுமா என

அவன் தாள் பணிந்தும், அவன் தாளை நீட்ட தாலிக்கு எது வேலி ?

என நினைந்து தலையெழுத்தை கையெழுத்தாய் அதுவரை

தாயாகாமல் போட்டு விட்டேன் என விசும்பினாளே

காவேரிப்பாட்டியின் கோலங்கள்-5


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-xV
அரிசிமாவால் கோலம் போடுவது எதற்காக? நமது உணவை பூச்சி, எறும்பு முதலிய மற்ற சிறிய ஜீவராசிகளுடனும் பகிர்ந்து உண்பதற்காகத்தான்- நிதானித்துநின்று பார்த்தால், அரிசிமாக்கோலத்தில் கொஞ்சநேரத்திலேயே எறும்புகள் மொய்க்க ஆரம்பித்துவிடுவது புலப்படும். “கொஞ்சம் சர்க்கரை கலந்தால் எப்படி இருக்கும்?’ எனக் குதர்க்கம் பேசக்கூடாது.

நாம் உண்ணும்முன் காக்கைக்குச் சாதம்போடுவது போன்றதுதான் இது. இப்போதெல்லாம் ஒரு வெள்ளைக்கல்லைப் பொடிசெய்து கோலமாவு என விற்கிறார்கள். அதனை உபயோகப்படுத்தாதவரை எறும்புகளுக்கும் நமக்கும் நல்லது! பாம்பு கோலம் 1. அடுத்து, விடியற்காலையிலேயே வாசலைப் பெருக்கிக் கோலம்போடுவது என்பது பெண்கள் கடைப்பிடித்த ஒரு உடற்பயிற்சி எனலாமா? வாசலில் சாணநீர் தெளித்துப் பெருக்கி, சுத்தப்படுத்தி, ஒரு அழகான கோலத்தையும் போடுவதுடன் நாள் நல்லவிதமாக ஆரம்பிக்கிறது என்ற உற்சாகம் உள்ளத்தில் பெருகுகிறது. அதனால்தான் துக்கம் நிகழ்ந்த வீட்டில் வாசலில் கோலம்போடுவதில்லை.