மங்கையர் திலகம்- 2


மங்கையர் திலகம்-  2 மேகலா ராமமூர்த்தி http://wp.me/P4Uvka-iM  போரிலே பகைவர்களையெல்லாம் பந்தாடிக்கொண்டிருந்த கலிப்பகையைப் பகைவர்கள் சிலர் சூழ்ச்சியான முறையில் கொன்றுவிட்டனர் என்ற செய்தி திலகவதியின் காதில் இடியாய் இறங்கியது; உடனே, அடியற்ற மரம்போல் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்தாள். அவள் கட்டிய மனக்கோட்டைகள் அனைத்தும் சரிந்து அவள்மீதே விழுந்திருந்தன. ’பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ எனும் பழமொழிக்குத் திலகவதியின் வாழ்க்கையினும் விஞ்சிய சான்றில்லை என்று அனைவரும் வேதனையோடு பேசிக்கொண்டனர். *************************** Advertisements

மங்கையர் திலகம் – 1


மறுபகிர்வு:  நன்றி: வல்லமை மின்னிதழ் மங்கையர் திலகம் – 1 மேகலா ராமமூர்த்தி http://wp.me/P4Uvka-ie வயல்களும் வாவிகளும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் எழில் கொஞ்சும் ஊர் ஒன்று இருந்தது; அதன் பெயர் திருவாமூர். அங்கே வேளாளர் குடியைச் சேர்ந்த, சிவபக்தியிற் சிறந்த புகழனார் மாதினியார் என்ற இணையர் வாழ்ந்து வந்தனர். ’உடம்பொடு உயிரிடையென்ன’ (உடலும் உயிரும் போல) கருத்தொருமித்துக் காதலோடு வாழ்ந்த அவ்விருவரின் இல்லறத்தை மேலும் இனிமையாக்கப் பெண் மகவு ஒன்று பிறந்தது.  அக்குழந்தையின் தெய்வீக அழகு…

நின்னினும் நல்லன்!


மறுபகிர்வு: (நன்றி:  வல்லமை) நின்னினும் நல்லன்! மேகலா ராமமூர்த்தி http://wp.me/P4Uvka-hy  நண்பர்களே! காலஎந்திரத்தில் பயணித்துப் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னே செல்வோமா…(கற்பனையில்தான்!) நாம் இப்போது தஞ்சைக்கு அருகிலுள்ள ’வெண்ணிப் பறந்தலை’ எனும் இடத்திற்கு வந்துவிட்டோம். அதோ அங்கே பாருங்கள்! அங்கே போர்க்களம் ஒன்று காட்சியளிக்கிறது; கடும்போர் ஒன்று இப்போது அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம். வாள்களோடு வாள்களும் வேல்களோடு வேல்களும் மோதி உண்டாக்கும் ஒலியும், வெயிலில் மின்னும் அவற்றின் ஒளியும், இடியும் மின்னலும் தரைக்கு இறங்கி வந்துவிட்டதாகவே தோற்றம்…

ஆருத்ரா தரிசனம்


ஆருத்ரா தரிசனம் மேகலா ராமமூர்த்தி http://wp.me/P4Uvka-fR   சிவனுக்குரிய விசேட நாட்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளாகும். ‘ஆருத்ரா’ என்று வடமொழியில் அழைக்கப்படும் இத்திருவாதிரை நட்சத்திர நன்னாளில் சிவனைத் தரிசிப்பதே ’ஆருத்ரா தரிசனம்’ எனப்படும். சோதிடத்தில் நாள்மீன்கள் என்று அழைக்கப்படுகின்ற நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தேழாகும். இவற்றில் ’திரு’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவை திருவாதிரை, திருவோணம் எனும் இரு நட்சத்திரங்களே. இவ்விரண்டில் ஆடல்வல்லானான சிவபெருமானுக்குகந்த நட்சத்திரம் திருவாதிரை; அமரரேறான திருமாலுக்குகந்த நட்சத்திரம் திருவோணம் என்பது…