கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22


முனைவர் இரா. இராமகிருட்டினன்
சோழர் ஆர் என்ற அத்திப்பூவையும், பாண்டியர் வேப்பம்பூவையும் சேரர் போந்தை என்ற பனம்பூவையும் சின்னங்களாகப் பெற்றிருந்தனர். கோவூர்கிழார் சோழ மன்னனைப் பார்த்து நின்னைப் பகைத்தவன் சேரனும் அல்லன், பாண்டியனும் அல்லன், வேறு ஒரு சோழனே என்று எடுத்துரைக்க அவரவர் பூச்சின்னங்களைப் பயன்படுத்தினார்.

Advertisements

சுப்பிரமணிய புஜங்கம்


மீனாட்சி பாலகணேஷ்
புஜங்கக் கவிதையுள் அமைந்துள்ள சொற்கோவைகள் ஒரு பாம்பானது வளைந்து வளைந்து ஊர்ந்துசெல்வதுபோல இருப்பதனால் இத்தகைய கவிதை அமைப்புக்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது. சுப்பிரமணியக்கடவுளின் பெருமை, உயர்வு, முடிவற்ற தன்மை ஆகியவற்றை இரு விதங்களில் ஆதிசங்கரர் விளக்குகிறார்.

கலித்தொகை கதைகள் – 10


முனைவர் ஜ. பிரேமலதா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
நானும் உனக்கு உறுதுணையாக இருக்கிறேன். உன்பொருட்டு நானும் சிந்தித்தேன். அவனே உனக்கு ஏற்ற மணவாளன் என்று உணர்ந்தேன். இனியும் யோசிக்கவேண்டியிருந்தால் நாம் இருவருமே கலந்துபேசி ஐயம் தீர்த்துக்கொள்வோம். அவனை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன். இனி யோசிப்பதிலே பயனில்லை; தயங்காதே. உன் காதலை அவனிடம் எடுத்துரைத்து மகிழ்ச்சியோடிரு!

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப் புராணம் – 5


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
வலிய கையில் தாங்கும் வில்லிலிருந்து தொடுக்கும் மலர்க்கணைகள் முற்றிலும் தீர்ந்து விட்டன. நீர்த்துறைகளில் வெண்மையான சங்குகள் மணி சொரியும் வயல்களில் சுரும்பும், பொய்கையில் பல்வகைப்பூக்களும் முழுவதும் எய்து முடிந்தமையால் அற்றுப் போய்விட்டன. எய்யக் கணையில்லமல் போய்விட்டமையால் மன்மதனும் தோற்றான்.
கருப்பினந் கரும்பு வில்லினனாகிய மன்மதன். போருக்குப் பின் தோற்ற அர்சர்கள் வென்றவனுக்குத் திறைசெலுத்துவர். அதுபோல, கோங்க மரங்கள் பூத்தன, அவ்வாறு பூத்திருந்தமை மன்மதன் அலங்கரிக்கப் பட்ட தேரினைத் திறையாக நிறுத்தியதை ஒத்திருந்தது.

கலித்தொகை கதைகள் – 9


முனைவர் ஜ. பிரேமலதா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . .
நாகத்தைப் போலவும், சிறுகுடிமக்கள் போலவும் தலைவியும் அஞ்சி நடுங்கி துயில்கொள்ளாது துன்புற்று வருந்துகிறாள். இங்கு அவளைத் துன்புறுத்துவது, உன்னுடைய திருமண முயற்சியின்மையே! உங்களுடைய களவு வெளிப்பட்டதால் தாயும் இடிபோல் முழங்கி அவளைஅச்சுறுத்துகிறாள்.

சண்டாளிகா- 5


மூலம்: ரவீந்திரநாத் தாகூர்; தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
ப்ரகிருதி: இப்போது உன் வசியம் தளரக்கூடாது. இப்போது அதனைக் கைவிட்டுவிடாதே!
தாய்: அது உனக்கு ஒரு சாபத்தைக் கொண்டுவருகிறது. என்னைப் பொறுத்தவரை, அது கட்டாயமாக இறப்பைக் குறிக்கிறது.

கலித்தொகை கதைகள் – 8


உன்மீதுகொண்ட காதல்நோய் ஒருபுறம் அவளை வாட்டுகிறது. மறுபுறம் ஊராரின் அலர் அவளைத் துன்புறுத்துகிறது. எனினும், தன்னுடைய வருத்தத்தை அவள் என்னிடம்கூடச் சொல்லவில்லை. திருமண நினைவின்றி கனவிலேயே வாழநினைக்கும் உன் பண்புகெட்ட தன்மையைப் பிறர் அறியாதபடி அவள் மறைத்த காரணம், உன்னைப் பிறர் இகழ்வார்களோ என்ற நாணத்தினால் அன்றோ? இத்தகைய அரியபண்புடைய தலைவியின் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தே நீதான்.

