கலித்தொகை கதைகள் – 10


முனைவர் ஜ. பிரேமலதா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
நானும் உனக்கு உறுதுணையாக இருக்கிறேன். உன்பொருட்டு நானும் சிந்தித்தேன். அவனே உனக்கு ஏற்ற மணவாளன் என்று உணர்ந்தேன். இனியும் யோசிக்கவேண்டியிருந்தால் நாம் இருவருமே கலந்துபேசி ஐயம் தீர்த்துக்கொள்வோம். அவனை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன். இனி யோசிப்பதிலே பயனில்லை; தயங்காதே. உன் காதலை அவனிடம் எடுத்துரைத்து மகிழ்ச்சியோடிரு!

Advertisements

கலித்தொகை கதைகள் – 9


முனைவர் ஜ. பிரேமலதா
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . .
நாகத்தைப் போலவும், சிறுகுடிமக்கள் போலவும் தலைவியும் அஞ்சி நடுங்கி துயில்கொள்ளாது துன்புற்று வருந்துகிறாள். இங்கு அவளைத் துன்புறுத்துவது, உன்னுடைய திருமண முயற்சியின்மையே! உங்களுடைய களவு வெளிப்பட்டதால் தாயும் இடிபோல் முழங்கி அவளைஅச்சுறுத்துகிறாள்.

கலித்தொகை கதைகள் – 8


உன்மீதுகொண்ட காதல்நோய் ஒருபுறம் அவளை வாட்டுகிறது. மறுபுறம் ஊராரின் அலர் அவளைத் துன்புறுத்துகிறது. எனினும், தன்னுடைய வருத்தத்தை அவள் என்னிடம்கூடச் சொல்லவில்லை. திருமண நினைவின்றி கனவிலேயே வாழநினைக்கும் உன் பண்புகெட்ட தன்மையைப் பிறர் அறியாதபடி அவள் மறைத்த காரணம், உன்னைப் பிறர் இகழ்வார்களோ என்ற நாணத்தினால் அன்றோ? இத்தகைய அரியபண்புடைய தலைவியின் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தே நீதான்.

கலித்தொகை கதைகள் — 7


முனைவர் ஜ. பிரேமலதா
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே… கண்ட போதே சென்றன அங்கே…
தோழியும் அதுபோலவே உரக்கப் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியும், கேட்கவேண்டிய தலைவனின் காதில் தன்பேச்சு சென்று விழுமென்று. மறைவில் நிற்கும் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கும் தோழி அவனுக்கும் நன்கு கேட்குமாறு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். தலைவனும் இதனைக்கேட்டு விரைவில் வந்து தலைவியை மணமுடிக்கக் கருதியிருப்பான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

சங்ககாலத்தில் போரும் அமைதியும் பாகம் – 2


சங்ககாலத்தில் போரும் அமைதியும் பாகம் – 2 பகை என்னும் பெரு நோய் முனைவர் ஜவஹர் பிரேமலதா http://wp.me/P4Uvka-eU   இரு அரசுகளுக்கிடையே ஏற்படும் பகையை ‘நோய்’ என்கிறார் (851) வள்ளுவர். அதுவும் எத்தகைய நோய்? ஒருவரது பண்பையே அழிக்கும் பெருநோயாகும். இந்த நோய் பகை கொண்டவரின் பண்பை மட்டுமா அழிக்கும்? மனிதர்களின் உண்மை குணத்தையே அழிக்கும் நோயாகும். ‘பகை’ தன்னைக் கொண்டவரை மட்டுமன்றி , அவரது சுற்றத்தைப் பாதித்து , மக்களைப் பாதித்து, இன்னொரு நாட்டு மன்னனையும்…

