கழுதைக்குக் கல்யாணம்!?


கே. செல்வன் மூதேவி என்பது திட்டும் வார்த்தையாக இன்று ஆகியிருந்தாலும் மூதேவியின் வரலாறு நம் மரபுகளுடன் நீண்ட தொடர்புடையது. புராணங்களின் படி மூதேவி திருமகளுக்கு மூத்தவள். பாற்கடலை கடைகையில் மூதேவி முன் தோன்றி, அதன்பின் ஸ்ரீதேவி தோன்றினாள். முதலில் தோன்றியதால் மூத்த தேவி-> மூதேவி என மருவியது என்பார்கள். அதனால் வடக்கே மூத்தவள் என்பதை குறிக்கும் ஜேஷ்டா தேவி எனும் பெயரும் உண்டு. தமிழில் மூதேவிக்கு அழகாக தவ்வை என்ற பெயருண்டு. வள்ளுவர் இரு குறள்களில் மூதேவியை…

வாழ்க்கை எனும் ஓடம்… – 2


மீனாட்சி பாலகணேஷ்
2. பிச்சை புகினும் கற்கை நன்றே!
வறுமைப்பட்ட குடும்பம். ‘வதவத’வென்று நான்கு தம்பி தங்கைகள். அவள் தகப்பனார் ஒரு சாப்பாட்டு விடுதியில் சமையல்காரர். அம்மா அங்கிங்கு வீடுகளில் சிரார்த்த சமையல், முறுக்கு சுற்றுவது, வடகம் போடுவது என்று அப்பப்போது வேலைசெய்வாள். பெரிய வரும்படி கிடையாது என்பது வெட்டவெளிச்சம். இரண்டுவேளை குடும்பம் ஒழுங்காகச் சாப்பிட்டாலே பெரிய விஷயம். இதில் பள்ளிக்கூடமா, படிப்பா, நோட்டா, புத்தகமா?

பாண்டிமாதேவி


கே. செல்வன்
“இப்போது எழுதிவைத்துக்கொள், அம்மா!  அப்படிச்செய்யும் தமிழ்மன்னன் நிச்சயம் ஒரு சைவனாகவே இருப்பான். அப்பேர்ப்பட்ட வீரம் தமிழ்மண்ணில் மீண்டும் வரவேண்டுமெனில் இங்கே மீண்டும் சைவம் தழைக்கவேண்டும். சோழநாடெங்கும் சிவாலயங்கள் எழும்பவேண்டும்.

“மன்னரைச் சைவர் ஆக்குவதே நாட்டைக்காக்கும் வழி,” அரசியாரே!” என்ற குலச்சிறையார், “அப்பர், சம்பந்தர் என இரு நாயன்மார்கள் பல்லவ, சோழநாடெங்கும் சைவநெறியைப் பரப்பிவருகிறார்கள். அவர்களைக்கூட்டிவந்து  மன்னரைச் சைவராக்கிவிடலாம்” என்றார்
“சரி, உடனே சம்பந்தரைக் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றார் மங்கையர்க்கரசியார்.

அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

கையாலாகாதவனாகிப்போனேன்! — 2


ஒரு அரிசோனன்
2. மூக்குக்கண்ணாடி
“வேண்டாம். கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா? எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.
“ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா! ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.” இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!
“கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா! இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல. இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

கலித்தொகை கதைகள் – 10


முனைவர் ஜ. பிரேமலதா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
நானும் உனக்கு உறுதுணையாக இருக்கிறேன். உன்பொருட்டு நானும் சிந்தித்தேன். அவனே உனக்கு ஏற்ற மணவாளன் என்று உணர்ந்தேன். இனியும் யோசிக்கவேண்டியிருந்தால் நாம் இருவருமே கலந்துபேசி ஐயம் தீர்த்துக்கொள்வோம். அவனை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன். இனி யோசிப்பதிலே பயனில்லை; தயங்காதே. உன் காதலை அவனிடம் எடுத்துரைத்து மகிழ்ச்சியோடிரு!

