தனுஷ்கோடி – அரிச்சல் முனை


சிங்கநெஞ்சன் சம்பந்தம்
1964 டிசம்பரில் பெரும் புயல் ஒன்று தனுஷ்கோடியைப் புரட்டிப்போட்டது.  இந்த ஊர் உருக்குலைந்து அழிந்துபோனது. சென்ற ஆண்டு அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவகத்தைத் திறக்க வந்த பிரதமர் மோதி  இந்தச் சாலையையும் திறந்தவைத்திருக்கிறார்

Advertisements

நியூசிலாந்து பயணநினைவுகள் — 5


முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
பழங்காலத்தில் மராயிக்கு அடிக்கல் நாட்டுவது நரபலியோடுகூடிய சடங்காக இருந்தது. கிராமத்தில் செல்வாக்குள்ள குடும்பத்து இளைஞன் ஒருவன் — அவன் மவுரித்தலைவனுடைய மகனாகக்கூட இருக்கலாம் — பலியிடப்படுவான். புரோகிதன் அவனுடைய இருதயத்தை எடுத்து நெருப்பில் சுட்டு, தின்பான். அதன்பின், முறைப்படி பலசடங்குகளைச் செய்வான். பலியிடப்பட்ட இளைஞனின் பெருமை, புகழ், செல்வாக்கு என்பன்வற்றிற்கேற்ப மராயின் புனிதமும் அமையும் என நம்பப்பட்டது.

நியூசிலாந்து பயணநினைவுகள் — 1


முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி —
தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங்களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள், நகாயுவே கூறிய நெடுந்தொலைவிலுள்ள,- மக்கள் வாழாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகள், மதிப்புயர்ந்த பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவேயிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு ஊக்கமூட்டி விரையச் செய்தன.

திருமறைக்காடு – ஊரும் பெயரும் – இலக்கிய ஆய்வு


பொன். சரவணன்
கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘ மறையினை ஓதும் காடு ‘ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்


ஆங்கிலம்: ஸர் கந்தையா வைத்தியநாதன்[1] — தமிழாக்கம்: ஒரு அரிசோனன்
எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர்.  அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான்.  அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.
இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது.  செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர்

அமெரிக்க [அதிபர்] அரசியல் – 5


ஒரு அரிசோனன்
முதல்நிலைத் தேர்வுகளும், காகஸ்களும் பிப்ரவரி மாதத்தில் ஐயோவா மாநிலத்தில் துவங்கி, ஜூன்மாதத்தில் கலிஃபோர்னியா மாநிலத்தில் முடிவடைகின்றன.
கட்சிக்கூட்டமான காகஸுக்கு மிகவும் குறைவானவர்களே வருவார்கள். இதை மனதில்கொண்டு, எந்த வேட்பாளர் தங்கள் ஆதரவாளர்களைக் காகஸுக்கு வரவழைப்பதில் வெற்றிகாணுகிறார்களோ, அவர்களே அந்த மாநில் காகஸில் வெற்றிபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.
ஒரு மாநிலத்து மக்கள் குறுகிய நோக்கமுள்ள, பொதுத்தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லாத வேட்பாளரத் தேர்ந்தெடுக்க்க் கூடும். மற்ற மாநிலங்கல் வேறொருவரை – பொதுத் தேர்தலிலோ, கட்சித்தேர்தலிலோ வெற்றிபெற வாய்ப்புள்ளவருக்கு ஆதரவளிக்கலாமல்லவா!

அமெரிக்க அதிபர் அரசியல் — 4


ஒரு அரிசோனன்
“செயலாற்றும் உரிமை[அதிகாரம்] அமெரிக்க ஒருங்கிணைந்த நாடுகளின் அதிபரிடம் அளிக்கப்படும். அவர் அப்பதவியை நான்கு ஆண்டுகள் வகிப்பார், மேலும், அவர் ஒரு துணைத்தலைவருடன் அதே காலத்திற்குக் தேர்ந்தெடுக்கப்படுவார்”
அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்[எலெக்டர்]குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனாமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.
அமெரிக்காவில் எந்தக்கட்சி வேட்பாளரையும் கட்சி மேலிடம் முடிவுசெய்வதில்லை. அந்தந்தக் கட்சியைச் சார்ந்த மக்களே தீர்மானிக்கிறார்கள்.

