அழகி வீட்டு நிழல்


வையவன்
எப்படி இவர் இப்படி குப்பையானார்?
நம்ப முடியவில்லை.

என்ன கொஞ்சல்! என்ன வாத்சல்யம்! எவ்வளவு பிரியம்! எதுக்கு இப்படி நீசமாகணும்?
மனுஷாலாலெ இப்படி கோபுரத்திலேர்ந்து தொபுக்கடீர்னு தலைக் குப்புற சாக்கடைலே விழமுடியுமா?
அன்று சாரப்பள்ளத்தில் நேர்ந்தது நிலநடுக்கம். எந்த அச்சின்மீதும் பூமி இல்லை என்று உணர்த்திய பூகம்பம்.

Advertisements

பாடிப்பறந்த குயில் – 8


வையவன்
தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலிக்கு அருகில் சென்று தானும் தண்ணீர் பருக ஆரம்பித்தது புதிய புலி. சிறிது நேரம் சென்றதும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு முதலில் வந்த பெண்புலியின் உடலை நக்கிக்கொடுக்கத் தொடங்கிற்று. பெண்புலியும் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி, ஒரு வீட்டு நாய்போலக் கழுத்தை இசைவாக அதற்குக் காட்டிற்று.

பாடிப்பறந்த குயில் – 7


வையவன்
தினசரி ராவுஜியின் வீட்டுக்குப் போவது தவறவில்லை. ஆனால், இப்போது அவர் அறையோடு சரி. முன்போல் வீட்டுக்குள்ளே நுழைந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவதென்பது அவனாலேயே முடியாமற்போய்விட்டது. ஆனால் காலைவேளைகளில் மாடிச் சந்திப்பு நிகழ்ந்துவந்தது
“மனப்பூர்வமாக உங்களுக்கு என்னை ஒப்படைத்துவிட்ட பிறகு, அடிக்கடி நடக்கும் இந்தப் பெண்பார்க்கும் நாடகத்தில் நான் நடித்துக்கொண்டே இருக்கவேண்டுமா?”

ஆதிசங்கரர் படக்கதை — 10


உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
“பரமேஸ்வரனின் அருள் எனக்கு வல்லமை தரட்டும். பத்ரிகாசிரமம் போகலாம் என்று எண்ணம்.”
சங்கரர் பாஷ்யங்களை தமது சீடர்களுக்குப் போதிக்கத்துவங்கினார்.

பாடிப்பறந்த குயில் — 6


வையவன்
http://wp.me/p4Uvka-Ky
நிதானமான நடையோடு அவன் பஸ் ஸ்டாண்டை அடையும்போது அவள் அவனைக் கடந்தாள். சிவந்த மேனியும், கம்பீரமான சாந்தமும் முகத்தில் நிலவ, அடர்ந்திருந்த கூந்தலைச் சுயேச்சையாய் அவிழ்த்துவிட்டு, ஆடிய இளங்காற்றில் அதை ஆற்றிக்கொண்டிருப்பது, பகீரதன் தவத்திற்காக மஹாகங்கை வானின்று இறங்கி வந்த ரவிவர்மாவின் படம்போல் அவனுக்குத் தோன்றிற்று. நினைவில் கல்வெட்டுபோல அந்த முகமும் நடையும் பதிவாகிவிட்டன.

ஆதிசங்கரர் படக்கதை — 9


உரையாடல்: வையவன் — படங்கள்: செந்தமிழ்
http://wp.me/p4Uvka-Ke
“இந்தக் கள்குடத்திலும், ஓடும் புனிதமான கங்கையிலும் சூரியன் ஒரேமதிரியாகத்தானே பிரகாசிக்கிறான்? நான் புலையன், நீங்கள் உயர்ந்தவர் என்பதாலன்றோ என்னை விலகச் சொல்கிறீர்கள்? அத்வைதத்தில் உமக்கே சந்தேகமா?”

அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…


வையவன் http://wp.me/P4Uvka-7G   கதையைப் படிக்க மேலே சொடுக்கவும்.   பிரேமா போல் ஒரு தேவ கன்னிகை உலவ வேண்டிய கந்தர்வ லோகமாக நவநீதனுக்கு அது தோன்றியது. அன்று அப்படி ஓர்உச்சத்தில் அவள் இருந்தாள். மரத்தடியில், அவனுக்கு எதிர்புறமாக அமர்ந்துகொண்டு, தூரத்தில் ஆள் நடமாடும் தனிமையில் பிரேமா ஒரு ககன சஞ்சாரம் செய்யும் உல்லாசத்தோடு அமர்ந்து பாடினாள். “காப மகரீஸாஸா நிரி ஸநிதா நித தா தநிஸ ஸாரிநி ஸா ஸநிதா ஸரிகாப மகரீஸாஸா நிரிஸநிதா நித தா…

அடிவேர்


வையவன் சிலர் ஊர்க் கோயிலோடு நின்று கொண்டார்கள். சிலர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டார்கள். சிலர் தான் ரயில் நிலையத்திற்கு வந்தவர்கள். ஒருவர் குமரவேல் ஆசாரி. அவர்தான் தாளக்கட்டை போடுகிறவர். குள்ளமாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட முழி. அடுத்து மொட்டையப்ப கவுண்டர். எப்பவோ ஒரு கச்சேரியில் பாலக்காடு மணி ஐயர் வாசிப்பைப் பார்த்து விட்டுத் தன்னை ஓர்ஏகலைவனாகப் பாவித்துக் கொண்டு தலையை உருட்டு உருட்டென்று உருட்டுகின்ற ஆசாமி. அவர்தான் மிருதங்கம். தடவித் தடவி ஆன மொட்டை போல சதா…