சுப்பிரமணிய புஜங்கம்


மீனாட்சி பாலகணேஷ்
புஜங்கக் கவிதையுள் அமைந்துள்ள சொற்கோவைகள் ஒரு பாம்பானது வளைந்து வளைந்து ஊர்ந்துசெல்வதுபோல இருப்பதனால் இத்தகைய கவிதை அமைப்புக்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது. சுப்பிரமணியக்கடவுளின் பெருமை, உயர்வு, முடிவற்ற தன்மை ஆகியவற்றை இரு விதங்களில் ஆதிசங்கரர் விளக்குகிறார்.

Advertisements

சந்நியாசமா, சம்சாரமா?


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
சந்நியாசிக்கு வேண்டியது வைராக்கியம். வைராக்கியம் எங்கே தவறுகிறதோ அப்பொழுது துறவறம் தவறிப்போகும். கணவன் மனைவி ஒற்றுமைஎன்று தவறுகிறதோ அன்றைக்கு இல்லறம் பாழாகும். வைராக்கியம் இல்லாத சந்நியாசம்  துராக்கரமாகும். ஒத்து வாழாத குடும்பம் காமவாழ்க்கையாகும்.  சிருஷ்டியில் என்ன முறையில் அவர்களைஅவர்கள் பக்குவப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தன்மை இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் வாழ்க்கை  கிடைக்கும். 

கழுதைக்குக் கல்யாணம்!?


கே. செல்வன் மூதேவி என்பது திட்டும் வார்த்தையாக இன்று ஆகியிருந்தாலும் மூதேவியின் வரலாறு நம் மரபுகளுடன் நீண்ட தொடர்புடையது. புராணங்களின் படி மூதேவி திருமகளுக்கு மூத்தவள். பாற்கடலை கடைகையில் மூதேவி முன் தோன்றி, அதன்பின் ஸ்ரீதேவி தோன்றினாள். முதலில் தோன்றியதால் மூத்த தேவி-> மூதேவி என மருவியது என்பார்கள். அதனால் வடக்கே மூத்தவள் என்பதை குறிக்கும் ஜேஷ்டா தேவி எனும் பெயரும் உண்டு. தமிழில் மூதேவிக்கு அழகாக தவ்வை என்ற பெயருண்டு. வள்ளுவர் இரு குறள்களில் மூதேவியை…

பாண்டிமாதேவி


கே. செல்வன்
“இப்போது எழுதிவைத்துக்கொள், அம்மா!  அப்படிச்செய்யும் தமிழ்மன்னன் நிச்சயம் ஒரு சைவனாகவே இருப்பான். அப்பேர்ப்பட்ட வீரம் தமிழ்மண்ணில் மீண்டும் வரவேண்டுமெனில் இங்கே மீண்டும் சைவம் தழைக்கவேண்டும். சோழநாடெங்கும் சிவாலயங்கள் எழும்பவேண்டும்.

“மன்னரைச் சைவர் ஆக்குவதே நாட்டைக்காக்கும் வழி,” அரசியாரே!” என்ற குலச்சிறையார், “அப்பர், சம்பந்தர் என இரு நாயன்மார்கள் பல்லவ, சோழநாடெங்கும் சைவநெறியைப் பரப்பிவருகிறார்கள். அவர்களைக்கூட்டிவந்து  மன்னரைச் சைவராக்கிவிடலாம்” என்றார்
“சரி, உடனே சம்பந்தரைக் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றார் மங்கையர்க்கரசியார்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 12


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
நமது கிருஷ்ணன். வீடுவீடாக நண்பர்கள் பட்டாளத்துடன் சென்று வெண்ணெயையும் தயிரையும் எடுத்து உண்டுவிட்டு வருவதால் அவன் உடல், உடை எங்கணும் முடைநாற்றம் வீசுகிறது. வீட்டிற்கு வந்தவுடன் களைப்பினால் படுத்து உறங்கியும்விட்டான். அவனிடமிருந்து, புளித்த தயிர்வாடை வீசுகிறது; உறங்கும்போது உடல்முழுவதும் வந்த தினவால் அங்கும் இங்கும் தேய்த்தபடியும் கைநகங்களால் அரித்துக்கொண்டும் உறங்கும் அலங்கோலத்தைக் கண்டவளுக்கு உள்ளம் பொறுக்கவில்லை.
‘இன்றைக்கு நீ பிறந்த திருவோண நாள்; இன்றாவது நன்றாக நீராட வேண்டுமப்பனே!’ எனக்கெஞ்சுகிறாள் அன்னை!

