கழுதைக்குக் கல்யாணம்!?


கே. செல்வன் மூதேவி என்பது திட்டும் வார்த்தையாக இன்று ஆகியிருந்தாலும் மூதேவியின் வரலாறு நம் மரபுகளுடன் நீண்ட தொடர்புடையது. புராணங்களின் படி மூதேவி திருமகளுக்கு மூத்தவள். பாற்கடலை கடைகையில் மூதேவி முன் தோன்றி, அதன்பின் ஸ்ரீதேவி தோன்றினாள். முதலில் தோன்றியதால் மூத்த தேவி-> மூதேவி என மருவியது என்பார்கள். அதனால் வடக்கே மூத்தவள் என்பதை குறிக்கும் ஜேஷ்டா தேவி எனும் பெயரும் உண்டு. தமிழில் மூதேவிக்கு அழகாக தவ்வை என்ற பெயருண்டு. வள்ளுவர் இரு குறள்களில் மூதேவியை…

அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

கையாலாகாதவனாகிப்போனேன்! — 2


ஒரு அரிசோனன்
2. மூக்குக்கண்ணாடி
“வேண்டாம். கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா? எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.
“ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா! ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.” இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!
“கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா! இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல. இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

பாடிப்பறந்த குயில் – 8


வையவன்
தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலிக்கு அருகில் சென்று தானும் தண்ணீர் பருக ஆரம்பித்தது புதிய புலி. சிறிது நேரம் சென்றதும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு முதலில் வந்த பெண்புலியின் உடலை நக்கிக்கொடுக்கத் தொடங்கிற்று. பெண்புலியும் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி, ஒரு வீட்டு நாய்போலக் கழுத்தை இசைவாக அதற்குக் காட்டிற்று.

பாடிப்பறந்த குயில் – 7


வையவன்
தினசரி ராவுஜியின் வீட்டுக்குப் போவது தவறவில்லை. ஆனால், இப்போது அவர் அறையோடு சரி. முன்போல் வீட்டுக்குள்ளே நுழைந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவதென்பது அவனாலேயே முடியாமற்போய்விட்டது. ஆனால் காலைவேளைகளில் மாடிச் சந்திப்பு நிகழ்ந்துவந்தது
“மனப்பூர்வமாக உங்களுக்கு என்னை ஒப்படைத்துவிட்ட பிறகு, அடிக்கடி நடக்கும் இந்தப் பெண்பார்க்கும் நாடகத்தில் நான் நடித்துக்கொண்டே இருக்கவேண்டுமா?”

தேவி தரிசனம்


ஒரு அரிசோனன்
http://wp.me/p4Uvka-QS
அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதை மட்டுமே என்னால் உணரமுடிந்தது. அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.
காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது. என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.
என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

பிள்ளையார் நோன்பு — நகரத்தார் மரபு


முனைவர் கி. காளைராஜன்
வழிவழியாக, வாழையடி வாழையாக முன்னோர் செய்த செயல்களைத் தொன்று தொட்டுச் செய்து வருவதை மரபு என்கிறோம். மரபுகளைப் பேணிக்காப்பதில் இந்தியர் அதிலும் குறிப்பாகத் தமிழர் தனியிடம் பெறுகின்றனர். நாட்டுக்கோட்டை நகரத்தார் பிள்ளையார் நோன்பு விழாவை இழை எடுத்தல் என்ரு கூறுகின்றனர். பூம்புகாரில் தங்களது மூதாதையர்கள் செய்து வந்த வழிபாட்டை அப்படியே இன்றளவும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.