சண்டாளிகா-4


மூலம்: ரவீந்திரநாத் தாகூர்; தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
அங்கம்-2
நான் ஒரு மங்கலான பனிமூட்டம் ஆகாயம் முழுவதனையும் மூடிக்கொண்டிருக்கக் கண்டேன். அது துர்த்தேவதைகளுடன் சண்டையிட்டுக் களைத்த கடவுள்களைப்போல் சோர்ந்து காணப்பட்டது. அந்த பனிமூட்டத்திடையே இருந்த பிளவுகளில் நெருப்பு ஒளிரக்கண்டேன். அதன்பின் அந்தப்பனிமூட்டம் சிவந்த, வெகுண்டெழுந்த தொகுதிகளாக உருமாறிப் பெரிய வீக்கம்கொண்ட புண்களைப்போலக் காட்சியளித்தது. பயத்தைவிடப் பெரியதான ஒன்றினை உணர்ந்தேன். அங்கு அழிக்கும் கடவுளைவிடப் பயங்கரமான படைப்புக்கடவுளைக் கண்டேன்; அவர் தனது காரியத்தை நடத்திக்கொள்ள சினத்தால் சீறிச் சுருண்டெழும் ஜ்வாலைகளை வீசுவதைக்கண்டேன். அவரது காலடியில் இருந்த பஞ்சபூதங்களையும் வைக்கும் பெட்டியில் என்ன இருந்தது?

சண்டாளிகா-3


மூலம்: ரவீந்திரநாத் தாகூர்; தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

அம்மா, உன்னுடைய வசியமந்திரம் வாழ்க்கையைப்போலப் புராதனமானது. அவர்களுடைய மந்திரங்கள் அனுபவமற்ற நேற்றையவை; இந்த மனிதர்கள் உனக்கு சமமானவர்களல்ல – உனது வசியமந்திரத்தின் அழுத்தத்தினால் அவர்களுடைய மந்திரங்களின் கட்டு தன்னால் அவிழ்ந்துவிடும். அவர் தோற்றுத்தான் போவார். உனது வசியமந்திரத்திற்கு தொலைவு ஒருபொருட்டல்ல. அவர் என்னிடம் கருணைகாட்டவில்லை; நானும் அவரிடம் இரக்கம் காண்பிக்கப்போவதில்லை. உனது மந்திரங்களை ஓது; கொடூரமான மந்திரங்களை ஓது. அவருடைய புத்தியை அவை சுற்றிவளைத்துக்கொண்டு ஒவ்வொரு சுருளும் அதில் அழுந்தப்பதியுமாறு செய்துவிடு. அவர் எங்கே சென்றாலும் என்னிடமிருந்து தப்பியோட முடியாது!

சண்டாளிகா — 1


மூலம்: ரவீந்திரநாத் தாகூர் — தமிழ் மொழிபெயர்ப்பு: மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Kv
பிரகிருதி: நான் சொன்னேன்: “நான் ஒரு சண்டாளினி; இந்தக் கிணற்றுநீர் அசுத்தமானது.” அதற்கு அவர், “என்னைப்போல நீயும் ஒரு மனிதப்பிறவிதான். சூட்டைத் தணிவித்து, தாகத்தினை அடக்கும் எல்லாநீரும் புனிதமானதே,” என்றார். எனது வாழ்க்கையிலேயே முதல்முறையாக நான் அப்படிப்பட்ட சொற்களைக்கேட்டேன்.
தாய்: ஆண்களின் சொற்கள் கேட்டுக்கொள்வதற்கு மட்டுமே, கடைப்பிடிக்கப்படுவதற்கு அல்ல என்று அறிந்துகொள். கெட்டவிதி உன்னை இந்த மண்ணாலான சுவரின்மீது அழுத்தியுள்ளது; உலகத்தில் எந்த மண்வெட்டியினாலும் அதனைப்பெயர்த்தெடுக்க இயலாது! நீ அசுத்தமானவள்: வெளியுலகை உனது அசுத்தமான தோற்றத்தினால் கறைப்படுத்தாதே!

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 5


முனைவர் இரா. இராமகிருட்டினன்
குறிஞ்சி
நீலக் குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், மேற்குத் தொடர்ச்சிமலைத்தொடரின் முக்கிய பகுதிக்கு நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது என்பர். குறிஞ்சிப் பண்ணில் தோன்றும் இராகங்களைக் குறிஞ்சி இனப் பூக்களின் நிறத்தால் பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் தமிழ்க் கடவுளான முருகனின் மலராகக் குறிஞ்சிமலர் கருதப்படுகிறது.

பல்வரி நறைக்காய்


ருத்ரா இ. பரமசிவன்
http://wp.me/p4Uvka-LP
கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே, அதுபோல மன உறுதி கொண்டவள் நான். உண்ணப்போவதில்லை. காற்று உண்டு கூட வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்!

இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள்கொண்ட தும்பிபோன்றது. அந்த இதயம் நின்று உயிர்நீங்கும் காட்சியைக் காணச் சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்!