சங்க காலத்தில் போரும் அமைதியும் -1


முனைவர் ஜ.பிரேமலதா http://wp.me/P4Uvka-8h   போரை விரும்புபவர்களை ஆதரிப்பவர்களை இந்த உலகம் விரும்புமா? உண்மையில், மனிதர்களை கொன்று குவிக்கும் போரை நல்ல உள்ளம் படைத்தவர்கள்   யாரும் விரும்ப மாட்டார்கள். தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகின்ற புறநானூறு போர் குறித்த ஒரு நூல்தான் என்றாலும், சிறந்த அறநூலாகவும் திகழ்ந்து வருகிறது. பழந்தமிழர்களின் போர்களையும், வீரத்தையும், கொடையையும், விருந்தோம்பல் பண்பையும் கூறுகின்ற நூலாக இருந்தாலும்,  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற, மக்கள் நலனைப் பாதிக்கின்ற போரே வேண்டாம் என்று பல அறவுரைகளையும்…

துவர்ச் சுண்ணம்


முனைவர் ஜவஹர் பிரேமலதா http://wp.me/P4Uvka-5e கட்டுரையைப் படிக்க மேலே கொடுத்துள்ள லிங்கைச் சொடுக்கவும். தற்காலத்தில் குளிக்கும் சோப்பு வகைகளுக்குப் பஞ்சமேயில்லை. டி.வி. யைத் திறந்து வைத்து உட்கார்ந்தால் ஏராளமான வண்ண வண்ண சோப்பு விளம்பரங்கள். உண்மையிலேயே அவை நிறத்தை வெளுக்கின்றனவா எனத் தெரியவில்லை. சரி பழங்காலத்தில் பெண்கள் எதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என யோசித்ததில்… ..அக்காலப் பெண்கள் பெரும்பாலும் ஆற்றிலோ,குளத்திலோ, அருவியிலோ நீராடியதாக ஏராளமான குறிப்புகள். அவ்வாறு நீராடும் பொழுது ‘துவர்’ என்றழைக்கப்படும் நறுமணப்பொருளைப் பூசி நீராடியதாக இலக்கியங்கள்…

பட்டு


பட்டு  பேராசிரியை ஜவஹர் பிரேமலதா http://wp.me/P4Uvka-4Z கட்டுரையைப் படிக்க மேலே சொடுக்கவும்.      பருத்தி நூலிலிருந்து பல்வேறு தொழிலுக்குரிய கயிற்றையும், ஆடையையும் உருவாக்கிய தமிழர்கள் பட்டை மிகக் குறைவான அளவிலேயே பயன்படுத்தியுள்ளனர். கலித்தொகைப் பாடல் ‘உலண்டு’ எனப் பட்டுப் பூச்சியைக் குறிக்கிறது.                 சீனா ‘பட்டின் தாயகம்’ என அழைக்கப்படுகிறது. கி.மு. 3000 ஆண்டுகளிலிருந்தே சீனா பட்டு ஆடைகளை உற்பத்தி செய்து வருவதாக வரலாறு கூறுகிறது. அவர்களுக்கு இணையாகத் தமிழரும் பட்டுப்பூச்சிக் கூட்டைச் சூடான நீரில்…

மகளிர் அணி(கலன்)களும் – குதிரை அணி(கலன்)களும்


முனைவர் ஜவஹர் பிரேமலதா http://wp.me/P4Uvka-3J கட்டுரையைப் படிக்க மேலே கொடுத்துள்ள லிங்கைச் சொடுக்கவும்.      பரத்தையிடம் சென்று மீண்ட தலைவன், தலைவியிடம் அதை மறைத்து “குதிரை ஏற்றம்” சென்று வந்ததாகக் கூறுகிறான். அவன் பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், தலைவி, “நீ ஏறிய குதிரையைப் பற்றி நான் நன்கு அறிவேன். அது  நீ விரும்பும் பரத்தை தான்!” எனக்கூறி குதிரையைப் பரத்தையாக உவமித்து பல பொருத்தங்களைப் பட்டியலிட்டு உண்மையை வெளிப்படுத்துகிறாள். அவ்வாறு வெளிபடுத்துமிடத்து குதிரை அணிந்துள்ள அணிகலன்களைப்…