இலக்கிய இன்பம்-1


1. குதிரைக்காரன் மகன்
மீனாட்சி பாலகணேஷ்
வேளூர்க்காரனான சிவனுக்கே வாதம் வந்த காலாம்; அவருடைய மைத்துனருக்கு நீரிழிவாம்! அவருடைய பிள்ளையாகிய விநாயகனுக்கோ விகாரமான பெருவயிறாம்; இப்படியெல்லாம் தமக்கும் குடும்பத்தாருக்கும் வந்தநோய்களைத் தீர்க்கவே வகைஅறியாதவரான இந்தப்பெருமான், வேறு யாருடைய நோயை எவ்விதம் தீர்க்கப் போகிறார்?

Advertisements

சித்தர் பாடல்களின் சீரிய உவமைகள்


அண்ணாமலை சுகுமாரன்
நிலத்தில் இருக்கும் சாதாரண சுவையற்ற நீரை உறிஞ்சித் தன்னிடம் உள்ளத்தன்மையிலால் அதில் சுவையும் சக்தியும் உருவாக்கி இளநீராக மாற்றிக்கொள்கிறது தென்னை. அதற்கு அந்த மரத்தின் தன்மையும், இயற்கையும், சுழலும் காரணமாக அமைகின்றது. அப்படியே, நமது உடலின் தன்மையும், இயற்கையும், பிரபஞ்ச சுழலும் சரிவர அமையும்போது இயற்கையாக இறைவன் நம் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்பதை உணரமுடியும். இப்படி உணர்ந்தபின், இறை அனுபவத்திலேயே இருக்க முடிவதால் தன்னால் அதிகம் பேச இயலாமல், தான் மௌனமாகிவிட்டதாகச் சித்தர் கூறுகிறார்.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
ஆயர் குல இளைஞர் ஏறு தழுவுமுன் கார் காலத்தில் தோன்றும் பிடவு அரும்பு, செங்காந்தள் பூ, காயாம்பூ இவற்றோடு பிற பூக்களையும் கலந்து தலைமாலையாகச் சூடியதைக் கலித்தொகை காட்டுகிறது. மேலும், பிடவம் பூ கார் காலத்தில் மலரும்; கூர்நுனி கொண்ட களாவின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்போது பிடவு மலரும்; செடியில் நீண்ட முட்கள் இருக்கும்; செடி கருமையாகவும், பூவின் காம்பு நீளமாகவும், மொட்டுகள் கூர்மையாகவும் இருக்கும் எனவும், குளுமையும், நறுமணமும் கொண்டு வெள்ளை வெளேரென்று குலை குலையாய் பூத்துக் குலுங்கும் எனவும், பிடவப் பூக்குலைக்குள் பறவைகள் பதுங்கும் எனவும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன

திருமறைக்காடு – ஊரும் பெயரும் – இலக்கிய ஆய்வு


பொன். சரவணன்
கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘ மறையினை ஓதும் காடு ‘ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 13


முனைவர் இரா. இராமகிருட்டிணன் கரந்தை கரந்தை கொடிவடிவில் காணப்படும். இதனை நாறு கரந்தை என்று குறிஞ்சிப்பாட்டு உரையும், கரந்தை மாக்கொடி என்று பதிற்றுப்பத்தும் (பதிற்றுப்பத்து, 40:5, குறிஞ்சிப்பாட்டு, 76 உரை) குறிப்பிடுகின்றன. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணம் உடையது.  செம்பூங்கரந்தை என்று அகப்பாடல் (269 : 11) கூறுகின்றது.  பெண் கன்றின் முலை எழுந்து காட்டாது, பரந்து  காட்டுவது போலக் கரந்தைப் பூவும் செடியினின்று எழுந்து நில்லாது அதனோடு படிந்து விரிந்துகாட்டும். இதனை, நாகு…

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 12


முனைவர் இரா. இராமகிருட்டிணன்
சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும், பெண்களும் இப்பூக்களை அழகுக்காகவும், இயற்கையான நறுமணத்திற்காகவும் தலையில் சூடிக்கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் கமழ்வதற்காக நீர்ப் பாத்திரங்களில் இடப்பட்டு வைக்கப்படுகின்றன. மணவறைக் கட்டில்களிலும், மணமாலைகளிலும் இப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் — 11