சண்டாளிகா — 1


மூலம்: ரவீந்திரநாத் தாகூர் — தமிழ் மொழிபெயர்ப்பு: மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Kv
பிரகிருதி: நான் சொன்னேன்: “நான் ஒரு சண்டாளினி; இந்தக் கிணற்றுநீர் அசுத்தமானது.” அதற்கு அவர், “என்னைப்போல நீயும் ஒரு மனிதப்பிறவிதான். சூட்டைத் தணிவித்து, தாகத்தினை அடக்கும் எல்லாநீரும் புனிதமானதே,” என்றார். எனது வாழ்க்கையிலேயே முதல்முறையாக நான் அப்படிப்பட்ட சொற்களைக்கேட்டேன்.
தாய்: ஆண்களின் சொற்கள் கேட்டுக்கொள்வதற்கு மட்டுமே, கடைப்பிடிக்கப்படுவதற்கு அல்ல என்று அறிந்துகொள். கெட்டவிதி உன்னை இந்த மண்ணாலான சுவரின்மீது அழுத்தியுள்ளது; உலகத்தில் எந்த மண்வெட்டியினாலும் அதனைப்பெயர்த்தெடுக்க இயலாது! நீ அசுத்தமானவள்: வெளியுலகை உனது அசுத்தமான தோற்றத்தினால் கறைப்படுத்தாதே!

நினைவுகளுடன் ஒருத்தி  – 3


சீதாலட்சுமி
சமூகசேவகி
கடவுளின் தவிப்பு. மனிதன் அவரை அமைதியாக இருக்கவிடவில்லை. எப்பொழுதும் துரத்திக்கொண்டே இருக்கின்றான். யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளியமுடியும்?! மனிதன் எட்டிப்பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

பாடிப்பறந்த குயில் — 6


வையவன்
http://wp.me/p4Uvka-Ky
நிதானமான நடையோடு அவன் பஸ் ஸ்டாண்டை அடையும்போது அவள் அவனைக் கடந்தாள். சிவந்த மேனியும், கம்பீரமான சாந்தமும் முகத்தில் நிலவ, அடர்ந்திருந்த கூந்தலைச் சுயேச்சையாய் அவிழ்த்துவிட்டு, ஆடிய இளங்காற்றில் அதை ஆற்றிக்கொண்டிருப்பது, பகீரதன் தவத்திற்காக மஹாகங்கை வானின்று இறங்கி வந்த ரவிவர்மாவின் படம்போல் அவனுக்குத் தோன்றிற்று. நினைவில் கல்வெட்டுபோல அந்த முகமும் நடையும் பதிவாகிவிட்டன.

விருந்து


ஹரி கிருஷ்ணன்
விருந்தோம்பல் என்பது உறவினருக்கு உணவளித்தல் இல்லை. அறிமுகமில்லாத ஒருவருக்கு உணவளித்தல். விருந்தாளி என்றால் புதியவன்; அறிமுகமில்லாதவன் என்பது பொருள்.
“என்னப்பா சுக்ரீவா! உன் மனைவியைக் காணோமே. என்னைப் போலவே நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?” என்று கேட்கிறான். ருமையைச் சுக்ரீவன் பிரிந்திருப்பதும், வாலியின் ஆளுகைக்கு அவள் உட்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தன்னைப் போன்றதொரு நிலையிலே சுக்ரீவன் இருப்பதை அறிகிறான். இந்த உணர்வு ஒற்றுமையே வாலியைக் கொல்வதற்கு உடனடி முடிவை இராமன் எடுக்கக் காரணமாகிறது.

நினைவுகளுடன் ஒருத்தி — 1


சீதாலட்சுமி
சமூகசேவகி
http://wp.me/p4Uvka-I1
முதுமை இவ்வளவு கொடியதா? வாழ்வியலில் பன்முகம் தெரிந்தவள். அவளே திணறினாள். சுருண்டாள் அழுதாள் ஒடுங்கிப் போயிருந்த அவளை மனக்குரல் தட்டி எழுப்பியது. அனுபவங்களின் சக்தி அவள் மனச்சிமிழைத் திறந்தது.. சிறிது சிறிதாக அவளிடம் ஓர் புத்துணர்வு. அவள் துவண்டு போக மாட்டாள். மரணத்தையும் வரவேற்கும் வலிமை பிறந்துவிட்டது முதுமையில் துணையிருப்பது நினைவுகள்