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப் புராணம் – 5


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
வலிய கையில் தாங்கும் வில்லிலிருந்து தொடுக்கும் மலர்க்கணைகள் முற்றிலும் தீர்ந்து விட்டன. நீர்த்துறைகளில் வெண்மையான சங்குகள் மணி சொரியும் வயல்களில் சுரும்பும், பொய்கையில் பல்வகைப்பூக்களும் முழுவதும் எய்து முடிந்தமையால் அற்றுப் போய்விட்டன. எய்யக் கணையில்லமல் போய்விட்டமையால் மன்மதனும் தோற்றான்.
கருப்பினந் கரும்பு வில்லினனாகிய மன்மதன். போருக்குப் பின் தோற்ற அர்சர்கள் வென்றவனுக்குத் திறைசெலுத்துவர். அதுபோல, கோங்க மரங்கள் பூத்தன, அவ்வாறு பூத்திருந்தமை மன்மதன் அலங்கரிக்கப் பட்ட தேரினைத் திறையாக நிறுத்தியதை ஒத்திருந்தது.

கலித்தொகை கதைகள் – 9


முனைவர் ஜ. பிரேமலதா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . .
நாகத்தைப் போலவும், சிறுகுடிமக்கள் போலவும் தலைவியும் அஞ்சி நடுங்கி துயில்கொள்ளாது துன்புற்று வருந்துகிறாள். இங்கு அவளைத் துன்புறுத்துவது, உன்னுடைய திருமண முயற்சியின்மையே! உங்களுடைய களவு வெளிப்பட்டதால் தாயும் இடிபோல் முழங்கி அவளைஅச்சுறுத்துகிறாள்.

சண்டாளிகா- 5


மூலம்: ரவீந்திரநாத் தாகூர்; தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
ப்ரகிருதி: இப்போது உன் வசியம் தளரக்கூடாது. இப்போது அதனைக் கைவிட்டுவிடாதே!
தாய்: அது உனக்கு ஒரு சாபத்தைக் கொண்டுவருகிறது. என்னைப் பொறுத்தவரை, அது கட்டாயமாக இறப்பைக் குறிக்கிறது.

பாடிப்பறந்த குயில் – 8


வையவன்
தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலிக்கு அருகில் சென்று தானும் தண்ணீர் பருக ஆரம்பித்தது புதிய புலி. சிறிது நேரம் சென்றதும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு முதலில் வந்த பெண்புலியின் உடலை நக்கிக்கொடுக்கத் தொடங்கிற்று. பெண்புலியும் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி, ஒரு வீட்டு நாய்போலக் கழுத்தை இசைவாக அதற்குக் காட்டிற்று.

கலித்தொகை கதைகள் – 8


உன்மீதுகொண்ட காதல்நோய் ஒருபுறம் அவளை வாட்டுகிறது. மறுபுறம் ஊராரின் அலர் அவளைத் துன்புறுத்துகிறது. எனினும், தன்னுடைய வருத்தத்தை அவள் என்னிடம்கூடச் சொல்லவில்லை. திருமண நினைவின்றி கனவிலேயே வாழநினைக்கும் உன் பண்புகெட்ட தன்மையைப் பிறர் அறியாதபடி அவள் மறைத்த காரணம், உன்னைப் பிறர் இகழ்வார்களோ என்ற நாணத்தினால் அன்றோ? இத்தகைய அரியபண்புடைய தலைவியின் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தே நீதான்.

சண்டாளிகா-4


மூலம்: ரவீந்திரநாத் தாகூர்; தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
அங்கம்-2
நான் ஒரு மங்கலான பனிமூட்டம் ஆகாயம் முழுவதனையும் மூடிக்கொண்டிருக்கக் கண்டேன். அது துர்த்தேவதைகளுடன் சண்டையிட்டுக் களைத்த கடவுள்களைப்போல் சோர்ந்து காணப்பட்டது. அந்த பனிமூட்டத்திடையே இருந்த பிளவுகளில் நெருப்பு ஒளிரக்கண்டேன். அதன்பின் அந்தப்பனிமூட்டம் சிவந்த, வெகுண்டெழுந்த தொகுதிகளாக உருமாறிப் பெரிய வீக்கம்கொண்ட புண்களைப்போலக் காட்சியளித்தது. பயத்தைவிடப் பெரியதான ஒன்றினை உணர்ந்தேன். அங்கு அழிக்கும் கடவுளைவிடப் பயங்கரமான படைப்புக்கடவுளைக் கண்டேன்; அவர் தனது காரியத்தை நடத்திக்கொள்ள சினத்தால் சீறிச் சுருண்டெழும் ஜ்வாலைகளை வீசுவதைக்கண்டேன். அவரது காலடியில் இருந்த பஞ்சபூதங்களையும் வைக்கும் பெட்டியில் என்ன இருந்தது?