கையாலாகாதவனாகிப் போனேன்! – 5


ஒரு அரிசோனன்
நீ இப்படிச் செஞ்சா, தன்னை நூறோட நூத்தொண்ணா நினைக்கறேன்னுதான் எம்ப்ளாயர் நினைச்சுப்பான்.  உடனே, உன்னைக் கொறச்சு எடைபோட்டு, உன் அப்ளிகேஷனைக் குப்பையிலே தூக்கிப் போட்டுடுவான்.  அது ஒனக்கு வேணுமா?  என் ஆபீஸுலயோ நல்ல ரெமிங்டன் டைப்ரைட்டர் சும்மா தூங்கறது.  உனக்கோ டைப்ரைட்டிங் தெரியும்.  ஸோ, ஒரொரு அப்ளிகேஷனையும் அப்பப்ப புதுசா போட்டிருக்கற வேலைக்குத் தகுந்தமாதிரி டைப்படிச்சு அனுப்பு, என்ன நான் சொல்றது?

Advertisements

ஆன்மீகமும் நானும் –  3


கல்பட்டு நடராஜன் 1964 – 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. ஆச்சாரியா வந்திருந்தார்.  வீட்டுக்காரரின் சிற்றன்னை எங்களை வந்து …. ஆச்சாரியாவை நமஸ்கரித்து ஆசிவாங்கிக்கொள்ள அழைத்தாள்.  எனக்கு அங்கு போவதில் ஈடுபாடு இல்லை.  ஆனால் என் மனைவி விடுவதாக இல்லை. அணிந்திருந்த சட்டை, கால்சட்டையுடன் கிளம்பினேன்.  மனைவி நான் பட்டுவேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.  வேறுவழி…

கையாலாகாதவனாகிப் போனேன்! – 1


ஒரு அரிசோனன்
சில நிகழ்வுகள் – நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போது, திரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்கு உணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றன.
வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியினால் இரண்டு-மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.
என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை.

நினைவுகளுடன் ஒருத்தி  – 3


சீதாலட்சுமி
சமூகசேவகி
கடவுளின் தவிப்பு. மனிதன் அவரை அமைதியாக இருக்கவிடவில்லை. எப்பொழுதும் துரத்திக்கொண்டே இருக்கின்றான். யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளியமுடியும்?! மனிதன் எட்டிப்பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

நினைவுகளுடன் ஒருத்தி – 2


சீதாலட்சுமி
சமூகசேவகி
http://wp.me/p4Uvka-IB
விபத்துக்களில் என் உடம்பு பாதிக்கப்பட்டது ஒரு புறம். எத்தனை வரப்புகளில் நடந்திருக்கின்றேன்1 கால்களில் தேய்மானம். காட்டு அனுபவங்கள்கூட பரவாயில்லை. இந்த சமுதாயத்தில் போராடியதுதான் கடுமை. நான் ஒரு அரசு ஊழியர்தான். வெறும் கையெழுத்து போட்டு ஊதியம் பெற்று உற்சாகமாக வாழ்ந்தவள் இல்லை.
நாம் வாழ்ந்தமுறை என்ன, நம் எண்ணங்களின் தன்மை என்ன என்று சில நிமிடங்களாவது நினைத்துப் பார்ப்போம். மனித நேயத்தின் மகத்துவம் உணர்வோம். நல்ல எண்ணங்கள் நமக்கே நல்லது.

நினைவுகளுடன் ஒருத்தி — 1


சீதாலட்சுமி
சமூகசேவகி
http://wp.me/p4Uvka-I1
முதுமை இவ்வளவு கொடியதா? வாழ்வியலில் பன்முகம் தெரிந்தவள். அவளே திணறினாள். சுருண்டாள் அழுதாள் ஒடுங்கிப் போயிருந்த அவளை மனக்குரல் தட்டி எழுப்பியது. அனுபவங்களின் சக்தி அவள் மனச்சிமிழைத் திறந்தது.. சிறிது சிறிதாக அவளிடம் ஓர் புத்துணர்வு. அவள் துவண்டு போக மாட்டாள். மரணத்தையும் வரவேற்கும் வலிமை பிறந்துவிட்டது முதுமையில் துணையிருப்பது நினைவுகள்