அமெரிக்க [அதிபர்] அரசியல் – 3


ஒரு அரிசோனன்
அதற்குமுன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எத்தனை தேர்தல்குழாம் வாக்குகளைப்பெறவேண்டும் என்று பார்ப்போம். அவ்வாக்குகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொருத்தது; இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகப்படியாக இரண்டு வாக்குகள் அளிக்கப்படுகின்றன. அது மக்கள் தொகையைப் பொருத்ததல்ல, நிலையானது.
“இயற்கையாகப் பிறந்த குடிமகனாகவோ, இந்த அரசியல் அமைப்பு [எழுதப்பட்ட] காலத்தில் குடிமகனாகவோ இல்லாதவர் [அமெரிக்க] அதிபர் பதவிக்கு தகுதியானவர் அல்லர்; மேலும், முப்பத்தைந்து வயதை அடையாதவரும், பதினான்காண்டுகள் ஒருங்கிணைந்த மாநிலங்களின் குடியிருப்பாளராக இல்லாதவரும் அத்தகுதி இல்லாதவரே.”

அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2


ஒரு அரிசோனன்
3. ஆயுதமேந்தும் உரிமை
“நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட படை சுதந்திரமான நாட்டிற்குத்[மாநிலங்களுக்குத்] தேவையென்பதால் மக்களின் ஆயுதங்களை வைத்திருக்கும், ஏந்தும் உரிமை மீறப்படமாட்டாது.”
ஒருவரிடமோ, அல்லது ஒரு துறையிடமோ அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர், அதிகாரத்தை மூன்றாகப் பங்கிட்டனர். அத்துடன் நிற்காது, அந்த மூன்று பிரிவுகளும் தங்கள் மனம்போனபோக்கில் நடந்துகொள்ளாமலிருக்க, தடைகளையும், சமப்படுத்துதலையும் [Checks and Balances] செய்யும்வண்ணம் அரசியல் அமைப்பை எழுதிவைத்தார்கள்.

தமிழகத் தேர்தல் களம் – நேற்று இன்று நாளை — 1


பேராசிரியர் வடிவேல் நாகராஜன்
அந்தக் காலத்திலேயே கட்சிகள் இரண்டாகப்பிரிவதும் ஒருகட்சியில் இருந்து இன்னொருகட்சிக்குப் போவதும் வாக்காளர்களை விலைக்குவாங்குவதும் வேட்பாளர்களுக்கு நிதி அளிப்பதும் இயல்பாக நடந்தன.
அரசியல் கட்சிகளைப் பொதுவாக இடதுசாரி வலதுசாரி நடுநிலை என்று மூன்று நிலைகளில் கொள்கை அடிப்படையில் அரசியல் நோக்கர்களாலும் ஆய்வாளர்களாலும் நிலை நிறுத்தப்படுவதுண்டு
வரலாறை முறையாகக் கற்றுணராதவர்கள் வரலாற்றுப் பிழைகளை மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய கட்டாயம் உருவாகும் என்பதே தமிழகத் தேர்தல் அரசியலில் அறிய வேண்டிய பாலபாடம்.

அமெரிக்க[அதிபர்] அரசியல் – 1


ஒரு அரிசோனன்
ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களை [United States of America] நிறுவிய அமெரிக்கத் தந்தையர் [founding fathers of United States of America] தனிமனிதர் ஒருவர் கையில் நாட்டின் அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும்கருத்தாக இருந்தனர். தனிமனிதர் ஒருவரிடம் நாட்டையாளும் முழு அதிகாரமும் இருந்தால், மற்ற தனிமனிதர்களின் உரிமை, முழு அதிகாரம்பெற்ற தனிமனிதர் ஒருவரால் பறிக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். அதற்குக் காரணம், அவர்கள், ஐரோப்பிய அடக்குமுறைகளிலிருந்து தப்பிவந்து, தனிமனித உரிமையுள்ள நாடாக அமெரிக்காவை நிறுவமுற்பட்டதே காரணம்.

மல்லல் மூதூர் மதுரை — 6


முனைவர் ப. பாண்டியராஜா
http://wp.me/p4Uvka-IT
சங்க கால மதுரை மக்கள்சிலம்பு காட்டும் மதுரை மகளிரைப் பொதுவாக இல்லற மகளிர், கணிகையர் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறமகளிரையும், செல்வ மகளிர், உழைப்பாளி மகளிர் எனப் பிரிக்கலாம்.
செல்வமகளிர் பொதுவாகப் பகல்நேரங்களில் பலவிதப் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்தனர்.
கணிகையர் கொடி நுடங்கும் ஊர் மறுகில் கடைகழிமாதர், தம் காதல் செல்வரோடு சேர்ந்திருந்தனர். பிற்பகல் வேளையில் நன்றாகத் தம்மை அலங்கரித்துக்கொண்டு மேல்நிலை முற்றத்தில் தம் காதலர் பாராட்ட, பூம்படுக்கையில் இனிமையுடன் இருந்தனர்.
உழைக்கும் வர்க்கம் ஏனையோரிடம் பற்றும் பாசமும் கொண்டிருப்பது பண்டையநாள் தொட்டு தமிழரின் பெருவழக்காய் இருந்துவந்திருக்கிறது.