முனைவர் இரா. இராமகிருட்டினன்
பாதிரிப்பூக்கள் வேனிற் காலத்தில் மலரும். செடிநூற்படி ஏப்ரல்-மே மாதங்களில் இது பூக்கின்றது. ‘வேனிற் பாதிரி’ என்றொரு வழக்கே ஏற்பட்டுவிட்டதன் காரணமாக “வேனிற்கட் பாதிரி” என்று நன்னூல், மயிலைநாதர் உரையும், ‘வேனிற் பாதிரி’ என்று குறுந்தொகையும் (167), அகநானூறும் (257) அழைக்கின்றன. பாதிரியின் மலர் சிறிது வளைந்து இதழ்வட்டம் குழாய் போன்று வளைந்து உள்ளதால் சங்கநூல்களில் ‘கூன்மலர்’ என அழைக்கப்படுகின்றது. “வேனிற் பாதிரி கூன்மல ரன்ன” என்று குறுந்தொகையும் (147), “வேனிற் பாதிரிக் கூனி மாமலர்” என்று அகப்பாடலும் (257) சுட்டுகின்றன

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் — 10


குறுநறுங்கண்ணி குறுநறுங்கண்ணி, குண்டுமணி, குன்றிப்பூ ,குன்றி உள்ளிட்ட பெயர்களால் அறியப்படும் கொடி. இதனைக் குன்றிப்பூ என நச்சினார்க்கினியர் உரைகூறுவார். கருஞ்சிவப்பு நிறத்தில் கருமைநிறத்தில் ஒரு மறுவைக்கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச்சொல் குன்றிமணி என்பதன் திரிபாகும்.       சிலபகுதிகளில் இம்மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மரபுவழி நகைத்தொழில்செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணியைப் பயன்படுத்துவதுண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.       இது தமிழ்நாட்டில் எங்கும்…

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 19


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
காது செவிடுபட இடியிடிக்கிறது! கண்களைப்பறிக்கும் மின்னல்கள். கண்ணனின் கருமேனி அழகிற்கு உவமையாகக்கூடிய கருமேகங்கள் வானில் அடர்ந்து எழுகின்றன. அடைமழை விடாது பெய்கிறது. கோபர்கள் பயந்து நடுநடுங்கும் வகையில் மழைபெய்யவே அவர்கள், “கிருஷ்ணா! இந்திரனின் கோபத்திலிருந்து எம்மைக்காப்பாய்,” என அலறி அவனிடம் தஞ்சம் புகுகின்றனர்.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 18


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான் புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,”

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 9


முனைவர் இரா. இராமகிருட்டினன்
ஆவாரம்பூ உயிர் காக்கும் மருந்தாவதை அறியலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நம் சித்தர்கள் பல மூலிகைகளைக் கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றில் ஆவாரம்பூவும் ஒன்று. ஆவாரம்பூவின் வேதிப்பொருள்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணம் — 6


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
“தேன்சிந்தும் நறுமணமலரை அணிந்த மயில்போன்றவளே! பிணிப்புத் தளர்ந்து அலர்ந்த மலர்களும், தளிரும், மணங்கமழ்ந்து, பூங்கொம்பினை நறுமணமலர்க்கொடி தென்றல்வீச வந்து தழுவி அசைவது தலைவரொடு மடமகளிர் நிகழ்த்திடும் கலவியைத் தோற்றுவதைப் பார்.
“வெற்றிகொள்ளும் வில்லும், பிறையும் ஏங்குமாறு விளங்கும் அழகிய நுதலை உடைய உமையே! தென்றலில் அசையும் தேன்கமழும் மலர்க்கொடியின் அருகில், பூங்கொம்புகள் வளைந்து ஆடுவது, ஊடிய மங்கையரைக் காமம் ததும்பிய மைந்தர்கள் குனிந்து, காலில் பணிந்து, ஊடல் தணிப்பதைப்போல இருப்பதைப் பார்!