ஆதிசங்கரர் படக்கதை — 10


உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
“பரமேஸ்வரனின் அருள் எனக்கு வல்லமை தரட்டும். பத்ரிகாசிரமம் போகலாம் என்று எண்ணம்.”
சங்கரர் பாஷ்யங்களை தமது சீடர்களுக்குப் போதிக்கத்துவங்கினார்.

ஆதிசங்கரர் படக்கதை — 9


உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
http://wp.me/p4Uvka-Ke
“இந்தக் கள்குடத்திலும், ஓடும் புனிதமான கங்கையிலும் சூரியன் ஒரேமதிரியாகத்தானே பிரகாசிக்கிறான்? நான் புலையன், நீங்கள் உயர்ந்தவர் என்பதாலன்றோ என்னை விலகச் சொல்கிறீர்கள்? அத்வைதத்தில் உமக்கே சந்தேகமா?”

வளவன் கனவு — 22


சு. கோதண்டராமன்
http://wp.me/p4Uvka-K7
27 நல்லூர்ப் பெருமணம்
“நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்ற ஈசா, கல்லூர்ப் பெருமணம் (அம்மி மிதிக்கும் சடங்கு) எனக்குத் தேவையா? இத்தனைத் தலங்களில் உன்னை நான் பாடினேனே, என்றாவது எனக்குத் திருமணம் செய்து வை என்று கேட்டதுண்டா? என்னை இந்த உலகிற்கு அனுப்பிய நோக்கத்தை நான் நிறைவேற்றி விட்ட நிலையில் இல்லறத்தில் ஈடுபடுத்திச் சோதனை செய்கிறாயே!”

வளவன் கனவு — 20


மறுபகிர்வு நன்றி: வல்லமை
சு. கோதண்டராமன்
http://wp.me/p4Uvka-H3
25 வெப்பு நோய்
அரசர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசி கேட்டார், “அன்பரே, சமணத்தின் முக்கியக்கொள்கை அகிம்சை தானே?”
தன் மனைவிக்கும் சமணத்தின்மீது பற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அரசர் மகிழ்ந்தார். “ஆம், எந்த உயிர்க்கும் துன்பம் இழைக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.”
“நம் மகன் வயதுடைய ஒரு பாலகனை உயிரோடு எரித்துக் கொல்ல உத்திரவிட்டிருக்கிறீர்களே, இதுதான் அகிம்சையா?”
“யார்? யார்? என்ன சொல்கிறாய்?”
“சோழநாட்டிலிருந்து வந்துள்ள சிவனடியார் தங்கியிருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா?”

வளவன் கனவு — 19


மறுபகிர்வு நன்றி: வல்லமை மின்னிதழ்
சு. கோதண்டராமன்
http://wp.me/p4Uvka-FO
24 மங்கையர்க்கரசி
“தங்கள் தந்தையைப்பற்றிக் குறைவாக மதிப்பிடவேண்டாம், தேவி. அவர் சிறந்த ராஜதந்திரி. பாண்டிய மறவர்கள் சமணர்களின் அகிம்சைக் கொள்கையைக் கைக்கொண்டு வீரம் இழந்துள்ளனர். களப்பிரர்கள் தோற்றதற்குக் காரணம் அவர்களது வீரமின்மையே தவிர பாண்டியர்களின் படைவலிமை அல்ல. எனவே பாண்டியனால் ஆபத்து எதுவும் வராது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும். பாண்டியநாட்டைச் சமணத்திலிருந்து மீட்கத்தான் அவர் தங்களை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.”

வளவன் கனவு — 18


மறுபகிர்வு நன்றி: வல்லமை மின்னிதழ்:
சு. கோதண்டராமன்
http://wp.me/p4Uvka-F6
23 அப்பரும் ஆளுடைய பிள்ளையும்
இவர் பால்மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து முதிர்ந்தவர். இவர் வேதியர் குலத்தவர். அவர் வேறு குலத்தவர். இவர் தந்தையின் தோள்மீதும் பல்லக்கிலும் அமர்ந்தே பயணம்செய்தவர். அவர் கால்நடையாகவே எல்லாத் தலங்களுக்கும் சென்று தரிசித்தவர். இவர் வேத வேதாங்கங்களை ஓதாது உணர்ந்தவர். அவர் வேறுசமயத்து நூல்களை ஓதி, அவற்றின் பயனின்மையை உணர்ந்து துறந்தவர். இருவரையும் இணைத்தது சிவம். இருவரும் ஒருவரையொருவர் கானவிரும்பினர்.